ப்லவ – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


பூமா தேவி மற்றும் நீளா தேவி என்பவர்கள் யார்? அவர்களும் ஸ்ரீ தேவியை போல் விபுவா? அவர்கள் ஈஶ்வர கோடியையா அல்லது ஜீவ கோடியைச் சேர்ந்தவர்களா?

Vidwan’s reply:
ஸ்ரீதேவி, பூமா தேவி, நீளா தேவி என இவர்கள் மூவரும் எம்பெருமானின் தேவிகள் என்று ப்ரமாணங்கள் இருக்கின்றது.

அதில் பெரிய ப்ராட்டியார் ஸ்ரீதேவியானவர் ஈஶ்வரியாக விபுவாக இருக்கிறார்.

பூமா தேவியும், நீளா தேவியும் அப்படி விபுவாக இருப்பதாக ப்ரமாணமில்லை. ஆகையால் அவர்கள் ஜீவர்கள், நித்யசூரிகள் என்பதாக கூறுவர்கள்.


த்ரோணாச்சார்யர் (அப்போதைய சேனாதிபதி) மிகச்சிறந்த ஆசானாக இருந்தபோதிலும் மற்ற மஹாரதிகளின் வழியில் தானும் சேர்ந்து ஏன் அபிமன்யுவை கொல்ல துணைநின்றார்? அதில் க்ருப்பாச்சார்யரும் ஏன் பங்குக்கொண்டார்? ப்ராமணர்களாக இருந்ததும் த்ரோணாச்சார்யர் மற்றும் க்ருப்பாச்சார் மஹாபாரத யுத்தத்தில் ஏன் கலந்துக்கொண்டனர்?

Vidwan’s reply:
த்ரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் இவர்கள் எல்லாரும் சேர்ந்து அபிமன்யுவை வதம் செய்தது ந்யாயமில்லை என அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்று தான். ஆனால் யுத்த சமயத்தில், அவனை அப்படியே விட்டு விட்டால் ஆபத்து என்றும், சைன்யத்தை நாசம் செய்து விடுவான், இன்னும் சிலரை சகாயத்திற்கு கூட்டிக்கொண்டு வர இயலுவான் என்று யுத்தகளத்தில் அவர்கள் மனதில் எழுந்திருக்கும் ஆகையால் அதர்ம யுத்தம் செய்தாவது இவனை கொல்ல வேண்டும் வேறு வழியில்லை என்று நினைத்திருப்பர். இது போல் தான் பாண்டவர்களும் பல யுக்த்திகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

யுத்தத்தில் வேறு வழியில்லை எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென வரும் போது நிலைத்தவறி நடப்பது மஹாபாரத யுத்தத்தில் நாம் பார்க்கின்றோம்.

த்ரோணாச்சார்யார், க்ருபாச்சார்யார் இருவரும் ப்ராமணர்கள் என்ற கேள்விக்கு, ப்ராமணர்கள் சில சமயம் வேறு வழியில்லாது போனால் க்ஷத்ரிய தர்மத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறது. அந்த ரிதீயில் தேசத்தைக் காக்க வேறு வழியில்லாமல் க்ஷத்ரிய தர்மத்தை எடுத்திருப்பார்கள் என்பதாக, சாமாதனத்திற்காக நாம் கொள்ளலாம்.


அடியேன், பெருமாளின் பரசுராம அவதாரத்தின் முக்கியத்துவம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?

Vidwan’s reply:
துஷ்ட க்ஷத்ரியர்களைக் கொல்லுவதற்காக பரசுராம அவதாரம்.

அவர் காலத்தில் ஏகப்பட்ட ஏகப்பட்ட ராஜாக்கள், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ராஜா இருந்தார்காள். 10 ஊருக்கு ஒரு ராஜா என்பது போலெல்லாம் நிறைய ராஜாக்கள் இருந்தனர். அவர்கள் இஷ்டம் போல் க்ஷத்ரிய தர்மமெல்லாம் பின்பற்றாது தான் வைத்தது தான் சட்டம் என்று சொல்லி துஷ்டர்களாக பல பேர் பரவி இருந்தபோது அவர்களை எல்லாம் ஒழிக்க வேண்டிய நிலை இருந்தது.

உண்மையான நல்ல சூர்ய வம்சம், சந்திர வம்சத்தில் வந்த க்ஷத்ரியர்கள் எல்லாரும் தர்ம வழியில் பரிபாலனம் செய்து வந்தனர்.அவர்களை பரசுராமர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் க்ஷத்ரியர்கள் எனச் சொல்லிக்கொண்டு துஷ்டர்களாக கொடுங்கொல் ஆட்சி செய்து தர்மத்தைத் தழைக்கவிடாது செய்தவர்களை அழித்தார்.

இதற்கு விஸ்தாரமாக தயா ஶதகம் ஸ்லோகத்தில் இருக்கிறது, அந்த ஸ்லோகத்தின் அனுபவம் பெற கீழே உள்ள linkஐ click செய்யவும்.


வராஹ அவதாரத்தில், எம்பெருமான் பூமாதேவியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்கின்றார். ப்ரளயத்தின் போது, எம்பெருமானின் நாபியில் அனைத்தும் (எல்லா உலகங்களும்) வைக்கப்படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு பூமி, ஹிரண்யாக்ஷன் இருப்பதைக் காண்கிறோம். இந்த நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன? சிருஷ்டிக்கு முன்பா அல்லது பின்பா? இதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்?

Vidwan’s reply:
ஸ்ருஷ்டியில் ஆதிகாலத்தில் அதாவது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் பொழுது நடக்கின்ற ஸ்ருஷ்டிக்கு “ஸமஸ்த” ஸ்ருஷ்டி என்று பெயர்.

அதில் ஒவ்வொரு தத்துவத்தையும் பெருமாள் தனித்தனியாக ஸ்ருஷ்டித்து, அதிலிருந்து தான் இந்தப் பூமி முதலானவைகளைப் பெருமாள் ஸ்ருஷ்டிக்கிறார். அப்படி பண்ணும்பொழுது ப்ரம்மாண்டம் என்பதை ஸ்ருஷ்டித்து , அதில் ப்ரம்மாவை ஸ்ருஷ்டிக்கிறார். ப்ரம்மாவைக்கொண்டு பெருமான் மேலே ஸ்ருஷ்டிகளை நடத்துகிறார்.

இந்த இரண்டு ஸ்ருஷ்டிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தவை இவை. ப்ரம்மாவைக் கொண்டு பூமியில் இன்னும் ஜீவராசிகளை ஸ்ருஷ்டிக்கும் பொழுது அது முடியாமல் போகின்றது. அப்பொழுதுதான் இந்த பூமியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியில் கொண்டு வர இரண்யாக்ஷனை சம்ஹாரம் பண்ணி ப்ரம்மாவுக்கு பெருமாள் சகாயம் பண்ணுகிறார் என்பதாக இருக்கின்றது.


சில இராமாயணப் பதிப்புகளில் தாரா (வாலியின் மனைவி) க்ஷீர சாகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா? அதற்கான உண்மையான குறிப்பப எதிலாவது கூறப்பட்டுள்ளதா? பொய் என்றால், அவள் எப்படி வந்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

Vidwan’s reply:
இது வால்மிகீ இராமாயணத்தில் இல்லாத விஷயமாக இருக்கிறது. இதைப் பற்றி வேறு எங்காவது குறிப்பிருக்கிறதா என்று பார்த்துச் சொல்கிறோம்.


உங்கள் யூடியூப் சேனல்களிலிருந்து ஸ்தோத்ரங்கள் மற்றும் பிரபந்தங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய வரிசையைக் கொண்ட அட்டவணையை இடுகையிட முடியுமா? சில காரணங்களால் என்னால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கலந்துகொள்ள முடிவதில்லை.ஒவ்வொரு பதிப்பிற்கும் டெலிகிராம் சேனலைப் பின்தொடர முடிவதில்லை. நமது சம்ப்ரதாயத்தை ஆஃப்லைனிலும் கற்க என்னைப் போன்ற பாகவதர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அடியேன் தன்யாஸ்மி.

Vidwan’s reply:
இது தான் வரிசை என்று குறிப்பாக இல்லை. இருப்பினும், ஸுதர்ஶனாஷ்டகம், காமாஸிகாஷ்டகம், பரமார்த்த ஸ்துதி, தசாவதார ஸ்தோத்ரம் என சிறு ஸ்தோத்ரங்கள் தொடங்கி பின் தயா ஶதகம் போன்ற பெரிய ஸ்தோத்ரங்களைத் தங்களுக்கு முடிந்த நேரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் சந்தை வீடியோ தொகுப்பிலிருந்து Stepwise ஆக சுலபமாய் கற்கலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top