திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் முதல் மூன்று அடிகளின் முதல் எழுத்து ப்ரணவத்தைக் குறிக்கும் என்றும் ஆனால் அதன் வரிசை மாறியிருக்கும் என்றும் சொல்வர். சிலர் ஆழ்வார் வேதம் ஓதும் குலத்தில் பிறக்காததனால் இவ்வாறு இயற்றியுள்ளார் என்கின்றனர். இந்தக் காரணம் சரியா? அப்படியென்றால் இதே காரணத்தினால்தான் அமலனாதிபிரானிலும் திருப்பாணாழ்வார் இதேபோல் ப்ரணவத்தை பாசுரத்தில் முதல் எழுத்தாக குறிப்பிட்டுள்ளாரா?.
Vidwan’s reply:
ஆழ்வார்கள் விஷயத்தில் அவர்கள் தாழ்ந்த பிறப்பில் பிறந்தவர்கள் என்று நினைப்பதே பாபம்.
அவர்களெல்லாம் நித்யஸூரிகளின் அம்சமாக அவதரித்தவர்கள். ஆகையால் அவர்களை தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என நினைப்பது மஹாபாபமாகும். அவர்களின் ப்ரபந்தங்களில் அ கார,உ கார, ம காரங்கள் மாறியிருப்பது என்பதெல்லாம் வ்யாக்யானங்களில் வரும் விசேஷம் அதாவது வ்யாக்யான வைகரிகள்.
திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தம் எது? திருநெடுந்தாண்டகமா அல்லது பெரிய திருமடலா? எது என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?
Vidwan’s reply:
ஸ்வாமி தேஶிகனின் ப்ரபந்த ஸாரப்பாசுரப்படி, பெரியதிருமடல் திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தமாகும்.
ப்ரபன்னர்கள் ஸ்ரீராம் சரித்ரமானஸ் சேவிக்கலாமா?
Vidwan’s reply:
ஸ்ரீ ராம சரித்ரமானஸ் ஸ்ரீ ராமன் விஷயம் ஆனபடியினாலே ப்ரபன்னர்கள் சேவிப்பதனால் தவறில்லை.