சோபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


1. ஸ்திரீகள் ஶ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கலாமா? அல்லது உரை மட்டும் படிக்கலாமா?

2. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீமத் பாகவதம் படிக்க வேண்டுமெனில் எந்தப் பதிப்பகம் வெளியீட்டை படிக்கலாம்? (மொழிபெயர்ப்பு மற்றும் உரை)

Vidwan’s reply:

ஸ்திரீகள் ஸ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கும் வழக்கமில்லை. தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியிலும் ஸ்ரீமத் பாகவத உரையைப் படிக்கலாம்.

சமீபகாலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கென்று தனியாக பதிப்பகம் இன்னும் வரவில்லை. திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பல பாடங்களொடு ஸ்ரீமத் பாகவதம் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சற்றே பெரிய புத்தகமாகும். இப்போதைக்கு ஆங்காங்கே கிடைக்கும் கீதா ப்ரஸ் முதலிய பதிப்பகங்களின் வெளியீட்டைப் பாராயணத்திற்கு உபயோகிக்கின்றோம் அதில் பெரியளவில் வித்யாசங்கள் இல்லை. மொழிபெயர்ப்பு, உரை பொருத்தவரையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஶ்ரமத்தில் இரண்டு ஸ்கந்தம் வரை வெளியிட்டுள்ளனர். பழைய புத்தகங்கள் உண்டு ஆனால் அவையெல்லாம் இப்போது கிடைக்காது.


1. விஶிஷ்டாத்வைதம் பற்றி அறிய வேண்டுமெனில், எளியமுறையில் புரிந்துகொள்ளும்படி ஏதேனும் புத்தகம் இருக்கின்றதா?

2. நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்ம ஶாஸ்த்ரங்களை அறிந்து கொள்ள வால்மீகி இராமாயணம் அல்லது ஸ்ரீமத் பாகவதம் அல்லது வேறு எந்த க்ரந்தத்தை வாசிக்க வேண்டும்?

3. ஸ்ரீ ஸ்வாமிநாரயணன் அவர்களுடைய ஶிக்ஷாபத்ரி, வசனாம்ருதம் முதலிய புத்தகங்களைப் படித்ததனால் அடியேன் சைவத்தில் இருந்து வைஷ்ணவத்திற்கு மாறியுள்ளேன். ஸ்ரீ ஸ்வாமிநாரயணன் விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தம் சிறந்தது என்றும் பகவத் இராமானுஜருடைய கீதா பாஷ்யம் மற்றும் ஸ்ரீ பாஷ்யம் முதலியவற்றை நாம் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அடியேன் ஞான, அனுஷ்டானத்திற்காக இப்போது அவற்றைப் படிக்கலாமா?

4. தாமஸ, ராஜஸ புராணங்களை நாம் ப்ரமாணங்களாக எடுத்துக் கொள்ளலாமா? ப்ரஹ்ம வைவர்த புராணமும் சிவ புராணமும் ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் மற்றும் வைதிக சித்தாந்தத்திற்கு உண்மையான நிரூபணங்கள் ஆகுமா?

Vidwan’s reply:

1. ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா விஶிஷ்டாத்வைதம் பற்றி உரையாடல் முறையில் ஸ்ரீ வி என் தேஶிகாசார் ஸ்வாமி இயற்றிய புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர். அங்குக் கேட்டுப் பார்க்கவும்.

2. இதிஹாஸ, புராணங்கள் என்பது கதை போன்றது. அதிலிருந்து தர்மத்தை நாம் கண்டறிந்து கடைபிடிக்க வேண்டும். அதைவிட சுலபமானது தர்ம ஶாஸ்த்ர க்ரந்தங்களிலிருந்து அறிவது. தர்ம ஶாஸ்த்ர சுருக்கம் , மனுஸ்ம்ருதி சுருக்கம் போன்ற புத்தகங்கள் உள்ளது. அதில் ஆஹ்நிக காண்டத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.

3. கீதா பாஷ்யம் மற்றும் ஸ்ரீ பாஷ்யம் முதலியவற்றை குருமுகமாகத்தான் பயில வேண்டும் என்று விதியுள்ளது. குருமுகமில்லாமல் தானாகவே புத்தகம் பார்த்து தெரிந்துகொள்ளக்கூடாது என்று இருக்கிறது. ஆகையால் நீங்கள் ஒரு ஆசார்யனை ஆஶ்ரயித்து அவரிடம் உபதேசமாகப் இவையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. ராஜஸ, தாமஸ புராணங்களிலேயே கூறப்பட்டிருக்கிறது அவைகளை ப்ரமாணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று. மேலும் ப்ரஹ்ம வைவர்த புராணமும் சிவ புராணமும் ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் மற்றும் வைதிக சித்தாந்தத்திற்கு உண்மையான நிரூபணங்களாகாது. அவைகள் வேறு சிலருக்காக அருளப்பட்டவை, ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.


ராதா ராணி உண்மையா? எனில் அவள் மஹாலஷ்மி அவதாரமா? சாதாரண கோபிகையா? தென்னாசார்ய மற்றும் தேசிக சம்ப்ரதாயத்தவர்கள் ஶாஸ்த்ர ரீதியாக ராதாராணியை எப்படிப் பார்க்கிறார்கள்?

Vidwan’s reply:

ஸ்வாமி தேஶிகன் ராதா ராணி பற்றியான ஒரு விஷயத்தை “யாதவாப்யுதயத்தில்” சாதித்துள்ளார். ஆகையால் நம் ஆசார்யர்கள் எல்லோரும் ஒத்துக்கொண்டுள்ளனர். அவர் லக்ஷ்மீ பிராட்டியின் அம்சமாக இருப்பவர் என்பதையும் சாதித்துள்ளனர்.


அடியேன் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாமா? எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

பகவத் ராமானுஜாசார்யரின் வேதார்த்த ஸங்க்ரஹம் ஆரம்ப பாடம் படிப்பவர்களுக்கா? முறையாக ஸ்ரீ பாஷ்யத்தை கற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

அடியேன் வைஷ்ணவ ஆசார அனுஷ்டானங்களை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். ஸ்வாமி வேதாந்த தேஶிகரின் அதிகரண ஸாராவளி என்றால் என்ன?

Vidwan’s reply:

1. நாலாயிர திவ்ய ப்ரபந்தம் தாராளமாகச் சேவிக்கலாம். யாரிடமாவது திவ்ய ப்ரபந்தம் சந்தை சொல்லிக் கொள்ளவேண்டும். நம் GSPKவிலே இரண்டு வகுப்புகளாக திவ்ய ப்ரப்ந்தம் சந்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். மேலும் விவரங்களுக்குக் கீழேயுள்ள Telegram groupல் சேரவும்.

https://t.me/gspkstotras

2. பகவத் இராமானுஜரின் வேதாந்த ஸங்க்ரஹம் ஆரம்பப் பாடம் படிப்பவர்களுகென்று இல்லை. அதிலும் கடினமான விஷயங்கள் இருக்கின்றன. ஆகையால் அது எல்லாருக்கும் ஏற்றதானது. முறையாக ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள குருமுகமாகக் காலக்ஷேபம் செய்யவேண்டும். அதற்கு முன் அடிப்படையான ஸம்ஸ்க்ருத ஞானம், வ்யாகரணம், காவ்யங்காள் முதலானவைகள் வாசித்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஸ்ரீ பாஷ்யத்தை ஆசார்யன் மூலமாகக் கேட்கவேண்டும்.

3. ஸ்ரீவைஷ்ணவம் பற்றி நிறைய க்ரந்தங்கள் இருக்கிறது. வேதாந்த தேஶிகன், ஸ்ரீவைஷ்ணவ நெறிகள் என்று புத்தகம் அருளியுள்ளார். அதில் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி நிறைய இருக்கிறது. அப்புத்தகம் எல்லாவிடங்களிலும் கிடைக்கும். அதிகரண ஸாராவளி என்பது பகவத் இராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம், வேதாந்த ஶாஸ்த்ரத்தின் சுருக்கமாக ஶ்லோக வடிவில் இருக்கும். அதைப் புத்தகம் பார்த்து தெரிந்துகொள்ள முடியாது. காலக்ஷேபமாக கேட்டல் வேண்டும்.


எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்கள் பற்றிய ஶ்லோகம் இதோ:

ஆத்யம் ரங்கமிதி ப்ரோக்தம்
விமானம் ரங்கஸம்ஞிதம்

ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிம் ச
ஸாளக்ராமம் ச நைமிஶம் ।
தோயாத்ரிம் புஷ்கரம் சைவ
நரநாராயணாஶ்ரமம்

அஷ்டௌ மே மூர்தய: ஸந்தி
ஸ்வயம்வக்தா மஹீதலே
எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்களுக்கும், திருவஷ்டாக்ஷர மந்த்ரத்திற்கும் என்ன சம்பந்தம்? Vidwan’s reply:

பத்ரிகாஶ்ரமத்தில்தான் திருவஷ்டாக்ஷர மந்த்ர உபதேசம் நடந்த இடம். அதனால் அது விசேஷம். மற்றபடி வேறு எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.


10. 1. விசிஷ்டாத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மத்வாசார்யரின் ஸர்வமூல க்ரந்தங்களைச் சேவிக்கலாமா?

2. நான் என்பது ஶரீரமல்ல, ஜீவாத்மா என்று எப்படி உணர்வது? அந்தச் சிந்தனையுடன் அனைத்து கார்யங்களையும் ஆற்றுவது எவ்வாறு?

3. நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள கோபம், பொறாமை, மோஹம் முதலான தவறான பழக்கங்களை களைவது எப்படி?

Vidwan’s reply:

1. சேவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் சேவிப்பதற்கு நிறைய க்ரந்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் சேவிக்கலாம். எதனால் இந்தக் கேள்வி வருகிறது என்று தெரியவில்லை?

2. ஸ்வாமி தேஶிகன் சுலபமாக சாதிக்கிறார், என்னுடைய ஶரீரம் என்னுடைய கை, என்னுடைய கால் என்றெல்லாம் சொல்வதாலேயே ஶரீரம் வேறு நான் வேறு என்று தெரிகிறது. குறிப்பாக உறக்கத்தில் ஶரீரத்தைப் பற்றிய சிந்தனையில்லை ஆனால் ஆத்மாவைப் பற்றியதான சிந்தனை உண்டு. அந்த மாதிரி ரீதியில் புரிந்துகொள்ளலாம்.

அந்தச் சிந்தனையுடன் அனைத்து காரியங்களையும் ஆற்றுவது எவ்வாறு என்றால், மொத்தத்தையும் அப்படியே வைத்துக் கொண்டு அப்படியே செய்ய முடியாது. ஏன்னெறால் ஶரீரத்தோடு இருந்தால்தான் நாம் எதுவுமே செய்ய முடியும். ஶரீரம் இல்லாமல் நாம் எதுவுமே செய்ய முடியாது. அதனால் நாம் அந்த ஒரு ப்ரமத்தை தவிர்த்தால் போதும். நானும் ஶரீரமும் வேறு என்கிற ஒரு எண்ணத்தை நாம் வைத்துக்கொண்டால் போதும். அந்த ப்ரமத்தினாலே வரக்கூடிய தோஷங்களை எல்லாம் நாம் களைந்தால் போதும்.

அதையும் ஸ்வாமி தேஶிகன் சொல்லி இருக்கின்றார். உதாரணமாக யாராவது ஶரீரத்தைப் பற்றி தூஷணம் பண்ணினாலோ, கருப்பாக இருக்கின்றார் என்று சொன்னாலோ அதெல்லாம் ஆத்மாவில ஒட்டாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மேல் நான் கோபித்துக் கொள்ளாமல் இருக்கலாம், என்பது போல்.

3. இதற்காகத்தான் ஸ்வாமி தேஶிகன் சங்கல்ப சூர்யோதயம் என்கின்ற நாடகத்தைச் சாதித்திருக்கிறார். அதில் நல்ல ஞானம், வைராக்கியம், விஷ்ணு பக்தி, முதலான குணங்களை எல்லாம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மோசமான குணங்களை எல்லாம் குறைக்கலாம் என்றும். மேலும், பகவத் சந்நிதானம், பாகவதர்களுடன் நெருங்கிய தொடர்பு, காலக்ஷேபங்கள், இவை எல்லாம் முக்கியம் என்றும் சாதிக்கிறார். கோபம் வரும் பொழுது தேஶிகன் சாதிக்கிறார், கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் யார் மேல் கோபம் வருகிறன்தோ, அதற்கு உண்மையில் அவர்கள் நேர் காரணம் இல்லை. நாம்தான் காரணம். அவர்கள் மறைமுகக் காரணம் என்பது தெரியும். அதேபோல் பொறாமை என்று வரும் பொழுதும் நம்மிடம் இருக்கும் தோஷத்தை நாம் மறக்கும் பொழுது தான் பொறாமை வரும். நம்மிடம் இருக்கும் தோஷத்தை நாம் யோசித்துப் பார்த்தால் வராது.

பொதுவாக மோஹம் என்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் விவேகத்தை வைத்து மோஹத்தை நாம் ஜெயிக்க வேண்டும். இந்த விஷயங்களெல்லாம் சங்கல்ப சூர்யோதய நாடகத்தில் இருக்கின்றன.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top