ப்லவ – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்


அடியேன் கேள்விப்பட்ட வரை, தாயார் கூர்மாவதாரத்தின் பொழுது மந்தர மலையிலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படியென்றால் தாயாரும் உயர்ந்த ஜீவாத்மாவா? மற்றும் பெருமாளின் முன் அவதாரங்களில் தாயார் இல்லையா? என் மனதும் இதை ஏற்க மறுக்கிறது. தாங்கள் என்னை மன்னித்து எனது ஐயத்தைப் போக்க ப்ராத்திக்கிறேன்.

Vidwan’s reply:

பெருமாள் எப்படி இராம, க்ருஷ்ணன், கூர்மாதி அவதாரங்கள் செய்கின்றாரோ, அதே போலே பிராட்டியும் அவதாரம்செய்கின்றாள்.

புதியதாக உண்டாவதில்லை. ஆகையால், பிராட்டி ஜீவகோட்டியில் சேர்ந்தவள் அல்லள்.

பிராட்டி, ஈஶ்வரகோட்டியில் பெருமாளோடேச் சேர்ந்தவள்.


பூர்வர்களின் ஸ்ரீஸூக்திகள் என்றால் என்ன? அடியேன்.

Vidwan’s reply:

இக்கேள்வியின் விடையை, முந்தைய சுதர்சனம் இதழில் காணவும்.


அடியேன் ஸ்ரீமத் அஹோபில மடத்தைச் சேர்ந்தவள், அடியேனின் ஆசார்யன் பற்றி அறிய விரும்புகின்றேன்.

Vidwan’s reply:

ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆசார்யர்கள், சம்ப்ரதாயம் குறித்து பல புத்தகங்கள் இருக்கின்றன.

அதேபோலே GSPKயிலும் ஆசார்யர்களின் திருநக்ஷத்ர வைபவமும், உபன்யாசங்களும் நடக்கின்றது அதில் அந்வயித்துக்கொள்ளலாம். மேலும் பல வலை தளங்களும் இருக்கின்றது.


அடியேன் சம்ப்ரதாயம் மற்றும் அனுஷ்டானங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். எப்படி அறிவது என்ற வழியை தயை கூர்ந்து தெரிவிக்கவும்.

Vidwan’s reply:

சம்ப்ரதாயம் பற்றி தெரிந்துக்கொள்ள எங்களின் கீழ் கண்ட Telegram குழுக்களில் சேர்ந்து பயனடையவும்.

https://t.me/dgspk

https://t.me/gspkstotras

https://t.me/sampradayamanjari

மேலும் பல மாஹான்களின் உபன்யாசத்தை கேட்டு அனுபவிக்கவும், ஸ்தோத்ர பாடம், ப்ரபந்தங்கள் கற்றுக்கொள்ளவும் கீழே உள்ள எங்கள் YouTube Channelஐ subscribe செய்யவும்

https://youtube.com/c/GlobalStotraParayanaKainkaryamGSPK

https://www.youtube.com/c/SampradayaManjari/


நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் : திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருமொழி, பெரியாழ்வார் திருமொழி என அனைத்துப் பதிகங்களுக்கு தலைப்புள்ளது. இத்தலைப்பின் தாத்பர்யம் என்ன என்பதை சாதித்தருள வேண்டுகிறேன். எதைக்கொண்டு இத்தலைப்புகள் வகைப்படுத்தப்பட்டன?

Vidwan’s reply:

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என்பது புத்தகம் அல்ல அது ஒரு தொகுப்பு.

24 ப்ரபந்தங்களைச் சேர்த்து, தொகுத்தது நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என ப்ரபந்த சாரத்தில் ஸ்வாமி தேசிகன் சாதித்திருக்கிறார். மேலும் நம் சம்ப்ரதாயத்தில் ஆசாரியர்கள் அப்படி ஏற்படுத்தியுள்ளனர்.

12 ஆழ்வார்கள் அருளிய ப்ரபந்தங்களை, 24 தலைப்புகள் கீழ், 24 ப்ர்பந்தங்களாக தொகுத்துள்ளனர். பெரியாழ்வார் அருளியதை பெரியாழ்வார் திருமொழி என்றும், ஆண்டாள் அருளியதை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்றும் வகுத்துள்ளனர்.

திருவாய்மொழி, திருவிருத்தம் என்பெதெல்லாம் அந்தந்த ப்ரபந்தத்தின் தலைப்புகள்.


அடியேன், நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் காமதேவனை ப்ரார்த்திக்கின்றாள். இதற்கு உத்தமூர் ஸ்வாமியின் வ்யாக்யானத்தில், “ஸ்வாமி தேசிகன், ஆண்டாள் நைமித்திக கர்மா செய்கிறாள் என்றும் மேலும் அவள் காமதேவனின் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானைத்தான் ப்ராத்திக்கின்றாள் என்று கூறுகிறார்” என இருக்கின்றது. மேலும் , ஸ்வாமி தேசிகனின் “நாச்சியார் க்ருஷ்ணணைப் பெறுகைக்காகப் பண்ணின காமதேவார்சனம் ஶ்ருங்கார சமாத்யனுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம்” என்ற வரிகளும் அந்த வ்யாக்யானத்தில் உத்தமூர் ஸ்வாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வரிகள் ஸ்வாமி தேசிகனின் எந்த க்ரந்தத்தில் வருகின்றது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

ஆண்டாள் செய்த காமதேவ அர்ச்சனை பற்றி ஸ்வாமி தேசிகன் “பரமத பங்கம்” என்ற க்ரந்தத்தில் சாதித்திருக்கிறார்.


பகவானின் பூர்ண, சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களைப் பற்றி விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களில் ஜீவனைத்‌ தேர்ந்தெடுத்து அவர்களுள் எம்பெருமான் ப்ரவேசிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

ஸ்வாமி தேசிகன், பகவானின் பூர்ண, சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களைப் பற்றி தத்வத்ரயத்தில் சாதித்திருக்கிறார்.

எம்பெருமானின் பூர்ண அவதாரமென்பது இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்.

அவரின் பல அவதாரங்கள் ஆவேச அவதாரம் தான், ஒரு ஜீவனுக்குள்ளே தானோ அல்லது தனது சக்தியை ஆவேசம் செய்து அவதார காரியங்களை நடத்திக் கொள்கிறான். அதற்கு ஆவேசவதாரங்கள் என்று பெயர். அந்த ஜீவனைப் பெருமாளே தேர்ந்தெடுக்கின்றார்.

உதாஹரணமாக பரசுராமர், இன்றளவும் இருக்கின்றார். ஆனால், அவரின் அவதாரமென்பது முடிந்து விட்டது. இங்கே, பெருமாள் தனது சக்தியை அவரின் உள் ஆவேசம் செய்து அவதார காரியத்தை நடத்திக்கொண்டார். அவரைப் போல்தான், வ்யாசர் முதலியவர்களும். இதைப்பற்றி விஸ்தாரமாக ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் சேவிக்கலாம்.


அடியேனின் ஏழு வயது பெண் இக்கேள்விகளைக் கேட்கிறாள், பெருமாளும் ஆதிசேஷனும் எப்பொழுது சந்தித்தார்கள். ஆதிசேஷன் பெருமாளுக்குப் படுக்கையாக எப்படி ஆனார்? எப்பொழுதிலிருந்து பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்துக்கொண்டிருக்கிறார்? விளக்க வேண்டுகின்றேன்.

Vidwan’s reply:

பெருமாளும் ஆதிசேஷனும் அனாதி காலமாக சேர்ந்திருக்கிறார்கள்.

குறிப்புகள்:

பெருமாளும் அனாதி, ஆதிசேஷன் நித்யசூரியானபடியால் அவரும் அனாதி. ஆகையால் இருவரும் எப்போதும் சேர்ந்துதான் இருக்கின்றார்கள்.


எனது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால், எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கின்றது , நான் என்னென்ன ஸ்லோகங்களைச் சொல்ல முடியும்? மேலும், பெண்கள் வீட்டில் ஸ்ரீமத் இராமாயணம் மூலம், படிக்கலாமா என்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

தேசிக ஸ்தோத்ரங்கள், பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள், ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தம் , தேசிகப்ரபந்தம் என ரசமான விஷயங்கள் நாம் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்கின்றது.

அதே வரிசையில், எத்தனையோ புத்தகங்கள், ஸ்ரீ ந்ருஸிம்ம ப்ரியா, ஸ்ரீ ரங்கநாத பாதுகா என இவ்விதழ்களில் நல்ல ஸ்வாரஸ்யமான, பல கட்டுரைகள் வந்துக்கொண்டிருக்கிறது.

இவை தவிர புராணக்கதைகள் ஸ்ரீமத் இராமாயணம், மகாபாரதம் எனத் தமிழ், ஆங்கிலம் என்று பல மொழிகளில் புத்தகங்கள் கிடைக்கின்றது.

இத்தனை சாமக்ரியைகள் நிரம்பி இருக்கின்றபடியால், இதைச்சேவிக்க நல்ல படியாக நம் வாழ்க்கை கழியும். மேலும், உபன்யாசங்களும் பல கேட்கலாம்.

ஆனால், ஸ்ரீமத் இராமாயணம் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை மூலத்தை ஸ்த்ரீகள் சேவிக்க சாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. அர்த்தங்களைப் படித்து கட்டாயமாகத் தெரிந்துகொள்ளலாம்.


பாசுரம்/ ஸ்தோத்ரம் சேவித்தல் மற்றும் பாசுரம்/ஸ்தோத்ரம் பாராயணம் செய்தல் என்பதின் வித்யாசம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.

Vidwan’s reply:

பாசுரம்/ஸ்தோத்ரம் முதலியவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லக்கூடாது, சேவிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அவற்றைப் பெருமாளை உத்தேசித்து செய்வதானால், அதற்குப் பாராயணம் என்று பெயர்.

சந்தை, திருவை முதலியவைகளில் சேவித்தல் என்றுதான் சொல்லவேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top