தேசிகர் நாள்பாட்டில் வரும் அடியானது “தீதாகிய மாயக்கலைகளை” அல்லது “தீதாகிய மாயக் களைகளை” இதில் எது சரி?
Vidwan’s reply:
இக்கேள்விக்கான விடையை பிறகு தெரிவிக்கின்றோம்.
நம் ஸம்ப்ரதாயத்தில் சந்தைமுறைப்படி ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம் மற்றும் பாகவதம் கற்கும் வழக்கமுண்டா? இல்லையென்றால் ஏன் அப்படி ஒரு முறையில்லை. இவையெல்லாம் காலக்ஷேப க்ரந்தங்களா?
Vidwan’s reply:
இக்கேள்வியில் கற்பது என்று என்ன அர்த்தத்தில் கேட்டுள்ளீர்கள் என்று புரியவில்லை.
ஸ்ரீமத் இராமாயண காலக்ஷேபம் என்பது எல்லாவிடங்களிலும் நடந்திருக்கிறது இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. பூர்த்தியாக இல்லாவிட்டாலும் சங்க்ரஹமாக நடக்கும்.
ஸ்ரீமத் இராமாயணம் 24000 ஶ்லோகங்கள், மஹாபாரதம் லக்ஷம் ஶ்லோகங்கள். இவை அனைத்தையும் கற்கவேண்டுமானால் வாழ்நாள் முழுவதும் இதிலேயே சரியாகிவிடும். ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள், அப்படி அவசியமுமில்லை. ஏனென்றால் இவை அனைத்துமே மிகவும் சுலபமான ஶ்லோகங்கள். ஆனால்கூட ஆசார்யனிடத்தில் முறைப்படியாக ஸ்ரீமத் இராமாயணம் கேட்பது வழக்கம். ப்ராமாண்யளவில் மஹாபாரதமும், ஸ்ரீமத் இராமாயணமும் ஒன்றுதான், ஆனால் ஸம்ப்ரதாயத்தில் காலக்ஷேபம் என்று வரும்போது மஹாபாரதத்தைப் பொறுத்தவரை தேவையான இடங்களை மட்டும் காலக்ஷேபமாக கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுமட்டும்தான். ஸ்ரீமத் இராமாயணம் போல் காலக்ஷேபமாக கேட்பதில்லை. மற்றபடி ஆதியில் மட்டும் ஆசார்யனிடமிருந்து உபதேசம் வாங்கிக்கொண்டு நாமே அதைப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.