சுபகிருது – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வரப்போகும் சந்திர க்ரஹண (நவம்பர் 8ஆம் தேதி) தர்ப்பணம் பற்றிய சந்தேகங்கள்

1. சந்திரன் தெரிந்த பின்னர் தர்ப்பணம் செய்ய வேண்டுமா? அல்லது முழு ஸ்பர்ச நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டுமா?

2. சந்திரம் தெரிந்த பின்னர் தர்ப்பணம் என்றால், க்ரஹண காலம் முடிந்த பின்னர் என்று புரிந்துகொள்வதா?

3. மேலும் மேக மூட்டம் இருந்தால் சந்திரனைப் பார்க்க இயலாமல் போகும். அப்போது என்ன செய்ய வேண்டும்

Vidwan’s reply:

சந்திர க்ரஹணத்தில், மத்யம காலத்திற்குப் பின் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பது பொது விதி. க்ரஹணம் இரவு சம்பவித்தால் அதுபோல் செய்யலாம்.

வரும் நவம் 8ஆம் தேதி நடக்கவிருக்கும் சந்திர க்ரஹணத்தின் மத்யம் காலம் சாயங்காலம் 4.30மணி. இந்தக்காலம் பகல் பொழுதிலேயே இருக்கிறது.

பகல் பொழுதில் சம்பவிக்கும் சந்திர க்ரஹணத்திற்கு புண்யகாலம் கிடையாது. ஆதலால், அந்தந்த ஊர்களில் அஸ்தமனகாலத்திற்குப் பிறகு, க்ரஹணம் முடியும் காலமான 6.19மணிக்குள் ஸ்நானம், தர்ப்பணம் போன்றவைகளைச் செய்யவேண்டும்.

க்ரஹணத்தில், க்ரஹண காலத்திலேயே தர்ப்பணம் செய்யவேண்டும். முடிந்தபின்னர் அல்ல.

மேகமூட்டமாக இருந்தாலும் பஞ்சாங்கமே ப்ரதானம், அதை அனுசரித்து க்ரஹணம் நடக்கின்ற காலத்தில் தர்ப்பணம் பண்ணவேண்டும்.நம்மால் பார்க்கமுடியவில்லை என்பது ப்ரமாணம் இல்லை, நமக்குத் தெரியாமல் கூடயிருக்கலாம். ஆகையால் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு அதன் ப்ரமாணமாகவே பண்ணவேண்டியது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top