சோபகிருது – ஆனி- பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


எங்களுக்குத் தெரிந்த திருக்கோயிலில் க்ருஷ்ணபக்ஷ ப்ரம்மோற்சவம் சமயம் திருத்தேர் மற்றும் பூர்ணாஹுதி அமாவாஸை அன்று வந்தால் அச்சமயம் வேதபாராயணம் பண்ணலாமா?

Vidwan’s reply:

திருக்கோயில்களில் வேதபாராயணம் செய்வதற்கு அனத்யயனகாலக் கணக்கெல்லாம் கிடையாது. உத்ஸவம் அமாவாஸையோ, மஹாப்ரதோஷ காலத்திலோ வந்தால் அப்போதும் செய்யலாம்.


ப்ரம்மோற்சவம் சமயம் நம் முன்னோர்கள் இங்கே வருவர் என்று சொல்கின்றனர். அப்படியிருக்க ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாமா? அதனால் ஏதேனும் பாபம் ஏற்படுமா?

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாம். அதனால் பாபம் ஏற்படாது. ஆனால் அந்தந்தக் கோயில் வழக்கத்திற்கு ஏற்றவாறு கேட்டுச் செய்யவேண்டும்.


வேதம் அனாதி என்றால் பரத்வாஜர் மற்றும் இந்திரன் இருவருக்கும் நடந்த கதைப் பற்றி எதில் குறிப்பிட்டுள்ளது? அதுவும் வேதம் பற்றிய கதைதானே அப்படியென்றால் எப்போது நடந்திருக்கும்?

Vidwan’s reply:

வேதத்தில் நிறைய கதைகள் உண்டு. அந்தக் கதைகள் நடப்பதற்கு முன் அந்த வேதபாகம் எப்படியிருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி உண்டு. இதற்கு மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தில் பதிலளித்துள்ளார்கள்.

சில சம்பவங்களெல்லாம் ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். எப்படியென்றால் ஒவ்வொரு கல்பத்திலும் ப்ரளயம், மீண்டும் கல்பம் ஆரம்பம் அதில் மீண்டும் வேதாரம்பம் என்று இருக்கும். அந்த மாதிரி வேதத்தில் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே ஒவ்வொரு கல்பமும் நடக்கும். உதாஹரணமாக இராமாவதாரம், க்ருஷ்ணாவதாரம், ந்ருஸிம்ஹ அவதாரம் என்று ஒவ்வொரு கல்பத்திலும் நடந்துகொண்டே இருக்கும்.

வேதம் போல்தான் அதன் கதைகளும் ஒவ்வொரு கல்பத்திலும் வந்துகொண்டிருக்கும். அதனால் முன் கல்பத்தில் நடந்தது பின் கல்பத்தில் சொல்லுவதாக அது ஆகலாம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top