ப்லவ – ஐப்பசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


ஆஶௌச காலத்தில், ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஸ்தோத்ர பாடங்கள் சேவித்தல்/ஸந்தை சேவித்தல் ஆகியவை கூடுமா. புருஷர்கள் வேதம் ஜபித்தல்/ஸந்தை சேவித்தல் பண்ணலாமா. குறிப்பாக, பங்காளிகளுக்கும் மற்றபடி 3/1.5 நாள் (90 நாழிகை) தீட்டிற்கும் இது பொருந்துமா? அடியேன் தன்யோஸ்மி.

Vidwan’s reply:

வ்ருத்தித்தீட்டு அல்லது தூரத்து பந்துவின் இறப்புத்தீட்டாக இருந்தால், ஸ்தோத்ர பாடங்களைச் சேவிப்பதில் தவறில்லை.

ஆனால், வேத அத்யயனம் செய்வதும் , ஸந்தை சேவிப்பதும், மற்றவர்களுக்கு ஸந்தைச்சொல்லி வைப்பதும் வழக்கம் கிடையாது. இது பத்து, மூன்று மற்றும் ஒன்றரை நாட்கள் என, எல்லாவிதமானத் தீட்டுகளுக்கும் பொருந்தும்.


சாஸ்த்ரத்தில், ஒருவரின் ஸ்தானத்திற்கா? அல்லது வயதிற்கா? எதற்கு முக்கியத்வம் தரப்பட்டிருக்கிறது?

உதாஹரணமாக ஒருவரின் தம்பி அவரின் அண்ணனின் பத்னியை விட பெரியவராக இருந்தால், அந்த நபர் அவரைச் (மன்னியை) சேவிக்கலாமா? இவ்விடத்தில் வயதுக்கு முக்கியத்வம் உண்டா? அதேபோல், தன் பர்தாவின் தங்கையும் அவரின் ஆத்துகாரரும், அந்தப் பெண்ணின் மன்னி, சிறிய வயதாக இருந்தபோதும் தன் அண்ணனின் பத்னி என்பதால் தன் பர்தாவுடன் அவரைச் (மன்னியை) சேவிக்கலாமா? தெளிவுப்படுத்த ப்ரார்த்திக்கிறேன். மேலும், இக்காலத்தில் பலர் இதையெல்லாம் பார்ப்பதே இல்லை. மேலும் அக்கா, அண்ணா என்றெல்லாம் உறவு முறை வைத்துக்கூப்பிடுவதுமில்லை? இது கலியின் காரணமா? அடியேன்.

Vidwan’s reply:

சாஸ்த்ரங்களில் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருந்தாலும், தற்கால ஆசாரத்தில், தன்னைவிட வயதில் சிறியவளான மன்னியை மச்சினர் சேவிக்கும் வழக்கமில்லை. அண்ணாவுடன் சேர்ந்து நிற்கும்போது சேவிக்கலாம். ஆனால் தனியாகச் சேவிக்கும் வழக்கம் கிடையாது.

நாம் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே அக்கா, அண்ணா என்கின்ற உறவு முறைகளைச் சொல்லித்தர வேண்டும். அவர்களுக்குத் தானாக வராது நாம்தான் அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.


ஸமாஶ்ரயண / பரந்யாஸ / காலக்ஷேப ஆசார்யன் (ஸன்யாஸ ஆஸ்ரமம் ஸ்வீகரிக்காதவர்) பரமபதித்தால் சிஷ்யனுக்கு எவ்வளவு நாள் தீட்டு? அடியேன்.

Vidwan’s reply:

சன்னியாசியாக இல்லாத ந்யாதியாகவும் இல்லாத வேறு எந்த உறவும் இல்லாத ஆசார்யன் பரமபதித்தால், சிஷ்யனாக மட்டுமே இருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு என்று சில புஸ்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அனுஷ்டானத்தில் ஒரு நாள் தீட்டு என்பதாக வழக்கத்தில் உள்ளது.


1. ஶ்ராத்தங்களில் ப்ரும்மசாரிகளை ஏன் நிமந்த்ரிக்கூடாது? 2. ஶ்ராத்தங்களில் வரிக்கும் ஸ்வாமிகளுக்கு கோத்ர நியமம் என்ன?

Vidwan’s reply:

ஶ்ராத்தங்களில் க்ருஹஸ்தர்களை நிமந்த்ரிக்க வேண்டுமென்று இருக்கின்றது. சன்னியாசிகளையும் நிமந்த்ரிக்கலாம். ப்ரும்மச்சாரிகளை நிமந்த்ரிக்கக்கூடாது என்று வ்யக்தமாக இல்லை. ப்ரும்மச்சாரிகள் நிமந்த்ரணம் சொல்கின்றார்கள். ஆனால், அவர்களை பித்ரு ஸ்தானத்தில் வைக்கும் வழக்கம் கிடையாது.

மூன்று ஸ்வாமிகளை நிமந்த்ரித்திருந்தால், ப்ரும்மச்சாரியை விஷ்ணுவாக வைப்பார்கள். இரண்டு ஸ்வாமிகள் இருந்தால் ப்ரும்மச்சாரியை விஸ்வேதேவராக வைப்பார்கள். தனியாக ஒரு ப்ரும்மச்சாரியை பித்ரு ஸ்தானத்தில் வைத்து ஶ்ராத்தம் பண்ணும் வழக்கம் கிடையாது.

ஸ்வகோத்ரங்கள், யாருக்கு ஶ்ராத்தம் பண்ணுகின்றோமோ அவருடைய கோத்திரத்தில் உள்ளவரை நிமந்த்ரணம் சொல்லக்கூடாது. மனுஷ்யா கிடைக்கவில்லையென்றால், பித்ரு ஸ்தானத்தை விட்டுவிட்டுப் பாக்கி ஸ்தானங்களில் நிமந்த்ரம் சொல்வது வழக்கத்தில் இருக்கின்றது.


பரம பதத்தில் நமக்குக் கிட்டும் கைங்கர்யம் யாவை? எந்த மாதிரியான கைங்கர்யங்கள் செய்ய பார்ப்த்தமாகும்? தெளிவிக்க பார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

பரமபதத்தில் நாம் எந்த கைங்கர்யங்களைச் செய்ய நினைத்தாலும் அவற்றைச் செய்ய முடியும்.

நித்யசூரிகள் நியதமாக செய்யும் கைங்கர்யத்தைச் செய்ய வாய்ப்பில்லை.

நாம் பரமபதத்தை அடைந்தபின், அங்கு மத மாத்சர்யங்கள் ஒன்றும் இல்லாததால் அடுத்தவர்களுடைய கைங்கர்யங்களை நாம் பண்ண வேண்டும் என்கின்ற எண்ணமே நமக்கு வராது.

மேலும், அங்குச் சென்ற பின் “நம இத்யேவ வாதி3ன:” என்று பெருமாளை “நம: நம:” என்று சொல்லி அவரையே சேவித்துக் கொண்டிருப்போம். ஸ்வாமி தேசிகன் “பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே” என்று சாதித்திருக்கின்றப்படி பெருமாளுக்குப் பல்லாண்டு பாடி அவரைச் சேவித்து கொண்டு இருப்பதே நாம் செய்யும் கைங்கர்யமாகும்.


ஒருவருக்குப் பிறப்பு தீட்டு வந்தால் ,எந்த மாதிரியான நித்ய கர்மானுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்? எவை தவிர்த்தல் வேண்டும்? என்று கூற விண்ணப்பிக்கின்றேன்.

Vidwan’s reply:

நித்யகர்மானுஷ்டங்களைப் பொறுத்தவரை, பிறப்புத்தீட்டுக்கும், இறப்புத்தீட்டுக்கும் எந்த ஒரு வித்யாசமுமில்லை.இறப்புத்தீட்டில் எதெல்லாம் கூடாதோ அதெல்லாம் பிறப்புத் தீட்டிலும் கூடாது தான்.

ஆகையால், இறப்புத்தீட்டின் சமயம் எப்படி நித்யகர்மா செய்கின்றோமோ அதேபோல் வ்ருத்தித்தீட்டின் போதும் ஸந்த்யாவதனத்தை மாத்திரம் விடாமல் செய்துகொண்டும், ஜபத்தை மௌனமாக செய்துகொண்டும், அங்கந்யாஸ, கரந்யாஸாதிகளைத் தவிர்த்தும் செய்தல் வேண்டும்.

இறப்புத்தீட்டு பலம் என்றும், பிறப்புத்தீட்டு விழுப்புக்குச்சமம் என்றும் சொல்லப்பட்டிருந்தாலும், கலக்கும் வழக்கம் கிடையாது.


சிலர் ஶ்ராத்தம் முடிந்தவுடனே பரேஹணி தர்ப்பணம் செய்து விடுகின்றனர், இது சரியா? இல்லை என்றால் இதற்கு பரிஹாரம் உண்டா? அடியேன்.

Vidwan’s reply:

ஶ்ராத்தாங்க பரேஹணி தர்ப்பணம் என்பதாக இதற்குப் பெயர். பரேஹணி என்றச் சொல்லுக்கு மறுநாளில் என்று அர்த்தம் அதனால் அதை மறுநாள் தான் செய்ய வேண்டும் ஆகையால் அதை அன்றே செய்வது சரியில்லை.

அந்த பரேஹணி தர்ப்பண ஶ்ராத்ததை மாதா பித்ருக்களுக்கு மறுநாள் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பரேஹணி தர்ப்பணத்தை ஶ்ராத்தத்தன்றே செய்ய வேண்டும். அதிலும் கர்த்தா ஜீவித் பித்ருக்காளாக இருந்தால் அவர் பரேஹணி தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியமில்லை.


தீபாவளியன்று அமாவாஸை 9 மணிக்கு மேல் வந்தால் எண்ணெய் ஸ்நானம் செய்யலாமா? பின்பு மீண்டும் ஸ்நானம் செய்து தர்ப்பணம் பண்ணலாமா?

Vidwan’s reply:

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து சூரியோதயத்திற்கு முன் (பிம்மாலை வேளையில்) ஸ்நானம் செய்தல் வேண்டும்.

அமாவாஸை தர்ப்பணத்திற்கு மறுபடியும் தீர்த்தாமாடி தர்ப்பணம் செய்வது வழக்கம். தர்ப்பணத்திற்கு காலம் அபரான காலம், அதனால் இரண்டுக்கும் விரோதமில்லை.


பாகவதர்கள் என்று யாரை குறிப்பிடுகின்றோம்? யாரெல்லாம் பாகவதர்கள்? விளக்க ப்ராத்திக்கிறேன் ஸ்வாமி.

Vidwan’s reply:

பகவானுடைய பக்தர்கள் எல்லாரும் பாகவதர்கள். அதனால் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லாருமே பாகவதர்கள் தான். அப்ராமணர்களாக இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை, பாகவதாள் என்று விசேஷமாகச் சொல்லும் ஒரு வழக்கமும் இருக்கின்றது.


பொதுவாக அகத்தில் விளக்கேற்ற எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும்?

Vidwan’s reply:

பொதுவாக அகத்தில் நல் நல்லெண்ணெய் கொண்டு தான் விளக்கேற்றுவார்கள். நல்ல நெய் கொண்டு விளக்கேற்றுவதும் உசிதமானது தான்.


அடியேன் ஸ்வாமி, ரஜோ தமோ என்ற இதர குணங்களின் ஆதிக்கத்தைத் தாண்டி ஒருவர் ஸ்தவ குணத்தை எவ்வழியில் வளர்த்துக்கொள்ளலாம்? சில நேரங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமலும் போகின்றது ஏதேனும் வழி உண்டா தயை கூர்ந்து தெளிவிக்க பார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

ஸத்வ குணத்தை வளர்த்துக்கொள்ள கோபம் வராத, வைராக்கியம் நிறைந்த ஸாத்வீகர்களான மாஹங்களுடன் நெருங்கிப்பழக வேண்டும்.

கோபம் முதலானவைகளைக் கட்டுப்படுத்த முடியாத சமயத்தில் சிலவற்றை மனதில் அனுசந்திக்கலாம்,

சிற்றஞ்சிறுகாலே பாசுரத்தையோ அல்லது

“த்வை ரக்ஷத்தி ரக்ஷகை:” என்ற காமாஸிகாஷ்டகத்தின் ஸ்லோகத்தையோ அல்லது

16 (அ) 32 முறை “ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஶன” என்ற நாமத்தை ஜபிக்கலாம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது அச்சமயத்தில் அனுசந்திக்கும் வழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

பகவத் பாகவதர்களின் கதைகளைக் கேட்பதும் படிப்பதுமாய், பகவத் சிந்தனையுடனேயே இருந்தால் ஸத்வ குணம் வளரும்.


ஶரணாகதிக்குப்பின், நாம் செய்யும் எல்லா கைங்கர்யங்கள் மாலை தொடுத்தல்,ஆழ்வார்கள் திருநக்ஷத்ரம் கொண்டாடுவது, கோயிலுக்குச் செல்வது, திவ்யதேசங்கள் சென்று பெருமானை அனுபவிப்பது, போன்றவை பலனை எதிர்பாராமல் செய்யலாமா? அல்லது எந்த கைங்கர்யமும் செய்யாது ஆத்து பெருமாள் சேவித்துக் கொண்டு காலத்தைக் கழிக்கலாமா எது உத்தமம்? தயவு கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டிக்கொள்கிறேன்.

Vidwan’s reply:

ஶரணாகதிக்குப்பின் கோயில்களுக்குச் சென்று நம்மால் முடிந்த கைங்கர்யம் செய்வது உத்தமமான கார்யம். ஸ்ரீபாஷ்யகாரர் நியமித்த கைங்கர்யங்களில் இதுவும் ஒன்று, அவசியம் செய்தலும் வேண்டும்.

அவை இயலவில்லை என்றால், ஆத்து பெருமாளுக்குப் பூ தொடுத்தல், பாராயணம் செய்தல் போன்ற கைங்கர்யங்களும் செய்யலாம்.

இதில் எது உசத்தி எது தாழ்த்தி என்ற பேதங்களுக்கு இடமில்லை. முடிந்தால் திருக்கோயில்களில் சென்று கைங்கர்யம் செய்யலாம், இல்லையென்றால் ஆத்துப்பெருமாளுக்குச் செய்யலாம்.


உபநயனம், ஸ்ரீ மந்தம், ஷஷ்டி அப்த பூர்த்தி போன்ற தினங்களில் உதக ஸாந்தி செய்கிறோம். உதக ஸாந்தி செய்வது காலையிலா அல்லது மாலை வேளையிலா. எது உசிதம். தாஸன் அடியேன்.

Vidwan’s reply:

உதகஶாந்தி, காலையோ மாலையோ எந்த வேளையிலும் செய்யலாம். இரண்டும் சரி தான்.

மேலும் இராகு காலம், எமகண்டமில்லாத உசிதமான வேளையில், அது காலையோ மாலையோ எப்போது எல்லாருக்கும் சௌகர்யப்படுகிறதோ அந்த வேளையில் உதகஶாந்தி செய்யலாம்.


பண்டிகை அன்று ஏகாதசி வரின் எதற்கு முக்கியத்வம் தர வேண்டும்? பண்டிகை கொண்டாடலாமா? அன்று என்ன தளிகை செய்ய வேண்டும்? அடியேன்.

Vidwan’s reply:

பண்டிகை அன்று ஏகாதசி வந்தால் உபவாசம் இருக்க முடிந்தவர்கள், உபவாசம் இருக்கலாம். அப்படியிருக்க முடியாதவர்கள், ஏகாதசிக்கு விரோதமில்லாமல் (அரிசியைத் தவிர்த்து) தளிகை செய்து பண்டிகையைக் கொண்டாடலாம்.


பரந்யாஸம் ஏன் செய்தல் வேண்டும்? செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தால் என்ன செய்தல் வேண்டும்? மேலும், செய்யவிடாமல் பல தடங்கல்கள் வருகின்றன. தடைநீங்க ஏதேனும் வழி உண்டா?

Vidwan’s reply:

ஸ்வாமி தேசிகன் இதற்கான வழியை அபீதிஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தில் சாதித்துள்ளார். எந்த ஸ்லோகம் என்பதை விரிவாக அறிய கீழே உள்ள link ஐ click செய்யவும்.


சாஸ்த்ரம் என்றால் என்ன? ஸம்ப்ரதாயம் என்றால் என்ன? இவ்விரண்டின் முக்கியத்துவம் யாது? தெளிவிக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:

இக்கேள்வியின் பதிலை அறிய கீழே உள்ள காணொளியின் linkஐ click செய்யவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top