அடியேன் நமஸ்காரம், என்னுடைய கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் திருவாராதனை செய்யமுடியாத சமயத்தில் (பண்டிகை நாளிலோ அல்லது வெள்ளி சனி கிழமைகளில் ஆத்து பெருமாளுக்கு நான்(ஸ்திரிகள்) கற்பூரார்த்தி காட்டலாமா, தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
பொதுவாக ஸ்த்ரீகள் கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை.
குறிப்புகள்:
ஆத்து புருஷர்கள் வெளியூர் சென்றிருந்தால், ஸ்த்ரீகள் கோலமிட்டு, விளக்கேற்றி பண்ணிய தளிகையை கோவிந்த நாமம் சொல்லி பெருமாளுக்கு மானசீகமாக அம்சை செய்து பின் உட்கொள்ளலாம். கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை.
அடியேன், இப்போது நான் ஆறு மாத கர்ப்பிணி. கர்ப்பிணிகள் மலயேறக்கூடாது என்பர். திருமலை போன்ற திவ்யதேசங்களைத் தவிர இதர திவ்யதேசங்களை இந்தச்சமயம் அடியேப் சென்று சேவிக்கலாமா? ஸ்வாமி. அடியேன்.
Vidwan’s reply:
கர்ப்பிணிப் பெண்கள் மலையேறிச்சென்று சேவிக்கக்கூடாது. முடிந்ததானால் மற்ற திவ்யதேசக் கோயில்களுக்குச் சென்று சேவிப்பதில் தவறில்லை.
அந்த நேரம் அதிக ப்ரயாணம் கூடாது என்ற காரணத்தினால் பக்கத்தில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று சேவிக்கலாம்.
சுமங்கலி ப்ரார்த்தனை செய்யும் போது ஒரு கன்னிப் பெண்ணையும் மற்ற சுமங்கலிகளுடன் அமர வைக்கின்றோம். 1. கன்னியாப்பெண் என்றால் யார்? திருமணமாகாத பெண்ணா? அல்லது ஏதேனும் குறிப்பிட்ட வயதுக்குள் உள்ள குழந்தையா?. 2. சுமங்கலி ப்ராத்தனையில் கன்னியா பெண்ணும் சேர்த்து எத்தனை பேர் அமர வேண்டும்? அடியேன் தெளியப்படுத்த விண்ணப்பிக்கிறேன்.
Vidwan’s reply:
சுமங்கலி ப்ராத்தனை என்பது விதிக்கப்பட்ட ஒரு விஷயமன்று, எல்லார் அகத்திலும் இதை செய்வதில்லை. பொதுவாக பரமைகாந்திகள் இப்படிப்பட்ட ப்ராத்தனைகள் வைத்துச்செய்யும் வழக்கமில்லை. அவரவர் ஆத்துவழக்கத்தில் இருந்தால் செய்யலாம் தவறில்லை.
பொதுவாக கன்னியா பெண் என்றால் ரஜஸ்வலை ஆகாத பெண் என்று தான் அர்த்தம்.
குறிப்புகள்:
செய்வதாய் இருந்தால் 5,7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் செய்வார்கள். கன்னியாப்பெண்கள் வைத்து பண்ணுவதும் அவரவர் ஆத்து வழக்கப்படியே பின்பற்ற வேண்டும்