குரு என்பவர் யார்? ஆசார்யன் என்பவர் யார்? இரண்டு பேருக்கும் என்ன வித்யாசம்?
Vidwan’s reply:
குரு என்பவர் நம் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞான விளக்கேற்றுபவர்.
गु – अन्धकार: – இருட்டு
रु – तन्निरोधक: – போக்குபவர்
गुरु: – இருட்டைப்போக்கி ஒளியூட்டுபவர்
ஆசார்யன் என்பவர் எம்பருமானைப் பற்றி நமக்கு உணர்த்துபவர்.
आचिनोति: शास्त्रार्थान् – எவர் ஒருவர் சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவரோ
स्वयं आचरते – எவர் ஒருவர் அதனை நடைமுறையில் கொண்டவரோ
आचरे स्थापयति – எவர் ஒருவர் தங்கள் சிஷ்யர்களுக்கு நல்வழியைக் காட்டுபவரோ அவரே ஆசார்யர் ஆவார்.
ஆக , நமக்கு எந்த ஞானத்தைக் கொடுத்தாலும் அவர் குரு ஆவார். வேதாந்த, ஆத்ம ஞானத்தைக் கொடுப்பவர் ஆசார்யன் ஆவார்.
இந்த உயர் சம்ப்ரதாயத்தில் முதல் ஆசார்யன் யார்? எங்கிருந்து இதன் குருபரம்பரை தொடங்குகிறது?
Vidwan’s reply:
ஸ்ரீமன் நாராயணனே நமக்கு முதல் ஆசார்யன் ஆவார்.
அவரிடமிருந்து தான் இந்த குருபரம்பரையானது தொடங்குகிறது.
இந்த நன்னெறியையும் இதைச்சார்ந்த கதையைப் பற்றி விரிவாக அறிய கீழே உள்ள linkஐ click செய்யவும்