ஏகாதசி வ்ரதம் என்றால் என்ன? துவாதசி பாரனை என்றால் என்ன?
Vidwan’s reply:
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்கியமான வ்ரதம் ஏகாதசி வ்ரதம் என்பதாகும். அன்றைய தினம் உபவாஸம் இருக்க முடிந்தவர்கள் கட்டாயம் உபவாஸம் இருக்க வேண்டும்.
இயலாதவர்கள் ஒரு வேளை பலகாரமோ, பழங்களோ எடுத்துக்கொள்ளலாம்.
கட்டாயமாக அரிசியைத் தவிர்த்தல் வேண்டும்.
கேளிக்கைகளைத் தவிர்த்து அன்றைய தினம் எம்பெருமானின் ஸ்மரணையில் இருத்தல் வேண்டும்
ஏகாதசி வ்ரதத்தின் முழு பலனாவது, மறுநாள் த்வாதசி நேரத்திற்குள் த்வாதசி பாரனை செய்வதில் தான் கிடைக்கும்.
ஏகாதசி வ்ரதம், த்வாதசி பாரனை என்ன என்பதை பற்றியும், இவ் வ்ரதத்தின் மகிமை பற்றியும் சுலபமாக புரிந்துக்கொள்ள SampradayaManjari ePatashalaவில் வழங்கப்பெற்ற அம்பரீஷ மாஹாராஜாவின் கதையை கீழே உள்ள காணொளி மூலம் அனுபவிப்போம்.