வேதமே உண்மை! வேதங்கள் உண்மையே!
GSPKவின் ஸங்கோஷ்டீ 2022யின் பகுதியாக T20 என்ற தலைப்பில் நமக்கு மிகவும் தேவையான உபதேசங்களை வித்வான்கள் சுருக்கமாக ஸாதித்தருளினர். அதில் முதன்மையாக “வேதங்கள் உண்மையே!” என்று வில்லூர் நடாதூர் ஸ்ரீ உ வே சேனேஷ் ஸ்வாமி, சிறுவர்களுக்கும் புரியும் வண்ணமும், அவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல் பதியும்படியும் ஒரு கதையோடு வேதங்கள் உண்மையே என்பதை ஸாதித்தருளினார் அதில் சில இங்கே:
வேதம் – சனாதன தர்மத்தின் ஆணிவேர்
வேதங்கள் இவ்வுலகின் சுகங்கள் மட்டும் அல்லாது மோக்ஷ பர்யந்தம் வரை பெற்றுத்தரும்.
எத்தனை மதங்கள் வந்து எதிர்த்தாலும் வேதங்கள் உண்மையே! என்பதை நிரூபித்தனர் நம் பூர்வர்கள். அப்படி ஒரு மஹான்தான் குமாரில பட்டர்.
யார் அந்த குமாரில பட்டர்? அவர் என்ன செய்து வேதங்கள் உண்மையே! என்று நிரூபித்தார்? விவரமாக அறிய இங்கே உள்ள காணொளியைப் பார்க்கவும்
———–
இப்படிப்பட்ட வேதத்தின் மஹிமையை விரிவாய் நாம் அறிய, தாம் அரும்பாடுபட்டு ஆராய்ந்த வேத மஹிமைகளைப் பெரும் கருணையுடன் “மஹாவித்வான் நாவல்பாக்கம் ஸ்ரீ உ வே யஜ்ஞவராஹாசாரியார் (Dr.Kannan) ஸ்வாமி” அவர்கள் GSPKவில் ப்ரதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு உபந்யாஸத் தொடராக ஸாதித்து வருகிறார். அந்தக் காணொளிகளின் தொகுப்பு இங்கே.