சர்வதேச யோகா தினத்தன்று sudarsanam GSPK groupஇல் ‘மன அழுத்தத்திற்கு ஸ்வாமி தேசிகன் தெரிவிக்கும் அரிய மருந்துகளில் ஒன்று யோகா ‘ என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதில் முன்பு வெளியிடப்பட்ட சுதர்சனத்தின் கேள்வி பதில்(Q16JUL21003) ஒன்றும் பகிரப்பட்டது. இதை ஸ்வாமி தேஶிகன் எந்த க்ரந்தத்தில் சாதித்துள்ளார் என்பதை கூற ப்ரார்த்திக்கிறேன். தாஸன்
Vidwan’s reply:
“ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷா” என்ற க்ரந்தத்தில் நித்யமே யோகா என்று, அதாவது இராத்ரி வேளையில் யோகம் பண்ணுவது பற்றி ஸ்வாமி தேஶிகன் ஸாதித்திருக்கிறார்.
தாத்பர்ய சந்த்ரிகையிலும் யோகம் பற்றிய குறிப்புகள் இருக்கிறது.
கருடபஞ்சாஶத் சந்தை வகுப்புக்கு ஏதேனும் தகுதி வேண்டுமா? அப்படியில்லை என்றால் தங்கள் SampradayaManjari YouTube Channelலில் santhai videoவாக பதிவிடவும், முடிந்தால் சந்தை வகுப்பு ஆரம்பிக்கவும்.
Vidwan’s reply:
கருடபஞ்சாஶத் ஸ்தோத்ரம் ஆனபடியால் சந்தை கற்க பெரியளவில் தகுதியெல்லாம் வேண்டாம். சற்று கடினமானபடியால் சிறிது கவனத்துடன் சந்தை வகுப்பில் கற்கவேண்டும்.
GSPKயில் முன்னமே இதை சந்தையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்த சந்தை பாடத்தின் சந்தை recording link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தாங்கள் கற்றுக்கொள்ளலாம்.
https://drive.google.com/drive/folders/1xSz2Szw9sNXuz6bZniKteHRsbfb8n14v?usp=sharing
அலுவலகத்தில் சந்திக்கும் இடர்களைப் போக்கவும், வேலையில் உயர்வு பெறவும் என்ன ஶ்லோகம் சேவிக்கலாம் என்று வழிகாட்டவும்.
Vidwan’s reply:
அலுவலகத்தில் சந்திக்கும் இடர்களைப் போக்கவும், வேலையில் உயர்வு பெறவும் ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி போன்ற ஶ்லோகங்கள் சேவிக்கலாம் என்று தோன்றுகிறது.