சுபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம்


க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:

இக்கேள்வியில் இருக்கும் ஸ்த்ரீதர்மம் பற்றிமட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அகத்தில் க்ஷௌரம் பண்ணிக் கொண்டார்களானால் அந்த அகத்தில் அன்று துவரம் பருப்பு போட்டு ஸ்த்ரீகள் தளிகை பண்ணுவார்கள்.


எங்கள் அகத்தில் குமார ஷஷ்டி (அன்றைய தினம் ப்ரஹ்மச்சாரிகளுக்கு போஜனம் இடுவது)பல வருடங்களாகச் செய்து வருகிறோம். அடியோங்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் ஆகிவிட்டது, இதற்குப் பின் அவ்வழக்கத்தைத் தொடரலாமா?

Vidwan’s reply:

பொதுவாகவே ப்ராஹ்மணபோஜனம், ப்ரஹ்மச்சாரிகளுக்கு பிக்ஷை இடுவது இவையெல்லாம் க்ருஹஸ்த தர்மத்தில் உயர்ந்த காரியங்கள். தினமும் யாராவது அதிதிகள் போஜனம் செய்ய வருகிறார்களா என்று பார்த்து விட்டுத்தான் உண்ண வேண்டும் என்று க்ருஹஸ்த தர்மங்கள் எல்லாம் சொல்லுகின்றன. அப்படி இருக்கும்பொழுது ஒரு நாள் ப்ரஹ்மச்சாரிகளை கூப்பிட்டு போஜனம் இடுவது நல்ல காரியமாகத்தான் தெரிகிறது. அதில் ஒன்றும் தவறில்லை.

பரந்யாஸம் ஸமாஶ்ரயணமானவர்கள் இந்தக் காரியத்தைப் பண்ணலாம். ஆனால், குமார ஷஷ்டிக்காகச் செய்கிறேன். அதாவது ஒரு தேவதாந்தரத்திற்காகச் செய்கிறேன் என்கின்ற எண்ணமெல்லாம் கூடாது. எந்தக் காரியம் செய்தாலும் அது பகவத் ப்ரீத்யர்த்தமாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்துடன் செய்தால் அதில் எதுவும் தவறில்லை.


ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீகள் நித்யம் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் எவை? மேலும் கோவில்களுக்கு அல்லது ஆசார்யனைச் சேவிக்க செல்லும்போது எப்படிப் போகவேண்டும்? அதாவது எப்படி தலைவாரிக் கொள்ளவேண்டும், நெற்றி இட்டுக்கொள்ளவேண்டும், குங்குமம் வைத்துக்கொள்ளலாமா போன்றவற்றை விரிவாகத் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

ஸ்ரீவைஷ்ணவர்கள் நித்யம் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் என்ன என்பதைப்பற்றி சுதர்சத்தினுடைய‌ முந்தைய பல இதழ்களைப் பார்த்து அறிந்துகொள்ளவும். குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ தினசர்யா என்ற காணொளியை SudaranamGSPK YouTube channelல் வெளியிட்டுள்ளோம் அதன் link இங்கே கொடுத்துள்ளோம்.

கோவில்களுக்கு அல்லது ஆசார்யனைச் சேவிக்க செல்லும்போது வெறும் கையுடன் போகக்கூடாது. நம்மால் என்ன முடியுமோ அந்த உபகாரத்தை அவசியம் எடுத்துக்கொண்டு போய் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.

நன்றாகத் தலையைவாரி முடிந்துகொண்டுதான் போகவேண்டும். கோவிலுக்குப் போகும் பொழுதும் ஆசார்யனை சேவிக்கப் போகும் பொழுதும் தலையை விரித்துவிட்டு கொள்ளக்கூடாது. நன்றாகத் தலையை முடிந்துகொண்டு நெற்றிக்கு இட்டுக் கொண்டுதான் போகவேண்டும்.

நெற்றிக்கு எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்றால் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு போவது உசந்தகல்பம்.

குங்குமத்தைக் கரைத்து ஸ்ரீசூர்ணமாக இட்டுக்கொள்ளலாம் அல்லது ஸ்த்ரீகளுக்கு என்று கிடைக்கின்ற சிகப்பு ஸ்ரீசூர்ணம் அதையும் இட்டுக்கொள்ளலாம்.

திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு வாரிமுடிந்த தலையுடன் போவது மிகவும் உசத்தியாக ஆகும். அவசியம் ஒரு உபகாரத்துடன் (என்ன முடிகிறதோ பழமோ புஷ்பமோ எதுவும் முடியவில்லையென்றால் இரண்டு காசையாவது எடுத்துக்கொண்டு) எம்பெருமானிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.

தயாஶதகத்தில் ஸ்வாமி தேஶிகன் சாதித்த மாதிரி ஏதும் இல்லையே ஸமர்பிப்பதற்கு என்று மிகுந்த ஆகிஞ்சன்யத்துடன் இருக்கும் சமயத்தில் போகும்பொழுது கூட ஸமர்ப்பிக்கவேண்டும் என்கின்ற எண்ணத்துடன் போக வேண்டும். எம்பெருமானே உனக்கு என் பாபத்தையே ஸமர்ப்பிக்கிறேன் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்கின்ற ஸ்ரீஸூக்திகளெல்லாம் இருக்கிறது.

அதைப்போல அவர்களுக்கு ஏதாவது ஸமர்ப்பிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் எவ்வளவு முடிகின்றதோ அந்த உபகாரத்துடன் போய்ச் சேவிக்கவேண்டியது அவசியம்.

Loading

2 thoughts on “சுபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம்”

    1. Global Stotra Parayana Kainkaryam

      சௌளம் என்பது உபநயத்திற்கு முன் செய்யப்படும் சிகை ஸம்ஸ்காரம்.
      க்ஷௌரம் என்பது ஆங்கிலத்தில் Shaving எனக் கூறப்படுவது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top