சுபகிருது – வைகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன்

Vidwan’s reply:
ஸ்த்ரீகள் கம்பராமாயணம் சேவிக்கலாம்.


பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன்

Vidwan’s reply:
ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது.


பண்டிகை, ஶ்ரார்த்தம் போன்ற நாட்களில் சுமங்கலி ஸ்த்ரீகள் குங்குமத்தினால் திலகம் இட்டுக்கொள்ள வேண்டுமா, ஸ்ரீசூர்ணத்தில் இட்டுக்கொள்ள வேண்டுமா, நெற்றிவகுடு துவக்கத்தில் குங்குமம் இட்டு கொள்வது ஸம்ப்ரதாயபடிச் செய்யலாமா.

Vidwan’s reply:
பண்டிகை, ஶ்ராத்தம் போன்ற நாட்களில் சுமங்கலிகள் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளவது உத்தமம். அந்த ஸ்ரீசூர்ணம் என்பது பொதுவாக சிகப்பு ஸ்ரீசூர்ணமாக இருக்கும். குங்குமத்தைக் குழைத்து இட்டுக்கொள்வதும் சிலர் வழக்கத்தில் உள்ளது.

திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளவது என்பது என்றைக்கு ஸமாஶ்ரயணம் ஆகின்றதோ அன்றைக்கு புண்ட்ர சம்ஸ்காரம் பண்ணும்பொழுது ஆசார்யாள் மஞ்சள் ஸ்ரீசூர்ணத்தையே இட்டு விடுவார்கள், அது அன்றைக்கு மட்டுமே என்று சொல்வார்கள். அதற்கு மேல் சிகப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ள சொல்வது வழக்கம்.

அதையே ஸ்த்ரீகள் கடைபிடிக்கலாம். சிகப்பு ஸ்ரீசூர்ணமோ அல்லது குங்குமமோ தினமும் இட்டுக்கொள்ளலாம்.

பண்டிகை, ஶ்ராத்தம் நாட்களில் அவசியம் இட்டுக்கொள்ள வேண்டும்.

அதே போல் வகிட்டில் துவக்கத்தில் குங்குமம் வைத்து கொள்ளவது தவறு கிடையாது. ஶாஸ்த்ரப்படி அதில் ஒன்றும் விரோதமில்லை. நேரடியாக வகிட்டு வரை ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டுவிட்டால் அந்தக் கவலையே கிடையாது. அப்படி ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளாமல் திலகம், பொட்டு வைத்துக்கொள்ளும் பக்ஷத்தில் வகிட்டில் குங்குமம் இட்டுக்கொல்வது வழக்கத்தில் இருக்கின்றது.


மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் ஆசார்ய உபதேசம் பெற்று தான் சேவிக்க வேண்டுமா? ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?

Vidwan’s reply:
சிலர் சேவிக்கலாம் என்றும், சிலர் சேவிக்கக்கூடாது என்கின்ற பக்ஷத்திலும் இருக்கின்றனர். அதனால் அவரவர் ஸதாசார்யர்கள் என்ன சொல்கின்றாரோ அதன்படி கேட்டு நடந்துகொள்வது உசிதம்.

எந்த ஒரு ஸ்தோத்ரத்தையோ அல்லது ப்ரபந்தத்தையோ சேவிப்பதாக இருந்தால் சந்தை சொல்லிக் கொண்டு சேவிப்பது சரியான முறையாக இருக்கும்.


என் மகளுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனை இருக்கிறது, இது குணமடைய வேண்டி எம்பெருமானிடம் ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் இருக்கிறதா?

Vidwan’s reply:
ஹார்மோன் ப்ரச்சனைகள் தீர்வடைய கருட பஞ்சாஶத்தை சேவிக்கலாம். கருட பஞ்சாஶத்தினுடைய பலஶ்ருதியில் எல்லா விதமான வியாதிகள், வியாதிகளுக்கு காரணமான மனசளவில் இருக்கின்ற பாதிப்புகள், இதனை ஆதி என்று சொல்வார்கள், இவை அனைத்தையுமே குணப்படுத்தக்கூடிய திறன் இந்த ஸ்தோத்ரத்திற்கு உண்டு என்று ஸ்வாமியே சாதித்திருக்கிறார். அதனால் கருட பஞ்சாஶத்தை சேவித்தால் அவசியம் நிவர்த்தி கிடைக்கும்.


ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணக்கூடாது என்று சுதர்சனம் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் ஆண்டவன் ஆஶ்ரமம் வெளியிட்டுள்ள ஸ்த்ரீ திருவாராதனம் செய்யும் முறையில் அனைத்து குறிப்பும் அதாவது ஸ்த்ரீகள் பெருமாளை தொட மந்திரம் உட்பட எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எதை பின்பற்றுவது என்று குழப்பமாக உள்ளது.

Vidwan’s reply:
ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணுவது என்பது வழக்கத்தில் இல்லை. புருஷர்களே தொட்டு ஆராதனம் பண்ணுவது வழக்கம்.

புருஷர்கள் அகத்தில் இல்லாத சமயங்களில் ஸ்த்ரீகள் சாளக்கிராமத்திற்குத் தளிகை பண்ணி அம்சை பண்ணலாம். சாளக்ராமத்தைச் சுற்றி இருக்கும் இடத்தை துடைத்து சுத்தம் செய்து, கோலம் போட்டு, விளக்கேற்றி வைக்கலாம். இதுவே விதிக்கப்பட்ட விஷயங்கள். வேறு புஸ்தகங்களில் வேற மாதிரி எழுதி இருக்கு என்றால் அது எந்த யுக தர்மத்தை எப்படி எழுதி இருக்கின்றனர் என்பதை எல்லாம் பார்த்து ஆராய்ந்து சரியாக புரிந்துகொள்ள வேண்டும். என்ன எழுதபட்டிருக்கிறது என்பதை விட என்ன அனுஷ்டானத்தில் இருக்கின்றது என்பதை முன்னிட்டு தான் பல ஸம்ப்ரதாய வழக்கங்கள் இருந்து கொண்டு வருகின்றன.

வழக்கத்தில் ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தை தொடுவது என்பது கிடையாது.


எங்கள் அகத்தில் எப்போதும் படுக்கையில் படுக்கும் வயதானவர்கள் இருக்கா. சிறு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு அல்பசங்கை போக உதவ வேண்டி இருக்கும். இதுபோன்றவைகளால் ஏற்படும் விழுப்புடன் மாலை பெருமாள் விளக்கு ஏற்றலாமா? இல்லை குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டுமென்றால் சாயங்காலம் (சூர்யாஸ்தமனத்திற்கு பின்) பெண்கள் குளிக்கலாமா?

Vidwan’s reply:
விழுப்பாக நேர்ந்து விட்டது என்றால் சாயங்காலம் விளக்கேற்றுவதற்காக நேரடியாக தீர்த்தமாட வேண்டிய அவசியமில்லை. ஸ்நானத்தில் பல விதங்கள் உண்டு என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மந்த்ரஸ்நானம் என்று ஒரு வகை. ஸ்திரீகளுக்கு அதை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று இருக்கின்றது.

அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், சுமங்கலி ஸ்த்ரீகள் மஞ்சள் பொடியை ஜலத்தில் கரQ28VAIK21033

யாதவாப்யுதயம் என்பது பாராயண க்ரந்தமா? ஒரு காவியம் என்பதால் அதை கோஷ்டியாக சேவிக்கலாமா? அதன் அர்த்தத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாமா?

Vidwan’s reply:

யாதவாப்யுதயம் ஒரு காவியம் பாராயணத்திற்காக வந்த ஸ்தோத்ரம் இல்லை. சில புராணங்கள் பாராயணத்தில் வைத்துள்ளது போல் இதை பாராயணமாக சேவித்தால் தவறில்லை. அதன் அர்தத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே ஸ்வாமி தேஶிகனும் இயற்றியிருக்கிறார்.


உப ப்ரம்மணம் என்றால் என்ன? அதில் எந்தெந்த புராணங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது ? தன்யாஸ்மி

Vidwan’s reply:

உப ப்ரம்மணம் என்றால் வேதத்தின் விளக்கம் என்று அர்த்தம். வேதத்தைப் பற்றி விள்க்குவதற்காக வந்த ஸ்ம்ருதிகள், ஶ்ருதிகள், இதிஹாச-புராணங்கள் எல்லாம் உப ப்ரம்மணங்கள். அதில் 6 புராணங்கள் ஸாத்வீக புராணங்கள் அது தான் முக்கியமான உப ப்ரம்மணம் அந்த உபப்ரம்மணத்தை தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் புராணங்களில் தான் இருக்கிறது.


அகத்தியர் போன்ற ரிஷிகள் தேவதாந்தரங்கள் மீது துதிகள் பாடியுள்ளனர். உ.தா ஸ்ரீசக்ர ராஜசிம்மாசனேஷ்வரி போன்ற பாடல்கள். அவரே தான் ஆதித்ய ஹ்ருதயத்தை ஸ்ரீராம பிரானுக்கு உபதேசித்தார் என்று இருக்கிறது. அப்படியென்றால் ரிஷிகள் ஆழ்வார்கள் போன்று வைணவர்கள் இல்லையா? எப்படி இதை புரிந்துகொள்வது.

Vidwan’s reply:

ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, பலரும் இதை சொல்லியிருக்கின்றனர். இவர்களுக்குள் முக்கியமான வித்தியாசமானது ரிஷிகள் தங்களின் தபஸ்ஸினாலே முயற்சி செய்து அபாரமான ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆழ்வார்களுக்கு, பெருமாள் மயர்வற மதிநலம் அருளினன் என்றுரைப்பது போல் பெருமாளே அந்த ஞானத்தை கொடுத்திருக்கிறார். ஆகையால்தான் ஆழ்வார்கள், ரிஷிகளைக் காட்டிலும் ஶ்ரேஷ்டர்களாக இருக்கிறார்கள்.

ரிஷிகளிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உள்ளனர் அத்திரி, ப்ருகு போன்றோர் நல்ல ஸ்ரீவைஷ்ணவர்கள். அகத்தியரும் ஸ்ரீவைஷ்ணவர் தான். ஆனால் ரிஷிகளுக்கு சமுதாயப் பொறுப்பு இருப்பதினால் மற்ற தேவதாந்திர பக்தர்களுக்காக சில காரியங்கள் செய்வார்கள். வ்யாசர், சிவ புராணம் இயற்றியது போல் எல்லா புராணங்களை இயற்றிய பின் “வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்” என்று கூறியிருக்கிறார். ஆக ரிஷிகள் சமுதாயப் பொறுப்பினால் அவர்களுக்காக அதைச் செய்திருப்பார்கள் அது அவர்களின் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

பெரும்பாலான ரிஷிகள் ஸ்ரீவைஷ்ணவர்களாக தான் இருந்திருக்கிறார்கள். வேதத்திலே சொல்லப்பட்ட சில ரிஷிகள் கூட வேறு மதத்தைச் சேர்ந்தவர்காளாக இருக்கிறார்கள். ஆக நாம் புராணங்களிலிருந்து ஸ்ரீவைஷ்ணவ பாகத்தைமட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ரிஷிகளைக் காட்டிலும் பலமடங்கு பெருமையுள்ள ஆழ்வார்களை நாம் விசேஷமாக கௌரவிக்க வேண்டும்.ைத்து கொண்டு அதை தாடை, கைகள், கால்கள், திருமாங்கல்யத்தில் தடவிக் கொண்டு , பின் ப்ரோக்ஷித்து கொண்டு புண்டரீகாக்ஷய நம: என்று உச்சரிக்க வேண்டும். கூடவே பெருமாள் திருமொழியில் இரண்டாவது பதிகத்தில்

” தோடுலாமலர்மங்கைதோளிணைதோய்ந்ததும் சுடர்வாளியால் *

நீடுமாமரம்செற்றதும்நிரைமேய்த்ததும் இவையேநினைந்து*

ஆடிப்பாடிஅரங்கவோ!என்றழைக்கும் தொண்டரிப்பொடி

ஆடநாம்பெறில் * கங்கைநீர்குடைந்தாடும் வேட்கைஎன்னாவதே? ”

என்று வரும் இரண்டாவது பாசுரத்தையும் அனுசந்தானம் பண்ணலாம். இது ஸ்திரீகளுக்கு சொல்லப்பட்ட மந்த்ரஸ்நானமாகும். இதை பண்ணிவிட்டு விளக்கேற்றலாம். எந்தச் சமயத்திலும் வெளியில் சென்று விட்டு வந்தபின் தீர்த்தமாடுவதற்கு பூர்த்தியாக நேரமில்லை அகாலமாக இருக்கின்றது என்றால் இந்த மாதிரி ஒரு அனுஷ்டானத்தை பண்ணுவது பெரியோர்கள் வழக்கத்தில் இருக்கின்றது.


பார்த்தாவை இழந்த ஸ்த்ரீகள் நெற்றிக்கு (திருமண் ஸ்ரீ சூரணம்) எவ்வாறு இட்டுக்கொள்ள வேண்டும்?

Vidwan’s reply:
பர்த்தாவை இழந்த ஸ்த்ரீகள் நெற்றிக்கு மஞ்சள் ஸ்ரீசூர்ணத்தையும் , வெள்ளை திருமண்ணையும் தரிப்பது அந்த காலத்தில் வழக்கமாக இருந்திருக்கின்றது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top