ஸ்த்ரீகள் எனென்ன காலக்ஷேபங்கள் அந்வயிக்கலாம் என்று தெரியப்படுத்தவும்.
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம், சில்லரை ரஹஸ்யங்கள், பகவத் விஷயம் ஆகிய காலக்ஷேபங்களில் அந்வயிக்கலாம்.
ஸ்ரீவிஷ்ணுவிஜய ஸ்தோத்திரத்தில் 3வது ஸ்லோகத்தில் நமோஸ்து புத்தாய ச தைத்யமோஹிநே,இதில் புத்தாய என்பதில் யாரை குறிப்பிடுகிறார்?
Vidwan’s reply:
லோகத்தை மோஹிப்பதற்காக பகவானே புத்தனாக அவதாரம் பண்ணி, ஒரு தர்சனமும் இல்லாமல் நாத்திகம் பேசுபவர்களை ஏதோ ஒரு சின்னவழியில் கொண்டுவருவதற்கு எம்பெருமான் முயற்சிக்கிறார். அதனால் அவனே புத்தனாக அவதாரம் பண்ணி இவ்வழியில் கொண்டுவந்து பின் வந்தவன் அம்மதத்தில் உள்ள தவறை உணர்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வருவான் என்பதாக எம்பெருமானின் எண்ணம். இவையெல்லாம் பகவானின் லீலைகள். புத்தன் என்பவன் எம்பெருமான்தான். ஆனால் அதற்காக நாம் புத்தனைச் சேவிக்கமுடியாது.
திவ்ய ப்ரபந்தம் வ்யாக்யானம் பற்றி சில சந்தேகங்கள்
1. 4000 படி 6000 படி என்றால் என்ன?
2. எதை வைத்து இப்படி பிரித்துள்ளார்கள்?
3. இவைகளுக்குள் இருக்கும் வேறுபாடு என்ன?
4. முதலில் எதைப் படிக்கவேண்டும். ஏதேனும் வரிசை இருக்கிறதா?
5. இதன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?
6. இவை ஒவ்வொன்றும் திவ்யப்ரபந்தத்திற்கு வேறு வேறு விளக்கமா? அல்லது அதன் அர்த்ததின் விரிவாக்கமா?
Vidwan’s reply:
32 அக்ஷரம் கொண்டது ஒரு க்ரந்தம் என்று பெயர். அந்த மாதிரி 4000 க்ரந்தங்களுடையது 4000படி என்றும், 6000 க்ரந்தங்களுடையது 6000படி என்றும் பெயர்.
அக்ஷர கணக்கை வைத்து உத்தேசமாகப் பிரித்துள்ளனர்.
4000 படி என்பது சுருக்கம். 6000படி என்பது சற்று விரிவாக இருக்கும்
க்ரமம் என்றில்லை. அவரவர்களுக்கு எந்த வ்யாக்யானத்தில் ஈடுபாடு இருக்கிறதோ அதைப்படிக்கலாம். நம் ஸம்ப்ரதாயத்தில் 6000படி தான் முதலில் சேவிப்பது வழக்கம்.
திவ்யப்ரபந்தத்திற்கு பலவித வ்யாக்யான புஸ்தகங்கள் பல இடத்தில் போட்டுள்ளார்கள். திருவாய்மொழிக்கு திருவாராயிரப்படி வ்யாக்யானம் ஆண்டவன் ஆஶ்ரமத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தில் ரெங்கவிலாஸ மண்டபத்தில் பெரியாச்சான் பிள்ளை வ்யாக்யானமும் கிடைக்கிறது. 4000 த்திற்கும் உத்தமூர் ஸ்வாமியினுடைய வ்யாக்யானம் இருக்கிறது. இவ்வொவ்வொன்றிக்கும் இடத்தைப் பொருத்து சின்னச்சின்ன வித்யாசம் இருக்கலாம் இல்லாமலும் போலாம்.