அடியேன் வேலைக்கு செல்கிறேன் . எனக்கு ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் கற்றுக்கொள்ள வேண்டும். வார இறுதி நாட்களில் மட்டுமே எனக்கு தேவையான நேரம் கிடைக்கின்றது . GSPK இல் சான் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் உள்ளதா? இல்லையென்றால் ஒன்றைத் தொடங்க முடியுமா?
Vidwan’s reply:
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. Week end batches என்று மதியம் 3 அல்லது 4 மணிக்கு ஸ்தோத்திரங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
இதற்கான விவரங்கள் அறிய : https://t.me/sampradayamanjari மற்றும் https://t.me/gspkstotras என்ற Telegram Channel ல் இணையவும்.
அப்படி அதற்கு வரமுடியவில்லை என்றால் GSPKவின்
அல்லது
என்ற YOUTUBE Channelகளில் தேஶிக ஸ்தோத்திரங்களுக்கும் திவ்ய ப்ரபந்தங்களுக்கும் stepwise சந்தை வீடியோ இருக்கின்றது.
Step 0 விலிருந்து ஆரம்பித்து வார்த்தை வார்த்தையாகப் பிரித்து சொல்லிக் கொடுப்பதில் இருந்து ஆரம்பித்து பூர்த்தியாக(step4) ஶ்லோகத்தை சொல்லிக் கொடுக்கும் வரை step wise சந்தை இருக்கின்றது. அதை வைத்துக்கொண்டு எந்தச் சமயத்தில் நமக்கு ஒழிகிறதோ அப்போது அதைப் போட்டுக் கேட்டு கற்றுக் கொள்ளலாம். சனி ஞாயிறு இரவு பகல் எந்த நேரமாக இருந்தாலும் நமக்கு சௌகரியமான பொழுதில் அந்தச் சந்தை வீடியோக்களை வைத்துக் கொண்டு சுலபமாக தேசிக ஸ்தோத்ரங்களை கற்றுக் கொள்ளலாம்.