சுபகிருது – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம்


சுமங்கலித்தன்மையுடன் இருக்க வேண்டி ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் உண்டா?

Vidwan’s reply:

சுமங்கலித்தன்மை நிலைத்து நிற்க ஸ்ரீகோ3தா3ஸ்துதினுடைய 22ஆவது ஶ்லோகம்

தூ3ர்வாத3ள ப்ரதிமயா தவ தே3ஹ காந்த்யா  

கோ3ரோசநாருசிரயா ச ருசேந்தி3ராயா:। 

ஆஸீத3நுஜ்ஜி2த  ஶிகா2வள கண்ட2 ஶோப4ம்  

மாங்க3ள்யத3ம் ப்ரணமதாம் மது4வைரிகா3த்ரம் ॥

மற்றும் லக்ஷ்மீஸஹஸ்ரத்தின் மங்க3லாக்2யஸ்தப3க த்தில் 12ஆவது ஶ்லோகம்

கந்யே து3க்3தோ4த3ந்வஸ்தாவகீநம்

மந்யே ரூபம் மங்க3லம் மங்க3லாநாம் ।

யத்ஸாவரண்யப்ராப்தபத்3ரா ஹரித்3ரா

ஸௌமங்க3ல்யம் ஸம்வித4த்தே வதூ4நாம் ॥

இந்த இரண்டு ஸ்லோகங்களையும் சேவிக்கலாம்.


பிள்ளை பிறந்து ஓர் வருடத்திற்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து 17 வருடம் ஆகிறது.புக்ககத்தில் மாமியார் ஶ்ராத்தம், இதர தர்ப்பணாதி கர்மானுஷ்டாத்தை விவாகரத்து ஆன ஸ்திரீ எந்த முறையிலாவது கடைபிடிக்க வேண்டுமா?அல்லது தேவையில்லையா? புக்காத்திலிருந்து எந்த ஜீவனாம்சமும் சொத்தும் பெறவில்லை.மேற்படி விஷயத்திற்கு அருள் கூர்ந்து பதில் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

விவாஹரத்து என்பது சட்ட ரீதியாகதான் உண்டே தவிர சாஸ்த்ர ரீதியாக கிடையாது. ஒரு ஸ்த்ரீ ஒரு புருஷனைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பின் ஆயுசுக்கும் அவள் அவனுடைய தர்மபத்னி தான். அது ஶாஸ்த்ர ரீதியாக மாற்ற முடியாது. சட்ட ரீதியாக விவாஹரத்து என்று இருந்தாலும் ஶாஸ்த்ர ரீதியாக அதை மாற்ற முடியாது. அதனால் விவாஹரத்தானவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன என்கின்ற விதிமுறை எல்லாம் சாஸ்திரத்தில் கிடையாது.

ஒரு ஸ்த்ரீயானவள் பர்த்தாவுடன் சேர்ந்து செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். அதுதான் சாஸ்த்ரம். அதையொட்டி இருக்கின்ற புக்ககத்து உறவுகளுக்கு ஏற்பட்ட கடமைகளையும் செய்ய வேண்டும். எப்போது அவள் தன் பர்த்தாவுடன் இல்லையோ, அப்பொழுதே அந்தச் சமயத்தில் மற்ற கடமைகள் , மற்ற கர்தவ்யங்கள் எல்லாம் அவள் பண்ண முடியாமல் போய் விடுகிறது. அது சரியா தவறான்னு கேட்டால், தவறுதான். விவாஹரத்து என்ற ஒன்று நடக்கிறதே தவறுதான். அது ஏற்பட்ட பக்ஷத்தில் அதுக்கு மேல வேற சிந்தனை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதுவே நடந்திருக்க கூடாது. அது நடந்துவிட்டது. அதனால் மற்றதைப் பற்றி யோசித்து என்ன பயன் என்று பதில் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top