ஸ்வாமி தேசிகன் அருளிய “பரமத பங்கம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தில் பின் வரும் இந்த பங்க்தி எந்த பகுதி (chapter)யில் வரும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.
“சில மனிதர்களின் இயலாமையால் காலப்போக்கில் வேதங்களும், வேதாந்தங்களும் மறைந்தும், நலிவடைந்தும் போயின. இருப்பினும் இன்றளவும் அகஸ்தியர்ம் பரசுராமர், ஆபஸ்தம்பர், வ்யாஸர் முதலிய மகரிஷிகள் அவ்வேதங்களை மலய, மஹேந்த்ர, விந்திய , ஹிமாசலம் போன்ற அறிதான இடங்களில் அநுசந்தித்து வருகின்றனர். ஊழி காலம் முடிந்து மீண்டும் க்ருத யுகத்தில் மறைந்த வேதங்களை அவர்கள் மீண்டும் எடுத்துரைப்பர் என்பதாலும், வேதங்கள் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது” என்று சாதித்திருப்பார்.
Vidwan’s reply:
பரமதபங்கம் என்கின்ற நூலில் வேத நித்யத்வம் பற்றியான விசாரம் ஒன்று இருக்கின்றது. அந்த நூலிலே, சமுதாய தோஷாதிகாரத்திலே, வேத நித்யத்வம் எனும் சொல்லுமிடத்தில் குறிப்புள்ளது. வ்யாக்யானங்களில் விஸ்தாரமாக இருக்கலாம்.