பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிக்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கா? காலையில் சேவிக்க முடியவில்லையென்றால் சாயங்காலம் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிப்பதற்கு தனியான விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இது ஸ்தோத்ரமானபடியினால் எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். காலையிலோ சாயங்காலமோ ராத்திரியோ எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம்.
ஒரு பலனைக் குறித்து விசேஷ பாராயணமாக சங்கல்பம் செய்து கொண்டு சொல்வதாக இருந்தால் அப்பொழுது காலையில் ஆகாரத்திற்கு முன் சேவிப்பது நல்லது. மற்றபடி பொதுவான ஸ்தோத்ரபாட பாராயணம் என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் பண்ணலாம்.
கோவிந்தராஜீயம் என்ற க்ரந்தத்தின் ஆசிரியர் யார்? அவரது வம்சம், ஆசார்யன், வாழ்க்கை வரலாறு இவற்றைப் பற்றி விளக்க பிரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
கோவிந்தராஜீயம் என்பது ஸ்ரீமத் இராமாயணத்தின் வ்யாக்யானம். பகவத் இராமானுஜர் திருவுள்ளப்படி அந்த ஸம்ப்ரதாயத்தில் வந்த கோவிந்தராஜன் என்பவர் வ்யாக்யாணம் பண்ணியிருக்கிறார். கோவிந்தராஜர் என்பவரால் இயற்றப்பட்டதால் கோவிந்தராஜீயம் என்ற பெயர். அவரது வம்சம்,ஆசாரம், வாழ்க்கை வரலாறு போன்றதெல்லாம் இந்த வ்யாக்யானத்தின் முன்னுரையில் இருக்கிறது. அதை முடிந்தால் அனுப்புகிறோம்.