.தர்ப்பண புண்ய காலம் மற்றும் ஶ்ராத்த திதி நிர்ணயம் விதிமுறைகள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா ?
Vidwan’s reply:
ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்தத்தின் அனுபந்தத்தில் இதைப் பற்றிய பல விஷயங்களை அறியலாம்.
பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமா அல்லது மலையாள, சேரகுலவல்லி போல் ஒரு நாச்சியாரா?
ஸ்ரீதேவியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரா ?
Vidwan’s reply:
பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அவதாரம் ஆவார்.
மேலும் ஸ்ரீதேவியும், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரே. வேதத்தில் இரண்டு பெயரும் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீ வராஹ அவதாரம், வராஹம் தண்ணீரில் நீஞ்சுமே அல்லாது மூழ்க முடியாது, ஸ்ரீ வராஹ அவதாரத்தால் முடியும் என்று வைத்துக் கொண்டாலும் ஸ்ரீ வராஹப் பெருமானுக்கு ஏன் கோரைக்கிழங்கு நைவேத்யம் ஆகிறது, இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், தந்தவக்ரன் ஆகிய சகோதரர்களை ஒரே அவதாரத்தில் வென்றுகொன்றபோது ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு ஆகிய சகோதர்களைக் கொல்ல மட்டும் இரண்டு அவதாரம் ஏன்? அவர்கள் சகோதரர்கள் இல்லாமல் இருந்தாலும் இருவர் பெயரிலும் ஹிரண்ய என்ற சொல் வருவதேன்?
Vidwan’s reply:
முதலில் அவர் சாதாரண வராஹம் கிடையாது, அவர் பெருமாள், மஹாவராஹன். “குஹனா போத்ரி” என்று ஸ்வாமி தேஶிகன் சாதிக்கிறார். சாதாரண வராஹன் போல் அல்லாமல் இவருடைய ஸாமர்த்யமே தனி.
ஸ்வாமி தேஶிகனே பூ ஸ்துதியில்
“வ்யோமாதிலங்கி4நி விபோ4: ப்ரளயாம்பு3ராஶௌ
வேஶந்தலேஶ இவ மாதுமஶக்யமூர்தே: |” என்று சாதிக்கிறார்.
அதாவது மஹாவராஹத்தின் பரிமாணம் எவ்வளவு பெரிது என்றால், அந்த ப்ரளய ஜலமானது ஒரு குட்டைபோல் ஆகிவிட்டது. ஆகையால் அவர் மூழ்க வேண்டும் என்ற அவசியமும் ஏற்பட்டிருக்குமோ என்றே தெரியவில்லை. அவர் மிகப்பெரிதான மூர்த்தியாய் இருந்தால் அநாயாஸமாய் பூமி தேவியைக் காப்பாற்றினார்.
ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு இருவரும் திதியின் பிள்ளைகள். அவ்விருவரும் சகோதரர்களே. ஏன் இரண்டு அவதாரம் என்றால், இவ்வுலகத்திற்கு இரண்டு விதமான அனுபவங்களைத் தரவேண்டியே. வராஹ அவதாரம் எடுத்து பிராட்டி மூலம் வராஹ புராணத்தையும், பல உபாயங்களையும், வராஹ சரம ஶ்லோத்தையும் சொல்வதற்காக ஒன்றும். அடுத்து பக்தர்களின் கூக்குரலுக்கு உடனே இரங்கி வந்து பக்த வாத்ஸல்யத்தைக் காட்ட ஒன்றும் என இரண்டு ரசமான லீலைகள் செய்து இரண்டு ப்ரதான குணங்களைப் பக்தர்களுக்குக் காட்ட எம்பெருமான் இரண்டு அவதாரங்களை எடுத்தார் என்று தோன்றுகிறது.