Vidwan’s reply:
வேதங்களை எழுதாமலே செவிவழியாக வாய்வழியாவே மறையாமல் இத்தனை தலைமுறை தலைமுறையாக வந்துள்ளது. இன்றும் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தலைமுறையாக வந்துகொண்டிருக்கிறது.
இது எப்படி என்று பல அயல்நாட்டவரே வியக்குமளவு தலைமுறைகள் பல கடந்து அப்படியே வருகிறது வேதம். எழுத்துவடிவம் இல்லாமலே எப்படியிருக்கிறதோ அப்படியே தொடர்கிறது என்பது உலகாதிசயம் என்கின்றனர் பல அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
ஏன் வேத்ததை எழுதக்கூடாது? இதை எழுதக்கூடாது என்று ஏதாவது ப்ரமாணம் இருக்கிறதா? இப்படியான பல கேள்விகளுக்கு விடை விரிவாக கீழேயுள்ள காணொளியில் இருக்கிறது ஓரிரண்டை மட்டும் இங்கே காண்போம்.
வேதங்களை எழுதுகிறவர்கள் நரகத்திற்குப் போவார்கள் – ஶீக்ஷாவலி
எழுதிவைத்துக்கொண்டு வேதத்தைப் படிப்பவன் அதமன் – பாணினீய ஶீக்ஷாவலி