திருமண்காப்பு என்பது எதற்காக நாம் தரிக்க வேண்டும்? எப்படி தரிக்க வேண்டும்?
Vidwan’s reply:
திருமண்காப்பு என்பது ஓர் ரக்ஷை அதாவது காப்பு போன்றது. ஸ்ரீவைஷ்ணவர்கள் கட்டாயம் தரிக்க வேண்டிய சின்னம்.
இது எம்பெருமானின் திருவடியைக் குறிக்கும். இதை ஊர்த்வபுண்டரம் என்று கூறுவர்.
வைதீக கர்மாக்கள் செய்ய இதைக் கட்டாயம் தரித்திருக்க வேண்டும்.
ஸமாஶ்ரயணம் ஆன புருஷர்கள் 12 திருமண்காப்பு, 12 திருநாமங்கள் கூறியவாறு தரிக்க வேண்டும்.