ஸ்தோத்ரம், ஶ்லோகம், பாசுரம் என்றால் என்ன? ஏன் தனித்தனி பெயர்களிட்டு குறிப்பிடுகிறோம்.
Vidwan’s reply:
ஸ்தோத்ரம் என்பது ஸம்ஸ்க்ருத பாஷையில் ஏற்பட்ட எம்பெருமான் விஷயமான அல்லது பாகவதர்கள் விஷயமான துதியாக ஆகும். பொதுவாக இது கவிதை ரூபத்தில் அமைந்திருக்கும். ஒரு ஸ்தோத்ரத்தில் பல ஶ்லோகங்கள் அமைந்திருக்கும். ஶ்லோகம் என்பது ஸ்தோத்ரத்தினுடைய ஒரு பாகம். பிரிவு என்று புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் 33 ஶ்லோகங்கள் இருக்கின்றன.
ஜ்ஞாநாநந்த3மயம் தே3வம்
நிர்மலஸ்ப2டிகாக்ருதிம் ।
ஆதா4ரம் ஸர்வவித்3யாநாம்
ஹயக்3ரீவமுபாஸ்மஹே ॥
என்பது ஒரு ஶ்லோகம். இதே போல் 33 ஶ்லோகங்களை கொண்டது ஸ்ரீஹயக்ரீவஸ்தோத்ரம்.
ப்ரபந்தங்கள் என்பது தமிழில் ஏற்பட்ட எம்பெருமான் அல்லது ஆழவார்கள் விஷயமான துதி ஆகும். அந்த ப்ரபந்தத்தினுடைய ஒரு பாகம், பிரிவு தான் பாசுரம். தமிழில் அமைந்த கவிதை ரூபமான துதி பாசுரம் என்று கருதலாம்.