பெரிய திருமொழியில் ஒரே ஒரு திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள் இருப்பதன் தாத்பர்யம் என்ன?
Vidwan’s reply:
பெரிய திருமொழியில் மானமுடைத்து என்ற திருமொழியில் 14 பாசுரங்கள் இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட க்ருஷ்ணானுபவம். யசோதா பிராட்டி கண்ணனிடம் பேசுகிறார். கண்ணன் செய்யக்கூடிய குறும்புத்தனத்தைப் பார்த்து கவலைப்பட்டு அவனிடம் அப்படியெல்லாம் நீ செய்யலாமா என்று சொல்லக்கூடிய ஒரு ஆச்சர்யமான அனுபவம். அந்த அனுபவத்தினால் பாசுரங்கள் அதிகம். ஆழ்வாரே இதை இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவருக்கு ஏதும் இடரில்லையே என்பதாக சாதிக்கிறார். அனுபவத்தின் வெளிப்பாடுதான் பாசுரங்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.