சுபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?

Vidwan’s reply:

முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பது நம் பெரியோர்கள் எல்லாம் சொல்லியிருப்பதுதான். அதற்கு தனிப்பட்ட குறிப்பு என்று எதுவும் கிடையாது. மேலும் ஆழ்வார் அருளியது முகுந்தமாலையிலிருந்து என்றாக நம் ஆசார்யர்கள் எடுக்கவில்லை. அதில் கடைசியில் “ராக்ஞா குலசேகரே” என்று சொல்லியிருப்பார் ஆகையால் குலசேகர ராஜாதான் பண்ணியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு என்ன சந்தேகமென்றால், குலசேகர ராஜா என்ற பெயரில் நிறைய ராஜா இருந்திருக்கிறார்கள். அந்தப் பரம்பரையில் நிறைய பேருக்கு குலசேகர: என்ற பெயருண்டு. நாம் குறிப்பிடும் குலசேகர ஆழ்வாரும் அவரும் ஒன்றா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அந்த ஶ்லோகத்தின் பாவங்களும் ஆழ்வாரின் பாவங்கள் போலே இருப்பதினால் இருவரும் ஒன்றுதான் என்று நிறையபேர் சமாதானமாகக் கூறுகிறார்கள்.


திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் அர்ச்சா அவதாரங்கள் பற்றிய கேள்விகள். திவ்ய தேசத்து எம்பெருமானின் திருநக்ஷத்ரங்களை, ஒரு பட்டியல் போல் வெளியிட முடியுமா அந்தத் தினத்தில் அத்திவ்ய தேசத்து எம்பெருமான் பற்றிய பாசுரங்களைச் சேவிக்க உதவியாக இருக்கும்.

Vidwan’s reply:

ஒவ்வொரு திவ்யதேசத்து எம்பெருமானுக்கு ஒவ்வொரு அவதார திருநக்ஷத்ரம் உண்டு. அவை அனைத்தையும் சேகரித்து பட்டியல் போல் வெளியிடலாம், அதற்கு சிறிதுகாலமாகும்.


ஒரு ப்ரபன்னன் ஜயதேவரின் கீத கோவிந்தத்தைச் சேவிக்கலாமா? ISKCON முறைப்படி பெண்கள் துளசிமாலை அணிந்து “ஹரே க்ருஷ்ணா” ஜபம் செய்யலாமா?

Vidwan’s reply:

ஒரு ப்ரபன்னன் ஜயதேவரின் கீத கோவிந்தத்தைத் தாராளமாச் சேவிக்கலாம். ஹரே க்ருஷ்ணா ஜபம் செய்யலாம். ஆனால் துளசிமாலை அணிவதற்கு சில நியமங்கள் உண்டு அந்த ரீதியில் பார்த்தால் அதை அணிவது நம் சம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை. துளசிமாலை ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் அதை ஸ்த்ரீகள் தரிக்கக்கூடாது. புருஷர்களுக்கும் எப்போது தரிக்கலாம், எப்போது கூடாது என்று சில நிபந்தனையெல்லாம் இருக்கிறது. இன்று ப்ரதிஷ்டை பண்ணாததை சிலர் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது நம் பெரியவர்கள் வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்கள் வழக்கத்தில் இல்லாததைச் செய்யாது அவர்கள் வழக்கத்தில் இருப்பதை பின்பற்றினாலே போதுமானதாகும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top