பங்குனி உத்திரம் திருநாள் அன்று எம்பெருமானார் கத்யத்ரயம் சேவித்து பெரிய பெருமாளிடம் ப்ரபத்தி செய்துகொண்டார் என்று நம் பெரியோர்கள் கூறி அடியேன் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு ஆசார்யனின் சம்பந்தத்துடன்தானே இக்காலத்தில் நாம் ப்ரபத்தி செய்துகொள்கிறோம். அவ்வாறு இருப்பின் எம்பெருமானார் எவ்வாறு தன் ஆசார்யன் அருகில் இல்லாதபோது தானாகவே ஶரணாகதி செய்து கொண்டார்? இதை எவ்வாறு சரியாக புரிந்துகொள்வது? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.
Vidwan’s reply:
கத்ய த்ரயம் சேவிக்கும் போது எம்பெருமானார் ஶரணாகதி பண்ணவில்லை. கத்ய த்ரயம் சேவிக்கும்போது தான் முன்பே செய்த ஶரணாகதியை அனுசந்தித்துக் காட்டுகிறார் என்பது மட்டும்தான். இதை ஸ்வாமி தேஶிகன் கத்ய பாஷ்யத்தில் காட்டியுள்ளார்.