ஸ்வாமி தேசிகனின் நவமணிமாலையில், “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….” என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருக்கும், அம்மாணை, ஊசல் ஏசல் பரவு என்பது என்ன அடியேன்?
Vidwan’s reply:
ஸ்வாமி தேசிகன் சாதித்த நவமணிமாலையில் கடைசியில் வரும் “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….”வரியில் உள்ள “பரவு” என்ற சொல்லுக்கு, அனைவராலும் கொண்டாடப்படக்குடிய (பரவுகின்ற) நவமணிமாலை என்று வ்யாக்யானத்தில் இருக்கிறது.
பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல் என்ற 5 ப்ரபந்தங்களும் லுப்தம்; நவமணிமாலை மட்டும் நமக்கு இன்றளவும் கிடைக்கின்றது.
ஒரு உபந்யாஸத்தின் மூலம் கார்யவைகுண்டம் என்று ஒன்று இருப்பதாக அறிந்துகொண்டேன். அப்படியென்றால் என்ன? முமுக்ஷூக்கள் அங்கே செல்வார்களா?
Vidwan’s reply:
கார்ய வைகுண்டம் என்பது ஸ்ரீவைகுண்டம் போலவே ஒரு கார்யத்திற்காக அப்படியொரு இடத்தை எம்பெருமான் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அது லீலா விபூதியில் இருக்கிறது, நித்ய விபூதியில் அல்ல. சில விசேஷ சக்தியுடைய தேவர்களோ, பக்தர்களோ அங்குப்போய் எம்பெருமானைச் சேவிக்கும்படியான அனுக்ரஹத்தைக் கிடைப்பத்தற்காக ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
குறிப்புகள்:
இதை எவ்வாறு புரிந்துகொள்வதென்றால், திருமலையில் திருவேங்கடமுடையான் சேவைசாதிக்கிறான். ஆனால் அவரைப் போலவே பல ஊர்களில் TTD மூலமாக ஏற்படுத்தப்பட்ட திருக்கோயில்களில் அவன் சேவைசாதிக்கிறான். இவையெல்லாம் TTD Office என்பதில் சேவைசாதிக்கும் திருவேங்கடமுடையானாவான். ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் எம்பெருமான் திருமலையில் எழுந்தருளியிருப்பவர் போல், அதே கார்யவைகுண்டத்தில் இருக்கும் எம்பெருமானோ TTD கார்யாலயத்தில் சேவைசாதிக்கும் திருவேங்கடவன் போலேயாகும்.
இக்கார்ய வைகுண்டம் என்பது ஸ்ரீவைகுண்டம் போலவே ஒரு ப்ரதிபிம்பமாகும், அங்கு இருப்பது போலேயே எம்பெருமான் அமைத்துக்காட்டுவார். ஆனால் அது ஶுத்தஸத்வ மயமானதல்ல, த்ரிகுணாத்மகமானது, ப்ரக்ருதி மண்டலத்தைச் சேர்ந்ததுதான். மும்மூக்ஷூக்கள் கார்ய வைகுண்டத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை படமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் மோக்ஷத்தில் ஆசை கொண்டவர்கள். மோக்ஷம் என்பது ஸ்ரீ வைகுண்ட ப்ராப்திதான்.ஆகையால் கார்யவைகுண்டத்தில் அவர்களுக்குக் கார்யமில்லை.
யாரால் ஸ்ரீவைகுண்டம் போகயிலவில்லையோ அவர்கள் போவார்கள். லீலா நிமித்தமாக யாராவது அங்கு வந்து கைங்கர்யம் பண்ணும்படியாக இருந்தால் அவர்கள் அங்கு பண்ணுவார்கள்.
ஸ்வாமி தேஶிகன் அருளிய பாதுகா ஸஹஸ்ரத்தில் ஶ்வேத தீபம் என்று ஒன்று வருகிறது. அது எங்கே இருக்கிறது? அந்த ஶ்லோகத்தின் அர்த்தவிசேஷம் என்ன?
Vidwan’s reply:
ஶ்வேத தீபம் என்பது திருபாற்கடல் அதாவது க்ஷீராப்தியின் நடுவே இருக்கின்றது. இங்கே இருக்கின்றவர்கள் அனைவருமே ஸ்ரீ வைஷ்ணவர்கள், எப்போதும் எம்பெருமானையே சேவித்துக்கொண்டிருப்பவர்கள் அப்படிப்பட்ட அத்புதமான தீபம். அந்த ஶ்லோகத்தின் அர்த்தவிசேஷம் என்னவென்றால், ஸ்ரீரங்கத்தை ஶ்வேத தீபம் என்று ஸ்வாமி தேஶிகன் குறிப்பிட்டிருப்பார். அதாவது நான்கு பக்கமும் காவேரி, நடுவே ஸ்ரீரங்கம் என்ற தீபம், திருப்பாற்கடலில் இருப்பது போலே சயனத்திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேலும் இங்கே நிறைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் வசித்து வருகின்றபடியாலும் ஸ்ரீரங்கம் ஶ்வேத தீபம் போல் இருக்கிறது என்று வர்ணிக்கிறார்.
18 புராணங்கள் இருக்க ஏன் 6 மட்டும் ஸாத்வீக புராணமாகுகிறது. மற்ற புராணங்களை எம்பெருமான் நினைத்தால் மறையச் செய்திருக்க முடியும் அல்லவா? அப்படி ஒரு நிலை இருந்தால் அனைவரும் விஷ்ணு பக்தர்களாகி ஸத்கதி அடையும் வழியும் கிட்டியிருக்குமே. ஏன் அப்படிச் செய்யவில்லை?தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.
Vidwan’s reply:
18 புராணங்களில் 6 மட்டும் ஸாத்வீக புராணம் என்பதைப் புராணமே சொல்லுகிறது. மற்ற புராணங்களை ஏன் மறையச் செய்யவில்லை என்றால், ஜனங்கள் பலருக்கு பலவிதமான் ருசியிருக்கும், அவரவருக்கு எது பிடித்ததோ அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்பதால். மேலும் ஒன்று பெருமாளைச் சேவிக்கட்டும் இல்லாவிட்டால் நாஸ்தீகனாக போகட்டும் என்று எம்பெருமான் அவர்களை விடாமல், எந்தத் தெய்வத்தை பிடித்திருக்கிறதோ அந்தத் தெய்வத்தைச் சேவித்து அவர்கள் தரும் பலனை அனுபவிக்கவும், அதாவது வேதத்திலேயே அனேக தெய்வங்கள் பற்றியும் பல யாகங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறது. மேலும் அனைவரும் பர தத்துவத்தைப் பற்றி உணர்வார்கள் என்று சொல்லமுடியாத காரணத்தினாலும், அவர்கள் நாஸ்தீகர்களாகப் போய்விடாமல் இருக்கவும், அவர்கள் பிற்காலத்தில் பர தத்துவத்தை உணரும்படி மாறாலம் என்பதாலும், அவர்களின் ஆஸ்தீக எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல தெய்வங்களை நம் ஸம்ப்ரதாயத்தில், ஶாஸ்த்ரங்களில் எம்பெருமான் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்.
ஏன் திருவாறாயிரப் படி ப்ரதானமாக வடகலையார் ஸம்ப்ரதாயத்திற்கு இருக்கிறது. ஸ்வாமி தேஶிகன் ஏனைய வ்யாக்யானத்தை அவரின் க்ரந்தங்களில் குறிப்பிட்டுள்ளாரா?
Vidwan’s reply:
திருவாறாயிரப்படி என்பது பகவத் இராமானுஜர், பிள்ளானைக் கொண்டு சாதித்த க்ரந்தம். அந்தப் பிள்ளான் பரம்பரை என்பது வடகலையார் பரம்பரை. காலக்ஷேபத்தில் பார்த்தால் பிள்ளான் சிஷ்யர் என்பவர் எங்களாழ்வான், நடாதூர் அம்மாள் என்று வரும். தென்னாசார் ஸம்ப்ரதாயத்தில் பிள்ளான் பரம்பரை வராது, அவர்களுக்கு எம்பார், பட்டர் பரம்பரை, முதலியாண்டான் பரம்பரை என்று அவர்களிடம் இருக்கு.
அந்தத் திருவாறாயிரப்படிக்கு ஒரேயொரு ஓலைதான் இருந்தது (பிள்ளான் எழுதியது). அதை பகவத் இராமானுஜர் அவரிடமே கொடுத்துவிட்டு சிம்மாசனாதிபதியாக நியமித்திருக்கிறார். ஆகையால் அந்தப் பரம்பரையில் வந்த ஸ்வாமிதேஶிகனுக்கு அது ப்ராப்தமாகியிருக்கிறது. அதே சமயம் ஒரேயொரு ஓலை மட்டுமே இருந்தபடியாலும் அது தென்னாசார் ஸம்ப்ரதாயத்தாருக்குக் கிட்டாதபடியாலும் 9000 படி போன்றவற்றைப் பண்ணவேண்டி வந்தது.
ஸ்வாமிதேஶிகன் 9000படி, 24000படி ஆகியவற்றை விசேஷமாக நிர்தேசம் பண்ணியதாகத் தெரியவில்லை. அவர் சாதித்த நிகமபரிமளம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வேறு சில இடங்களில் திருமாலை வ்யாக்யானம் போன்றவற்றில் பெரியவாச்சான் பிள்ளை இப்படிச் சாதித்திருக்கிறார் என்று அவரின் வ்யாக்யானத்தை எடுத்திருக்கிறார்.