சுபகிருது – ஆவணி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


த்யாகராஜ ஸ்வாமி ஸ்ரீராம பக்தர் மற்றும் ஸ்ரீராமனை ஆராத்ய தெய்வமாகக் கொண்டவர் என்று அவரின் கீர்த்தனைகள் மூலம் அறியலாம். இருப்பினும் “மோக்ஷமு கலதா” எனும் கீர்த்தனையில் சரணத்தில் “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்று சிவனிடம் மோக்ஷம் கேட்பது போல் தெரிகிறதே? ஸ்ரீராமனிடம் பக்தி கொண்டவர் சிவனிடம் எதற்காக மோக்ஷம் கேட்கவேண்டும்? ஒரு வேளை ஸ்ரீராமனை சிவனாக பாவித்து பாடியுள்ளார் என்று புரிந்து கொள்வதா? விளக்க ப்ரார்த்திக்கிரேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும்.

Vidwan’s reply:

த்யாகராஜ ஸ்வாமி அவசியம் ஸ்ரீராம பக்தர் தான். இந்த இடத்தில் சிவனிடத்தில் மோக்ஷம் கேட்கிறார் என்று நினைக்க வேண்டாம். “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்ற சரணத்தில் வரும் சிவன் என்ற திருநாமம், இராமனை, ஸ்ரீமந் நாராயணனைதான் குறிக்கும் என்று புரிந்துகொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே “சிவ” என்ற திருநாமம் உண்டு, அதாவது மங்களத்தை அளிக்கக்கூடியவர் என்பதாகும். மேலும் எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தன் தலையில் தரித்ததனால் அவருக்கு மங்களம் ஏற்பட்டு பிக்ஷாடனன் என்ற பெயர் மாறி சிவன் என்ற பெயர் ரூடியாக வந்துவிட்டது.

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே “சிவ” என்ற திருநாமம் வருகின்றபடியால் இங்கே இந்தப் பெயர் இராமனையே குறிக்கும் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.


ஆண்டாளின் திருக்கல்யாணம் (நாச்சியார் திருமொழிப்படி) என்று நடந்தது? திருப்பாவைக்குப் பின் தையொரு திங்கள் என்று பாடுகிறாள் அப்படியானால் ஏன் நாம் போகியன்று ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடுகிறோம். Vidwan’s reply:

ஆண்டாளின் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தன்றுதான் நடந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆனாலும் நாம் போகியென்று ஏன் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடுகின்றோம் என்றால், திருப்பாவையின் பூர்த்தி என்பது மங்களகரமான முடிவு, அதாவது “எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்” என்று ஆண்டாள் பாடினார். அவள் பெற்ற திருவருள் எம்பெருமானுடன் திருக்கல்யாணம் புரிந்தது. அந்தத் திருவருளை நாம் அனுபவிக்கும்படியாக திருப்பாவையின் பலஶ்ருதியாக ஆண்டாள் திருக்கல்யாணம் போகியன்று நடக்கிறது.


எம்பெருமாளின் ஹம்ச அவதாரமும், ஹயக்ரீவ அவதாரமும் ஒன்றா? ஹயக்ரீவ காயத்ரியில் ஹம்சம் என்ற பெயர் வருகிறதால் எழுந்த சந்தேகம்.

Vidwan’s reply:

எம்பெருமாளின் ஹம்ச அவதாரமும், ஹயக்ரீவ அவதாரமும் வெவ்வேறுதான். ஹயக்ரீவ அவதாரத்தில் வேதங்களை மீட்டுக்கொடுத்தார். ஹம்ச அவதாரத்திலே வேதார்த்தங்களை உபதேசம் செய்தார் என்று இருக்கிறது.

ஹயக்ரீவ காயத்ரியில் ஹம்சம் என்ற பெயர் இருக்கலாம் பரவாயில்லை.


திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று கேள்விப்பட்டேன். இது சரியா? இந்த ஸ்துதி தேஶிக ஸ்தோத்ரமாலாவில் இல்லாததால் இந்தச் சந்தேகம். அடியேன்

Vidwan’s reply:

திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று சில மஹான்கள் சொல்லுகிறார்கள். இந்த ஸ்திதி ஸ்ரீ தேஶிக ஸ்தோத்ரமாலா மட்டுமல்ல, தேஶிக வைபவத்தில் எந்த ஒரு தேஶிக க்ரந்தத்திலும் இல்லை.

ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி அனைவரும் அனுசந்தானம் பண்ணலாம்.

குறிப்புகள்:

ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த எத்தனையோ க்ரந்தங்கள் நமக்கு கிடைக்காமல் இருக்கிறது, மேலும் நம் சிற்றறிவுக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது, எத்தனையோ விஷயங்களில் சந்தேகங்கள் இருக்கிறது அப்படி இது சந்தேகமாக இருப்பதில் தவறில்லை. சந்தேகமாகவே இருக்கட்டும்.


என் மகன் தவறாமல் நித்யகர்மானுஷ்டானங்கள் செய்துவருகிறான். அவனுக்கு எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய, எந்த ஶ்லோகம் / பாசுரம் சேவிக்க வேண்டும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய ஸ்ரீஸூக்தம், ஸ்ரீ ஸ்துதி போன்றவற்றைச் சேவிக்கலாம் எனத் தோன்றுகிறது

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top