கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் (காலை,மாலை அல்லது இரவு) சேவிக்கலாமா? சேவிக்க விதிமுறைகள் இருக்கின்றதா?
Vidwan’s reply:
கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் சேவிக்கலாம்.
சில ஶ்லோகங்கள் , பாசுரங்களுக்கு பலஸ்ருதியாக மறுபிறவி கிடையாது என்றும், ஸ்ரீவைகுண்டம் செல்வர் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் மோக்ஷத்திற்கு ஶரணாகதிதான் உபாயம் என்று இருக்கிறது. அப்படியென்றால் இந்தப் பலஸ்ருதியை எப்படிப் புரிந்துகொள்வது?
Vidwan’s reply:
சில ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்களின் பலஸ்ருதி மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று கூறுவதின் கருத்து என்னவென்றால், அந்த ஸ்தோத்ரத்தையோ ப்ரபந்தத்தையோ அனுசந்தானம் செய்தால் நமக்கு நிச்சயம் ஒரு சதாசார்யர் சம்பந்தம் ஏற்பட்டு அவர் மூலமாக ஶரணாகதி ஆகி நாம் மோக்ஷத்தைப் பெறுவோம். படிப்படியாக நமக்கு மோக்ஷம் கிட்டும் என்பதே இதன் கருத்து.