ஸ்த்ரீகள் அகத்தில் நித்யானுசந்தானத்தின் ஒரு அவ்யமாக கத்ய த்ரயத்தைச் சேவிக்கலாமா? அல்லது அது புருஷாளுக்கு மட்டும்தானா? அப்படி சேவிக்க கூடாது என்றால், ஸ்த்ரீகள் அர்த்தம் புரிந்து கொள்வதற்காக கத்ய த்ரய உபன்யாசத்தை கேட்கலாமா?
Vidwan’s reply:
கத்யத்ரயம் ஒரு ஸ்தோத்ரமாக இருக்கின்றபடியால் ஸ்த்ரீகள் சேவிக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு.அதேச்சமயம் அது சாதாரண ஸ்தோத்ரமாக இல்லாமல் ஶரணாகதி போன்ற வேதாந்த விஷயங்களையும் உள்ளடக்கி இருப்பதால் அதைச் சேவிக்கவேண்டுமா என்று சிலர் யோசிப்பதுண்டு. ஸ்தோத்ரம் என்று நினைத்து சேவிப்பதானால் சேவிக்கலாம்.
மாங்கல்ய ஸ்தவம் ஶ்லோகத்தைச் சுமங்கலிகள் மட்டும்தான் சேவிக்கலாமா அல்லது கணவரை இழந்த கைம்பெண்களும் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
மாங்கல்ய ஸ்தவம் ஶ்லோகத்தில் மாங்கல்யம் என்ற பதம் பொதுவாக அனைத்து மங்கல விஷயங்களையும் குறிக்கும்படி அமைந்துள்ளது. க்ருஹத்தில் இருக்கக்கூடிய சுமங்கலி ஸ்த்ரீ என்ற அர்த்தத்தில் மட்டும் வரவில்லை. அதாவது அனைத்து மங்கல விஷயங்களுக்கும் என்ற ஒரு பரந்த நோக்கத்தோடு கூறப்பட்டுள்ளது.ஆகையால் அனைவரும் (கைம்பெண்களும்) சேவிக்கலாம் என்று தோன்றுகிறது.
திவ்ய ப்ரபந்தத்தில் “ராமா” என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? ராமர் என்ற பெயர் தமிழில் எப்படி வரும்?
Vidwan’s reply:
“கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று நம்மாழ்வார் ஸ்பஷ்டமாக “ராமர்” என்ற திருநாமத்தை கூறி பாடியுள்ளார்.
ராமன் என்ற பெயருக்கு தமிழில் மனத்துக்கு இனிமையானவன் என்று அர்த்தம். ரமயதி -எல்லாருக்கும் இனிமையாக இருக்கக்கூடியவன். இதை தூய தமிழில் மனத்துக்கினியான் என்பர். அதையே ஆண்டாளும் பாடியுள்ளார். மேலும் சில பாசுரங்கள்:
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6- (பெரியாழ்வார் திருமொழி)
சிற்றவை தன் சொல் கொண்ட
சீராமா தாலேலோ! பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
பெருமாள் திருமொழி 8-6 (குலசேகராழ்வார்)