ப்லவ – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஏன் எம்பெருமானார் எம்பெருமானை விடப் பெரியவர்? (ஒரு பாலகனின் கேள்வி)

Vidwan’s reply:

எம்பெருமானை நமக்குக் காட்டிக்கொடுத்தவரே எம்பெருமானார்தான். அவர் இல்லாவிட்டால் பெருமாளைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லாமலே போயிருக்கும்.

குறிப்புகள்

இவ்விஷயம் இராமானுஜ நூற்றந்தாதியில்,

”மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து, எங்கள் மாதவனே

கண்ணுற நிற்கிலும் கணக்கில்லா உலகோர்கள் எல்லாம்

அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே

நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே”

என்கின்ற பாசுரத்தில் சாதிக்கப்பட்டிருக்கிறது.

அடியேனின் குழந்தைக்கு நப்பின்னை யார் , ஆண்டாள் கூட கூறியிருக்கிறாரே என்றெல்லாம் கேட்க, அவர் நீளாதேவியின் அம்சம் என்று மட்டும் அடியேன் உரைத்தேன். நப்பின்னை பிராட்டி பற்றி விவரமாக சாதித்தருள ப்ரார்திக்கிறேன்.

Vidwan’s reply:

கண்ணனின் தாயாரான யசோதைக்கு, கும்பர் என்ற உடன்பிறந்த சகோதரர் ஒருவர் இருந்தார். அவரின் மகள் தான் நப்பினை பிராட்டி.

க்ருஷ்ணனின் முறைப்பெண் ஆவார், இவளை ஏழு காளைகளை அடக்கி கண்ணன் மணம் செய்துக்கொண்டான் என்று ஹரிவம்சங்களில் சரித்ரம் இருக்கின்றது. அவர் நீளாதேவியின் அம்சம் என்பதும் தெரிகிறது.

பகவான் என்பவன் விபு, ஜீவன் என்பது அணு; மேலும் பிரிக்க முடியாதது. பகவான் என்பவன் விபு என்றால் அவன் ஜீவனிலும் இருப்பான் என்று அர்த்தமாகுமா? அடியேன்.

Vidwan’s reply

பெருமாள் அந்தர்யாமியாக நம் ஜீவாத்மாவுக்குள்ளும் இருக்கின்றார், நம்முடைய ஆத்மாவுக்கும் ஆத்மாவாக அவன் இருக்கின்றான் என்பதில் ஒரு ஐயப்பாடும் வேண்டாம்.

குறிப்புகள்:

தேசிக நிர்வாகம் இக்கேள்விக்கு யாதெனில் ஜீவன் பிரிக்கமுடியாத அணுவானபடியால் உட்பிரிவு என்று ஒன்று கிடையாது. அதனால் உள்ளே பெருமாள் இருக்கின்றாரா என்ற கேள்வி ப்ரஸக்தி இல்லை. ஜீவனுக்கும் அந்தர்யமியாக இருக்கின்றான் என்று சொன்னால் பெருமாள் சம்பந்தப்படாத ஜீவனுடைய ப்ரதேசம் என்று ஒன்றும் கிடையாது என்று அர்த்தமாகும்.

ஆழ்வார்கள், அரங்கன் மற்றும் திருமலையப்பனை விட காஞ்சி வரதனுக்கு ஏன் குறைவான பாசுரங்கள் பாடியுள்ளனர்? ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் அவ்விரு க்ஷேத்ரம் போல் சம அளவு உயர்வு ஹஸ்திகிரிக்கு இருந்தும் ஏன் அத்தனை மகத்துவம் ஆழ்வார் பாசுரங்களில் காட்டப்படவில்லை? ஏதேனும் காரணம் உள்ளதா? தயைகூர்ந்து விளக்கவும்.

Vidwan’s reply

பொதுவாகவே, எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற அனைத்து சந்நிதிகளும், க்ஷேத்ரங்களும் மகத்தானவையாகும்.

குறிப்புகள்:

ஸ்வாமி தேசிகன், “முஹ்யந்த்யபங்குரதியோ முநி ஸார்வபௌமா:” என்று வரதராஜ பஞ்சாசத்தில் சாதித்திருக்கிறார். ஆழ்வார்கள் வரதனுடைய திவ்ய ஸ்வரூபத்தை பார்த்து பார்த்து, சேவித்து ஈடுபட்டு அதிலேயே மோஹித்து விட்டப்படியால் பாசுரங்கள் குறைவாக பாடியுள்ளனர் என்று கருத்து. அதனால் தான் பாசுரங்கள் குறைந்தாலும் கோயில், திருமலைக்கு இருக்கும் அதே பெருமை துளியும் குறையாமல் இங்கேயும் இருக்கின்றது.

பரந்யாஸம் செய்த ஸ்ரீவைஷ்ணவர்கள், அத்வைதிகளிடம் பகவத்கீதை பாகவதம் போன்றவை கற்கலாமா?

Vidwan’s reply

ஸ்ரீவைஷ்ணவர்கள் அத்வைதிகள் இடம் பகவத் கீதை போன்றவற்றை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்புகள்:

பாகவதம் என்பது பெருமாளுடைய வைபவத்தைத்தான் சொல்கிறது அதனால் அதைக் கேட்பதில் ஒன்றும் விரோதம் இருக்காது.

பகவத்கீதை பொறுத்தவரை, அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் பெரிய வித்யாசம் உண்டு அதனால் அதை அத்வைதிகளிடம் கேட்பது உசிதமில்லை.

பூர்வ பட்சமாக அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கேட்கலாமே தவிர, நம்முடைய சித்தாந்தமாகவோ அல்லது நம் அனுஷ்டானத்திற்காகவோ அவர்களிடமிருந்து கேட்க முடியாது. நம்முடைய காலக்ஷேபம் என்பதாகவும் அதைக்கேட்க முடியாது.

ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் ஆழ்வாரின் நாள் ஊர் திங்கள் பாசுரம் எண்ணிக்கை போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் எவ்வம்சம் என்பதை மட்டும் குறிப்பிடாததற்கு தனிக்காரணம் உண்டா? இல்லை அடியேனின் புரிதலில் தவறு இருக்கின்றதா?

Vidwan’s reply

ஆழ்வார்கள் நித்ய ஸூரிகளின் அவதாரம் அதனால் அவர்களின் குலம் முக்கியமல்ல. அவர்களை நாம் அவ்வாறாகவே நினைக்க வேண்டும். அவர்களின் திருநக்ஷத்ர தினத்தை நன்கு கொண்டாட வேண்டியே அவற்றை ஸ்வாமி ப்ரபந்த ஸாரத்தில் குறிபிட்டுள்ளார் என்பதுதான் தாத்பர்யம்.

ஆழ்வார்களின் திருநக்ஷத்ர நாளை வருடாவருடம் கொண்டாடவும், அன்று உறசவங்கள் ஏற்படுத்தவும், அன்றைய தினம் விசேஷமாக ஆழ்வார் ப்ரபந்தங்களைப் பாராயணம் செய்ய வேண்டுமென்பதாலும் அதைக்குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்வார்களில் பலர் அயோனிஜர்காளாக திருவவதாரம் செய்தால் அவர்களின் வம்சம் பற்றி அத்தனைக் குறிப்பாக அறிய வேண்டுமென்பதில்லை.

“அடியேனுக்குப் பெரியாழ்வார் பற்றிய ப்ரபந்தசாரம் பாசுரத்தில் ஒரு சந்தேகமுள்ளது, ஸ்வாமி தேசிகன் கடைசி வரியில் பாசுர எண்ணிகையை “நானூற்றுஎழுபத்திமூன்று” என்பதற்கு பதில் “நானூற்றூஎழுபத்தொன்றிரண்டும்” என்று அருளியதற்கு தனிக் காரணம் உள்ளதா? விளக்க ப்ரார்திக்கிறேன்.

Vidwan’s reply:
பெரியாழ்வார் திருமொழியில் முதல் இரண்டு பாசுரங்களான “பல்லாண்டு பல்லாண்டு” மற்றும் “அடியோமோடும் நின்னோடும்” தனிச்சிறப்புடையவை. அனைத்து நித்யானுசந்தானத்திலும் இவ்விரு பாசுரங்களில் இருந்துதான் தொடங்குவார்கள். மேலும் இவ்விரண்டு பாசுரங்களையுமே சேர்த்தே அனுசந்திக்கும் (தனிப் பாசுரங்களாக இருந்தபோதிலும், இரண்டையும் ஒன்றாக) வழக்கு இன்றளவும் உள்ளது. ஆகையால் “நானூற்றூஎழுபத்தொன்றிரண்டு” என்ற எண்கணக்கு வருகிறது.

குறிப்புகள்:

பொதுவாக ஒரு பாசுரத்திலோ, கவிதையிலோ, விருத்தத்தின் அடிப்படையில் அவ்விருத்தத்திற்கு தக்கவாறு எழுத்துக்கள் கொண்டு அமைப்பார்கள். ஆக எண்ணாசிரியவிருத்தத்திற்கு பொருந்தும்படியாக இருக்கவே இங்கே இப்பாசுரத்தில் “நானூற்று எழுபத்தொன்றிரண்டும்” என்று வந்திருக்கின்றது.

“நானூற்று எழுபத்தொன்றிரண்டும்” ஸ்வாமி சந்தஸ்சின்படி அமைத்திருக்கின்றார் என்றாலும், ஒரு சிறப்பு அர்த்தத்தையும் உள்வைத்து கொடுத்தது நம் கவி சிம்மமான ஸ்வாமினுடைய தனிச்சாமர்த்தியம்.

ஸ்ரீமத் அபிநவ வாகீஷ பிரம்மதந்திர ஸ்வதந்தர பரகால ஸ்வாமியின், ஆசார்யன் தனியன் வேண்டும்,அடியேன்.

Vidwan’s reply:

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top