பரிபாஷை என்றால் அழகிய பாஷை என்று பொருள். இதில் பரி என்பது ஒரு உபசர்கம் அதாவது பெருஞ்சிறப்பு உடைய பாஷை.
ஸ்ரீ வைஷணவ ஸ்வரூபத்துடன் நாம் வாழ பரிபாஷையில் சம்பாஷனைம் செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.
பரிபாஷை நம் பேச்சுவழக்கானால், எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாக இருக்கும். ஏனென்றால் பாகவதர்கள் ஒருவரையொருவர் அடியேன் என்று அழைத்தலும். அடியார்கள் மரியாதையுடன் கலந்துரையாடினால் எம்பெருமான் திருவுள்ளம் உகப்பார்.
இந்த ஸத்சம்ப்ரதாயத்தில் மரியாதையுடன் வார்த்தைகள் உபயோகிக்க வேண்டும்.
இனி வரும் இதழ்களில் பரிபாஷையின் வார்த்தைகள் ஒவ்வொன்றாக அறிந்துகொண்டு, நாமும் எம்பெருமானின் உகப்பை பெற முயற்சிப்போம். இவ்வார்த்தைகள் பற்றிய விளக்கமறிய கீழே உள்ள காணொளியை பார்க்கவும்