Purvacharya SriSukthi – Tamizh

நான் பர்த்தா (கணவர்) இல்லாதவள். நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் எந்த அளவு நீளமாக இட்டுக் கொள்ளலாம்? கீழே திருமண் (வி) போல் இட்டுக் கொள்ளலாமா?

ஸ்வாமி தேஶிகன் ஸ்தோத்திரங்களைச் சத்தமாக சேவிக்கலாமா? அல்லது மனதுக்குள் யார் காதிலுமே கேட்காதவாறு சேவிக்க வேண்டுமா?

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் prapatti.com இணையதளத்தின்படி “வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத்ரயம்” என்ற பாடம் உள்ளது. ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடியதில் “வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவநத்ரயம்” என்று உள்ளது. ஒரு காலக்ஷேபத்தில், “வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத்ரயம்” என்ற பாடத்தையே நாம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்க நேர்ந்தது. அப்படியென்றால், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்பது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உகந்தது அல்லவா? ஒரு ப்ரபந்நனாக அடியேன் இத்தனை வருடங்களாக எங்கள் இல்லத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்சுமி அவர்களின் பதிப்பையே கேட்டு வருகிறேன். இதில் ஏதேனும் தவறு உள்ளதா? அகத்தில் பெரும்பாலோனோர் எம்.எஸ் .சுப்புலக்ஷ்மி பாடியதையே கேட்க விரும்புகின்றனர்.

ஒரு வடகலை பாகவதர் முமுக்ஷுப்படி காலக்ஷேபம் கேட்கலாமா? இந்த அந்வயத்தில் ஏதேனும் தவறு உள்ளதா? அடியேன் முமுக்ஷுப்படி காலக்ஷேபம் கேட்டு வருகிறேன், தற்போது துவயம் வரை முடிந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய சார காலக்ஷேபமும் கேட்டு வருகிறேன். இருந்தாலும், அடியேன் முமுக்ஷுப்படியைத் தொடர்ந்து கேட்கலாமா என்பதை அறிய விரும்புகிறேன்.

ஸ்த்ரீகளுக்கான ஆஜ்ஞா கைங்கர்யம் என்னென்ன என்று விளக்க வேண்டுகிறேன்.

மகா விஷ்ணுவின் அம்சமாக நவகிரகங்களின் அவதாரப் பெயர்கள் எவை?

சந்தான ப்ராப்திக்காக பாராயணம் செய்யக்கூடிய ஸ்தோத்திரம் அல்லது பிரபந்தம் ஏதேனும் உள்ளதா? ஜோதிடர்கள் சனி மற்றும் குரு தோஷம் உள்ளதாகவும் அவர்களுக்கு ப்ரீத்தி செய்யவும் பரிந்துரைக்கிறார்கள்.

ப்ரபன்னன், தான் செய்யும் கைங்கர்யம் மோக்ஷத்திற்காக என்று எண்ணம் கொண்டு செய்தானேயாகில் அது மீண்டும் ப்ரபத்தி செய்வது போல் ஆகுமா? ப்ரபன்னன் எப்படிப்பட்ட எண்ணங்களோடு கைங்கர்யம் செய்ய வேண்டும்?

அடியேன் ஸ்ரீமத் அஹோபில மடத்தைச் சார்ந்த வடகலை ஸ்ரீவைஷ்ணவன். வடகலை ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்காக ஸ்ரீ மூன்றாம் பரகால சுவாமிகள் அருளிய வாழி திருநாமத்தைப் பற்றி அடியேன் அறிந்து கொண்டேன். ஆனால், அடியேன் பின்பற்றும் அஹோபில மடத்து குருபரம்பரை, மற்ற வடகலை ஸம்ப்ரதாயங்களான (பரகால மடம், ஆண்டவன் ஆஸ்ரமம்) போன்றவற்றிலிருந்து மாறுபட்டது. அஹோபில மடத்து குருபரம்பரை, எம்பெருமானார் ராமானுஜருக்குப் பின் ஸ்ரீ எம்பார், ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ நஞ்சீயர், ஸ்ரீ நம்பிள்ளை, ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை என்று தென்னாச்சார்ய குருபரம்பரையை ஒட்டிச் செல்கிறது. எனது சந்தேகம் என்னவென்றால், அனைத்து வடகலை ஸ்ரீவைஷ்ணவர்களும் இந்த வாழி திருநாமத்தைச் சொல்லலாமா அல்லது அஹோபில மடத்து சிஷ்யர்கள் தென்னாச்சார்ய வாழி திருநாமத்தையே பின்பற்ற வேண்டுமா?

I (Adiyen) have a sister who plans to reside in a Divya Desam for one year. Can she recite the Divya Prabandham before the deity in her home? Please clarify. 

I belong to the Sama Veda tradition. We are currently learning the Rudram and Chamakam. Since I have undergone Bharanyasam, can I learn Rudram and Chamakam? Furthermore, can I learn other parts of the Vedas? What is the importance for Sri Vaishnavas to know these, and what mindset should we maintain while learning them? 

அமாவாசை, பௌர்ணமி மற்றும் ப்ரதமை திதிகளில் ஏன் திவ்ய பிரபந்த சந்தை சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை? 

அடியேன், எனது சகோதரி ஒரு வருட காலம் ஒரு திவ்ய தேசத்தில் தங்கி வசிக்கத் திட்டமிட்டுள்ளார். அவர் தனது வீட்டில் பெருமாளுக்கு திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாமா? தேவரீர் தயவுசெய்து தெளிவுபடுத்தவும். 

அடியேன் ஸாம வேதத்தைச் சேர்ந்தவன். நாங்கள் இப்போது ருத்ரம் மற்றும் சமகம் கற்று வருகிறோம். அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டபடியால் அடியேன் ருத்ரம் , சமகம் கற்றுக்கொள்ளலாமா? மேலும், வேதத்தின் பிற பகுதிகளையும் கற்க முடியுமா? ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதன் முக்கியத்துவம் என்ன? இதைக் கற்கும்போது நாம் எத்தகைய சிந்தனையுடன் இருக்க வேண்டும்? 

ப்ரணதார்த்திஹரன்’ இதை எப்படி அழகான தமிழ்ப் பெயராக அழைக்கலாம்? உதாரணமாக ‘புண்டரீகாக்ஷன்’ என்பதை ‘செந்தாமரைக்கண்ணன்’ என்றும், ‘தாஸ ஸத்யன்’ என்பதை ‘அடியார்க்கு மெய்யன்’ என்றும் சொல்வது போல இதற்கு என்ன பெயர்?

இயல் சாற்றுமுறை பற்றி அடியேன் அறிய விரும்புகிறேன். prapatti.com-இல் உள்ள வடகலை இயல் சாற்றுமுறை, தென்கலை முறையிலிருந்து (மணவாள மாமுனிகள் தொகுத்தது) மிகவும் மாறுபட்டிருக்கிறது. வடகலை முறையைத் தொகுத்தது யார்? இதில் உள்ள ஒவ்வொரு பாசுரத்தையும் இயற்றியவர்கள் யார் மற்றும் எந்த ஆசார்யரை பற்றியது?

வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 25, ஸ்லோகம் 27 சேது பந்தனம் கட்டம். சமுத்ர ராஜன் ஸ்ரீ ராமர் முன் தோன்றி கைகூப்பி பாலம் கட்ட அனுமதி அளித்ததாகவும் அதனை பயத்தினால் செய்யவில்லை என்று கூறியதாகவும் கோரக்பூர் பப்ளிகேஷன் புத்தகத்தில் படிக்கிறேன். இது சரியா என்று தெளிவுபடுத்தவும்.

கைசிக மாஹாத்மியத்தில் சஷ்டி, அஷ்டமி, அமாவாசை மற்றும் சதுர்த்தசி தினங்களில் ஸ்நானம் செய்யாமல் சாப்பிடுவது பாவம் என்று கூறியுள்ளது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் சஷ்டி விரதம் அனுசரிக்கலாமா? ஐப்பசி சுக்ல பக்ஷ ஷஷ்டி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏதேனும் சிறப்பு தினமா ?

எம்பெருமானின் விஷ்ணு மற்றும் நாராயணன் இந்த இரண்டு திருநாமங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

திருமாலையின் எட்டாவது பாசுரத்தை தயவு செய்து விளக்கவும். “குறிப்பெனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே” .இந்த வரிகளில் ஆழ்வார் எதற்காக அவர்கள் தலையை அறுக்க விரும்புகிறார்? ஆழ்வார் வன்முறையைப் போதிப்பதாக புரிந்து கொள்வது தவறு என்று இருப்பினும் இதனை எவ்வாறு விளக்குவது ?

a) ஸ்ரீ ராமபிரான் தன் அவதார முடிவில் அயோத்தி வாழ் உயிரினங்களை ஸ்ரீவைகுண்டத்திற்கு ஏன் அழைத்துச் சென்றார்? அவைகள் பக்தி யோகம் செய்தனவா அல்லது ஶரணாகதி செய்தனவா? b) ஒரு ப்ராமணனின் இறந்து போன குழந்தைகளை வைகுண்டலோகத்தில் இருந்து கிருஷ்ணரும் அர்ஜுனனும் மீட்டு வந்ததாக மஹாபாரதத்தில் கதை வருகிறது. வைகுண்ட லோகம் சென்றவர்கள் திரும்ப வரமாட்டார்கள் என்று இருக்க ( ந ச புநராவர்த்ததே) பெருமாள் எப்படி அந்தக் குழந்தைகளையும் அர்ஜுனனையும் வைகுண்டலோகத்தில் இருந்து அழைத்து வந்தார் ?

ஸ்வாமி தேஶிகன் சது:ஶ்லோகியின் வ்யாக்யானத்தில் அவதாரிகை ஶ்லோகத்தில் ப்ரம்ம சூத்ரத்தின் நான்கு அத்யாயங்களை மேற்கோள் காட்டி பெருமாளும் பிராட்டியும் சமம் என்று கூறுவதாக ஸ்ரீ கரப்பங்காடு சுவாமியின் youtube உபந்யாசத்தில் இருந்து அடியேன் புரிந்து கொண்டேன். இது தவறு எனில் சரியான விளக்கம் அளிக்கவும். மேலும் இந்த ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்திலோ அல்லது வேறு சில்லரை க்ரந்தங்களிலோ கையாண்டு இருந்தால் அதனைத் தெளிவு படுத்தவும்.

மது கைடபர்கள் வேதத்தைக் கவர்ந்து சென்றதற்கும் மத்ஸ்ய அவதாரத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ஹயக்ரீவ மற்றும் மத்ஸ்ய அவதாரதங்களுக்கு என்ன தொடர்பு? ஹயக்ரீவன் என்னும் அசுரன் யார் ?

சங்க்ஷேப இராமாயண பாராயணத்தைச் சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் பண்ணலாமா?

திருமந்திர விளக்கம் –பரமாத்மாவுக்கு ஜீவன் அடிமை என்பது சரியா? தேஶிக ஸம்ப்ரதாயம் படியும் இப்புரிதல் சரியா?

இராமானுச நூற்றந்தாதியில் கடைசி 3 பாசுரங்கள் முக்கியமாக நாம் சேவிக்கின்றோம் அது போல் பிள்ளையாந்தாதியில் எந்தெந்தப் பாசுரங்கள் நித்யமும் சேவிக்க வேண்டும்?

ஹனுமான் சாலிசா நாம் சொல்லலாமா?

ஆசார்ய பரம்பரையில் ஆழ்வார்கள், நாதமுனிகள் இருந்து இராமானுசர் வரை அறிந்து கொள்ள முடிகிறது. பிறகு 74 பீடாதிபதிகளை உடையவர் உண்டாக்கினார். இவர்கள் யார் யார்? உடையவரில் இருந்து ஸ்வாமி தேசிகர் வரை நம் ஆசார்யர் பரம்பரையை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? இதைப்பற்றிய உபன்யாசம்/ பதில்பதிவாக தந்தருள வேண்டும்

கீதையில் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அருளிய சரம ஸ்லோகம் மட்டுமே ரஹஸ்ய த்ரயத்தில் உள்ளது. ஆனால் இதற்கு முன் அருளப்பட்ட வராஹ மற்றும் ஸ்ரீ ராம சரம ஸ்லோகங்களுக்கு இந்த அங்கீகாரம் இல்லை?

இங்கு பூனாவில், துகாராம் தன் ஶரீரத்துடன் தங்க ரதத்தில் ஶ்ரீவைகுண்டம் சென்ற வைபவத்தை துகா பைஜி என்று பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இது நம் ஸம்ப்ரதாய முறைபடி சரியா? நம்மாழ்வார் திருவாய்மொழி 10,7 ல் ஶ்ரீவைகுண்டத்திற்கு இந்த ஶரீரத்தோடு செல்ல விருப்பமில்லாமல் திரும்பி இங்கேயே வந்தார் என்று இருக்கிறது. தெளிவிக்கவும்.

ராவணனைப் பெரிய சிவபக்தனாக திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் சித்தரிக்கின்றன. ஆனால் நான் அறிந்தவரை, வால்மீகி ராமாயணத்தின்படி ராவணன் பிரம்மாவிடம் இருந்துதான் வரங்கள் பெற்றான். ராவணன் சிவபக்தன் என்றோ, சிவனிடம் இருந்து வரங்கள் பெற்றான் என்றோ வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதா?

அலுவலகத்தில் சந்திக்கும் இடர்களைப் போக்கவும், வேலையில் உயர்வு பெறவும் என்ன ஶ்லோகம் சேவிக்கலாம் என்று வழிகாட்டவும்.

என் மகன் தவறாமல் நித்யகர்மானுஷ்டானங்கள் செய்துவருகிறான். அவனுக்கு எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய, எந்த ஶ்லோகம் / பாசுரம் சேவிக்க வேண்டும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்

அகத்தியர் போன்ற ரிஷிகள் தேவதாந்தரங்கள் மீது துதிகள் பாடியுள்ளனர். உ.தா ஸ்ரீசக்ர ராஜசிம்மாசனேஷ்வரி போன்ற பாடல்கள். அவரே தான் ஆதித்ய ஹ்ருதயத்தை ஸ்ரீராம பிரானுக்கு உபதேசித்தார் என்று இருக்கிறது. அப்படியென்றால் ரிஷிகள் ஆழ்வார்கள் போன்று வைணவர்கள் இல்லையா? எப்படி இதை புரிந்துகொள்வது.

பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஆத்ம ஸ்வரூபத்தால் க்ரஹிக்கின்றாரா அல்லது நம் போன்றே தர்ம்பூதஞானத்தால் க்ரஹிக்கின்றாரா?

1. அடியேன் ஸாம வேதம் (த்ரஹ்யாயன சூத்ரம்) பரத்வாஜ கோத்ரம், வடகலை, ஶ்ரீ சந்நிதி சிஷ்யன். நம் ஸம்ப்ரதாயத்தில் கிடாம்பி, நடாதூர், நல்லான் சக்ரவர்த்தி,சேட்லூர் என்று தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக்கொள்கின்றனர். அடியேன் காரணம் கேட்டு அறிந்துகொண்டது இவை ஒருவரின் வேதம், கோத்ரம் சூத்ரம் பொருத்ததாகும். கிடாம்பி என்றால் ஆத்ரேய கோத்ரம் யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்ரம் என்றனர். அவ்வாறாக பரத்வாஜ கோத்ரம் சாமவேதம் த்ரஹ்யாயன சூத்ரத்திற்கு பெயருக்கு முன்னரோ/பின்னரோ என்ன சேர்க்கவேண்டும் என்று தெரிவிக்கவும் ஸ்வாமி.அடியேனின் பூர்வீகம் கும்பகோணம், அகத்து குலதெய்வம் ஒப்பில்லாப்பன். 2. எது என்று தெரியாத பக்ஷத்தில் அடியேனின் தாயார் வழி பெரியோர்கள் உபயோகிக்கும் சேட்லூர் என்ற பெயரை போட்டுக்கொள்ளலாமா?

தேஶிக ஸ்தோத்ரங்களுக்கு ஏதேனும் பாராயண க்ரமம் உள்ளதா? இந்த இந்த நக்ஷத்திர நாளில் இந்த இந்தப் பத்ததி என்று பாதுகா ஸஹஸ்ரத்திற்கு இருப்பது போல் ஸ்தோத்ர பாடங்களுக்கு ஏதேனும் உள்ளதா?

உந்து மதகளிற்றன் பாசுரத்தன்று புளியோதரையும், கறவைகள் அன்று தயிர்சாதமும் எம்பெருமானுக்கு அம்சைப் பண்ணுவதன் காரணம் என்ன?

ஶ்ரீதேவி, பூமாதேவி பற்றி பல கதைகள் கேட்டுள்ளோம். ஶ்ரீதேவியின் திருவவதாரம்தான் ஸீதாதேவி, ருக்மிணி பிராட்டி என்றும்; பூமாதேவியின் திருவவதாரம்தான் ஆண்டாள், பத்மாவதி தாயார் என்றும், வராஹ அவதாரத்தின் மூலமும் பூமாதேவி பற்றி அறிகிறோம். ஆனால் நீளா தேவி பற்றி பெரிதாக கதைகள் இல்லையே. அவரைப் பற்றி அறிய கதைகள் ஏதேனும் உண்டா? நீளா தேவியை எந்தெந்த திவ்ய தேசங்களில் சேவிக்க முடியும்?

யுத்தகாண்டம் ஸர்க்கம் 120 இல் சீதாபிராட்டி அக்னி பிரவேசம் செய்யும்போது தேவர்கள் வரும் ஸ்லோகம் இது: ததோவைஶ்ரவணோராஜாயமஶ்சபித்ருபிःஸஹ । ஸஹஸ்ராக்ஷஶ்சதேவேஶோவருணஶ்சஜலேஶ்வரः ।।6.120.2।। ஷடர்தநயந்ஶ்ரீமாந்மஹாதேவோவ்ருஷத்வஜः । கர்தாஸர்வஸ்யலோகஸ்யப்ரஹ்மாப்ரஹ்மவிதாம்வரः ।।6.120.3।। ஏதேஸர்வேஸமாகம்யவிமாநைஸ்ஸூர்யஸந்நிபைः । ஆகம்யநகரீம்லங்காமபிஜக்முஶ்சராகவம் ।।6.120.4।। இதில், வருணனை “வருணஶ்சஜலேஶ்வர” என்றும் சிவனை “ஶ்ரீமாந்மஹாதேவோவ்ருஷத்வஜ” என்றும் அழைக்கிறார் வால்மீகி. ஆனால் அதே யுத்தகாண்டம் ஸர்க்கம் 126 இல் பெருமாள் பிராட்டியிடம் சேதுவைக் காட்டும்போது: ஏததத்குக்ஷௌஸமுத்ரஸ்யஸ்கந்தாவாரநிவேஶநம் ।।6.126.19।। அத்ரபூர்வம்மஹாதேவःப்ரஸாதமகரோத்ப்ரபுः । “மஹாதேவ:ப்ரஸாத” என்று கூறுகிறார். இதில் மஹாதேவ சப்தத்தால் அழைக்கப்படுபபவர் சமுத்திர ராஜனான வருணன் என்று, கோவிந்தராஜர் போன்ற நம் சம்பிரதாயத்தைச் சேர்ந்த வியாக்கியானகர்த்தாக்கள் கூறி இருக்கின்றனர். மேலே குறிப்பிட்ட இரண்டு ஸ்லோகங்களைச் சேர்த்து பார்த்தால் சற்று முரணாக உள்ளது. இவற்றை விளக்க வேண்டுகிறேன்.கொடுக்கப்படவில்லை?

காமாஸிகாஷ்டகமோ, வேறு சில ந்ருஸிம்ம ஸ்தோத்ரங்களை மஹாப்ரதோஷ காலத்தில் சொல்லலாமா?

ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் எப்படிச் செய்தல் வேண்டும்? சிலர் வனமாலி வரை திருநாமங்களாக பல ஶ்ருதி நீங்கலாகச். சேவிக்கச் சொல்கிறார்கள்.

A. ஶ்ரீமத் இராமாயணம் மூலம் பாராயணம் எப்படிச் செய்தல் வேண்டும்? ஆஹாரம் ஆனபின், ஸ்வாத்யாய காலத்தில் சேவிக்கலாமா? அல்லது சந்தியாவந்தனம் செய்தவுடன் செய்யவேண்டுமா? B. ஸப்தாகமாகவோ, நவாகமாகவோதான் சேவிக்கவேண்டுமா? அல்லது ஒரு வருடம் பூர்த்தியாக நாள் ஒன்றுக்கு ஒன்றிரண்டு அத்யாயங்கள் மட்டும் என்று சேவித்து வரலாமா? C. அகத்திலிருக்கும் ஸ்த்ரீகளுக்கு ரஜஸ்வலை ஏறபட்டால் அந்தக் காலத்தில் சேவிக்கலாமா? D. சீதாப்பிராட்டி அழுவது போல் வரும் ஸர்கங்களுடன் அன்றைய பாராயணம் முடிக்கலாமா அல்லது மேலும் சில ஸர்கங்கள் சேர்த்துச் சேவிக்கவேண்டுமா?

தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஏன் நாராயணீயத்திற்கு அத்தனை முக்கியத்வம் கொடுக்கப்படவில்லை?

ஏன் பூ, நீளா தேவிகள் இருவரும் ஈஶ்வர கோஷ்டியில் சேர்க்கப்படவில்லை?

ஶ்ரீமத் இராமாயணத்தில் இரண்டு சந்தேகங்கள் 1. ஏன் அசோக வனத்தை இராவணன் சீதையை வைக்கத் தேர்ந்தெடுத்தான்? 2. இராவணன் சீதையை எவ்வாறு கடத்திச்சென்றான் (அவளை பலவந்தமாக இழுத்துச் சென்றனா?) ?

சமீபத்தில் ஶ்ரீ உ வே வேளுக்குடி ரங்கநாதன் ஸ்வாமி, ப்ரம்ம சூத்ரங்கள் வகுப்பு பற்றிய அறிவிப்பு வந்தது. ஸ்த்ரீகள் அவ்வகுப்பில் சேரலாமா? நம் ஸம்ப்ரதாய வழக்கத்தில் உண்டா?

குறிப்பிட்ட 13 திருவாய்மொழிகளுக்கு மட்டும் கோயில் திருவாய்மொழி என்று குறிப்பிட காரணத்தை விளக்க ப்ராத்திக்கிறேன்.

தசரத சக்ரவர்திக்கு ஶ்ரவணின் பெற்றோர் கொடுத்த சாபத்தால் புத்ர சோகம் ஏற்பட்டது என்று புரிகிறது. ஆனால் ஒரு தவறும் செய்யாத இராம பிரான் ஏன் தன் புத்திரர்களைப் பிரிந்து வாழ நேரிட்டது? தன் புத்திரர்கள் இராமாயண கதையைப் பாடும்போதுதான் அவர்களைப் பார்க்கும் பாக்கியத்தையே பெற்றார். ஏதேனும் இதற்கு காரணம் உள்ளதா? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.

ஸ்வாமி தேஶிகன், தேவதாந்த்ர ப்ரசாதங்கள் போல் எம்பெருமாள் ப்ரசாதம் நிர்மால்யம் அன்று என்றும் ஊர்த்வபுண்ட்ரம் ஶாஸ்த்ரீயமானது என்றும் விளக்கிய க்ரந்தங்கள் உள்ளதா?

ஆண்டாளின் திருக்கையில் இருக்கும் கிளிக்கு என்ன தாத்பர்யம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

திருமங்கையாழ்வார் பற்றி ஏதேனும் தேஶிகம் அல்லது நம் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ரம் (பெரிய திருமொழி தனியன் தவிர) உள்ளதா?

கோயில் கோஷ்டியில் திருவாய்மொழி சேவிக்கும் போது யாராவது ஒருவர் கோஷ்டி சேவிக்காமல் எழுந்து போகலாமா?

நாராயணனை அடைய அவனே உபாயமாக இருக்க, கண்ணனை அடைய ஆயர்பாடி கோபிகைகளும் அவர்களைப் பின்பற்றி ஆண்டாளும் பாவை/காத்யாயனி நோன்பு நோற்க காரணம் என்ன?

பாலகாண்டம் ஸர்க்கம் 45இல் சமுத்ர மதனத்தின் போது தோன்றிய ஸ்ரீமன் நாராயணன், சிவனிடம் விஷத்தை அருந்தச் சொல்லும்போது சொல்லும் ஸ்லோகம் பின்வருமாறு: உவாசைநஂ ஸ்மிதஂ கரித்வா ருத்ரஂ ஷூலபரிதஂ ஹரி:. தைவதைர்மத்யமாநே து யத்பூர்வஂ ஸமுபஸ்திதம் ৷৷1.45.23৷৷ த்வதீயஂஹி ஸுரஷ்ரேஷ்ட ஸுராணாமக்ரஜோஸி யத் . அக்ரபூஜாமிமாஂ மத்வா கரிஹாணேதஂ விஷஂ ப்ரபோ৷৷1.45.24৷৷ இதில் பகவான் தன்னை விட தாழ்ந்த தேவதையான சிவனைப் ப்ரபோ என்று ஏன் அழைக்க வேண்டும்? இதற்கு நமது பூர்வாச்சாரியர்கள் ஏதேனும் விளக்கம் அளித்து உள்ளனரா?”

ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி ஸ்ரீ ராமாயணத்திற்கு கோவிந்தராஜர் உரை எழுதியது போல் மஹாபாராதம், மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திற்கு யாரேனும் உரை எழுதி உள்ளனரா?

ஶ்ரீ பூ நீளா தேவிகள் மஹாலக்ஷ்மீ தாயாரின் அம்சமா? பொதுவாக அடியேன் அவர்களை தனியாக சேவிப்பதில்லை என்று வருத்தமாகவுள்ளது. மேலும் கோதாதேவி பூதேவியின் அம்சமா? விளக்கவும். அவர்களை எப்படிச் சேவிக்கவேண்டும்?

“ஸர்வத₄ர்மான்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ । அஹம் த்வாம் ஸர்வபாபேப்₄யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” என்ற சரம ஶ்லோகத்தில், “அஹம் த்வா” என்றும் “அஹம் த்வாம்” என்றும் இருவேறு பாடங்கள் இருக்கிறது, இதில் எது சரி?

உபநிஷத், புராணங்களில் கூறப்படும் ஶ்ரீலக்ஷ்மீ அஷ்டோத்ர ஶதநாம ஸ்தோத்ரம் ருத்ரன் பார்வதி தேவிக்கு கூறியதா?

திவ்ய ப்ரபந்தம் போன்றவைகள் சேவிக்கும்போது ற-காரத்தை ன -காரமாக ஏன் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன? இப்படி மாற்றிச் சேவிப்பதால் அதன் பொருள் மாறிவிடாதா? நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?

அந்தந்தப் பருவத்தில் ஏற்படும் காம க்ரோதாதிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது. உதாஹரணத்திற்கு: பிள்ளை பேறுகள் பெற்ற க்ருஹஸ்தர்களுக்கு அர்த்தத்தின் மீது அதிக காமம் இருக்கும், ப்ரஹ்மசாரிகளுக்கு ஏற்படும் ஆசை வேறு விதமாக இருக்கும். இப்படி பல்வேறுபட்ட காமங்களை அடக்குவது எப்படி?

இராமாயணத்தில் கைகேயி 14 வருடங்கள் என்று குறிப்பாக கேட்க என்ன காரணம்? 12, 20, 25 வருடங்கள் என்று ஏன் இல்லை? 14 என்பதற்கு ஏதேனும் மகத்துவம் இருக்கிறதா?

குமார வரதாசார்யாரின் கோகில சந்தேஶம், ஶ்ரீ லக்ஷ்மீ ஶதகம், போன்ற கரந்தங்கள் எங்கே கிடைக்கும். குறிப்பாக ஶ்ரீ லக்ஷ்மீ ஶதகம் புத்தக வடிவிலோ, SoftCopyயாகவோ எங்கே கிடைக்கும்? ஸ்ரீமதி ப்ரபாசேனேஷ் அவர்களின் லக்ஷ்மீ அஷ்டோத்ர உபந்யாஸத்தில் இந்த க்ரந்தம் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். சடகோபன் ஸ்வாமி (Sadagopan. Org) அவர்களும் ஶ்ரீஸ்தவத்தின் வ்யாக்யான முன்னுரையில் இந்த க்ரந்தம் பற்றி குறிப்பிட்டிருப்பார்.அதனால் இதை வாசிக்க ஆவலாக உள்ளது.

ஶ்ரீவைஷ்ணவர்கள் நாத்திக வாதங்களை எப்படி வென்றார்கள்? யாரெல்லாம் அவ்வாறு வென்றது?

1) ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி எழுதப்பட்ட ஸ்ரீ ராமாயணம், மஹாபாராதம், ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்கள்/ உரை புத்தகங்களின் பெயர்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா? 2) நம் வீட்டில் வளரும் துளஸீச் செடியில் இருந்து தரையில் விழுந்த இலைகளைத் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாமா? 3) ஸ்ரீமத் பாகவதத்தில் சுகபிரம்ம மகரிஷி பரிக்ஷித் மஹாராஜாவின் ராசலீலை பற்றிய கேள்விக்கு விடை அளிக்கும் போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் செய்ததைப் போல் நாமும் செய்ய முடியாது என்று கூறுகிறார். அதற்கு உதாரணமாக சிவனைப் போல் நாமும் விஷம் அருந்த முடியாது என்று கூறுகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனே, ஏன் ஸ்ரீ கிருஷ்ணனே பல செயற்கரிய செயல்கள் செய்திருக்க, அவற்றில் ஏதாவது ஒன்றை உதாரணமாகக் கூறாமல், சிவன் விஷத்தை அருந்தியதை ஏன் கூறவேண்டும்? இது தாமஸ தெய்வமான சிவனை உயர்த்திச் சொல்வது போல் உள்ளதே. இதைச் சற்று விளக்க வேண்டுகிறேன். 4) துளஸீ மாலையை எப்போழுதும் கழுத்தோடு அணிந்து கொள்ளலாமா? 5) பரசுராமர் ஸ்ரீமன் நாராயணனின் ஆவேச அவதாரம். அப்படி இருக்க, அவர் தாரதம்யத்தின் மிகவும் குறைந்த தேவதையான அஷ்ட வசுக்களின் அம்சமான பீஷ்மரிடம் எப்படித் தோற்றார்?

வராஹ கவசத்தில் பார்வதி உவாச, ஶங்கர உவாச என்று வருகிறதே பரந்யாஸம் ஆனவர்கள் சேவிக்கலாமா?

உளன் கண்டாய் நன்னெஞ்சே என்ற முன்னடி வரிகள் 3 ஆழ்வார்கள் தங்கள் ப்ரபந்தங்களில் (முதல் திருவந்தாதி 99, மூன்றாம் திருவந்தாதி 40, நான்முகன் திருவந்தாதி 86) பாடியுள்ளனர். இதில் ஏதேனும் சிறப்புள்ளதா?

திவ்ய ப்ரபந்தம், ஸ்வாமி தேஶிகனின் ஸ்தோத்ர பாடங்கள் மற்றும் ப்ரபந்தங்கள், பாதுகா ஸஹஸ்ரம் போன்றவைகளை எப்படிச் சேவிக்க வேண்டும், இந்த ஶ்லோகம் இந்த நேரத்தில் சேவிக்கலாம் (காலை/மாலை), இந்த இந்த நக்ஷத்திரம் , திதி, நாள் அன்று என்னென்ன சேவிக்கலாம் அல்லது இவையிவை எப்போது சேவிக்கக்கூடாது என்று ஒரு குறிப்பை GSPK புத்தக வடிவில் கொடுத்தால் உபயுக்தமாக இருக்கும்.

சாதாரணமாக புழக்கத்தில் நாம் கருடாழ்வார் ஸந்நிதி என்று சொல்வதுண்டு. பழவேரி ஸ்ரீ.உ.வே.லஷ்மி நரஸிம்ஹாசார்யார் (பாலாஜி) ஸ்வாமி உபன்யாசத்தில் நம் சம்ப்ரதாயத்தில் கருடாழ்வார் என்று சொல்வதில்லை, பெரிய திருவடி என்று சொல்கிறோம் என்று கூறக்கேட்டேன். இதற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா? சற்று விளக்கவும். அப்படியானால் நாம் கருடாழ்வார் என்று சொல்வது தவறா?

ஸ்ரீஸ்துதியை நித்தியம் கேடக்லாமா? அதைச் சொன்னால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கேட்பதினாலும் கிடைக்குமா?

மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களை ந்ருஸிம்ஹ அவதாரம் போல் ஏன் காட்டுகிறோம்? அவ்வதாரங்கள் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் போல் நரங்கலந்த ரூபம் அல்லவே? இல்லை அவ்வதாரங்களும் நரங்கலந்த ரூபத்துடனேதான் எம்பெருமான் அவதரித்தாரா?

ஸ்ரீமத் இராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் கணையாழியை அடையாளமாக அனுமனிடம் கொடுத்தார் என்றால், அவர் அயோத்தியில் இருந்து அனைத்தையும் ஆபரணாதிகள் உட்பட அனைத்தையும் துறந்தல்லவா ஆரண்யம் சென்றார்? இல்லை இந்த ஒரு ஆபரணத்தை மட்டும் தன்னுடன் எடுத்துச்சென்றாரா?

கண்ணன் எம்பெருமான் ததிபாண்டனின் பானைக்கும் மோக்ஷம் கொடுத்தார் என்றால், ஒருச்சித்தான பானைக்குள்ளும் ஆத்மா இருக்கிறதா? எப்படிப் புரிந்துகொள்வது?

நீராட்டம் பதிகத்தில் எம்பெருமானை ஸ்நானம் செய்ய அழைக்கும்படி இருக்க அதை திருமஞ்சனம் ஆரம்பிக்கும் முன் இல்லாது முடிந்தபின் ஏன் சேவிக்கின்றோம்?

பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்கள் சனி (குறிப்பாக 71/2 சனி) திசை நடக்கும்போது சேவிக்க ஏதேனும் ஸ்தோத்ரம்/ப்ரபந்தம் உள்ளதா?

1) பூக்கும் செடிகளில், எங்கள் வீட்டில் செம்பருத்திச் செடி மட்டுமே உள்ளது. செம்பருத்திப் பூவை பூச்சூட்டலின் போது பெருமாளுக்குச் ஸமர்ப்பிக்கலாமா? 2) “தாழ் சடையும் நீள் முடியும்” என்ற பேயாழ்வாரின் பாசுரத்தின் உண்மையான பொருள் என்ன? 3) “தாள தாமரையான் உனது உந்தியான்” என்னும் திருவாய்மொழி பாசுரத்தில் ஆழ்வார் “வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்”, என்று சிவன் ஸ்ரீமன் நாராயணனின் திருமேனியின் ஒரு பகுதியில் இருப்பவன் என்று கூறுகிறார். இந்தக் கருத்து, சைவர்கள் கூறும் சங்கர நாராயண வடிவத்துடன் ஒத்துப் போவது போல் உள்ளதே. இதற்கு நம் ஆச்சரியார்கள் ஏதாவது விளக்கங்கள் அளித்துள்ளார்களா? 4) பகவானைப் போலவே சக்கரத்தாழ்வாரும் நித்யமானவர் என்பது இருக்க, ஸுதர்சன ஜெயந்தி என்பது எந்த நாளைக் குறிக்கிறது?

எனது 4.5 வயது சிறுமி கேட்கும் இக்கேள்விகளுக்கு எப்படிப் பதில் அளிப்பது. ஏன் எம்பெருமானுக்குப் பெற்றோர்கள் இல்லை, அவர் எப்படித் தனியாக இருப்பார்? நாம் அவரை நம் அகத்திற்கு அழைத்துக்கொண்டு வரலாமா?

ப்ரபந்தம் அல்லது வேத வகுப்புகளை வெளிநாட்டில் இருந்து கற்றலோ அல்லது கற்பித்தாலோ விடியற்காலை அல்லது இரவு பொழுதில் பங்கேற்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமயத்தில் எழுந்தவுடனே இணைந்துகொள்ள வேண்டியிருப்பதால் ஸ்நானத்திற்கு முன்பு ப்ரபந்தம்/வேதம் சொல்லிக் கொள்வதிலோ அல்லது சொல்வதிலோ தோஷம் உண்டா? அதே போல இரவில் (9 மணி அளவில்) சொல்லிக் கொண்டால் மடியாக இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது. சந்தைக்கு மடி நியமம் உண்டா?

பகவான் ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணனாக அவதாரம் செய்யும் போதும் தன் அப்ராக்ருத திருமேனியோடுதான் அவதாரம் செய்தார் என்று உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனின் திருமேனிக்குக் காரியம் செய்தான் என்று மஹாபாரத மௌசல்ய பர்வத்தில் சொல்லப்பட்டு உள்ளதாகப் படித்தேன். இதற்கு ஏதாவது விளக்கங்கள் உள்ளனவா?

உத்தராயண தக்ஷிணாயனம் சற்று விவரிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். அயன புண்ய காலம் பற்றி ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளதா? ஆழ்வார்கள் ஆசார்யர்கள் தச்களுடைய் ஸ்ரீஸூக்திகளில் ப்ரஸ்தாபித்துள்ளார்களா?

இதிகாச புராணங்களில் பகவத் கீதை மட்டும ஒருவர் படித்தால் போதுமா? அதில் கர்ம யோகம், ராஜாங்கம், பக்தி யோகம், ஞானயோகம் அடங்கியிருப்பாதல் அது முக்தி வழி கொடுக்குமா?

மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் தினமும் சொல்லலாமா? சொல்வதற்கு ஏதேனும் விதி உள்ளதா?

கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையோடு வாழவும், ஸத்சந்தான ப்ராப்தி கிடைக்கவும் எந்த ஸ்தோத்ரம்/ப்ரபந்தம் சொல்லலாம்?

ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈசன் என்பதும் ஈஶ்வரன் என்பதும் ஸ்ரீமன் நாராயணனையே குறிக்கும். அப்படி இருக்க ஆழ்வார்கள் தங்கள் பாடல்களில் சிவனை ஏன் ஈசன் என்று சொல்லி இருக்கிறார்கள்?

பலராமர் ஸ்ரீமன் நாராயணனின் ஆவேச அவதாரம். அப்படி இருக்க அவர் சுரா பானத்தில் நாட்டம் உள்ளவர் என்று ஸ்ரீமத் பாகவதம் மற்றும் விஷ்ணு புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளன. இதற்கு ஏதாவது விளக்கம் உள்ளதா?

காசி இன்றைய தேதியில் சிவஸ்தலமாக உள்ளது. அப்படியிருக்க ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு காசியின் முக்கியத்துவம் என்ன?

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சில சமூக வலைதளங்களில் சமீப காலமாக பரவி வருகிறது.ஸ்வாமி, இதற்கு ஸமாதானம் அருள பிரார்த்திக்கிறேன். தவறான விஷயமெனில் எப்படி கண்டிப்பது? அல்லது யாரோ விஷயம் தெரியாதவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டு விலகி (ignore) இருக்க வேண்டுமா? சமூக வலைதளங்களில் வந்துள்ள விஷயம்: விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் 26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன ராமரும் விபூதியை அணிந்தவர் தான்.அதற்கு ஆதாரமாக – “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் கூறுகிறது. இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும். மேலும், “க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : “ என்று கூறுகிறது வால்மீகி ராமாயணம். இந்த ஶ்லோகத்தின் பொருள் : “பகவானும் ஈஸ்வருமான ருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார்” இராமர் நீராடியபின் நீறும் பூசியிருந்தால் தான் சிவன் போல் விளங்கியிருப்பார்,ஆதலால்,இராமர் திரு நீற்றைச் சின்னமாக தரித்த சிவ பக்தர் என்பது உண்மையே. அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு “ என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள். “ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாஷாத் ருத்ர மிவாபரணம் பஸ்மோத் தூளித ஸ்ர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா “ என்று அத்தியாத்ம ராமாயணம் கூறுவதால்,ராமர் விபூதி அணிந்தார் என்பது புலனாகிறது.

எந்த உபநிஷத்தெல்லாம் நாம் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்? 108 உபநிஷத்துகளில் தச உபநிஷத் என்பது மட்டுமே நமக்கு ப்ரதானமானதா? கோபாலதாபிந்யுபநிஷத், இராம ரஹஸ்ய உபநிஷத் இவையெல்லாம் ப்ரமாணமாகக் கொண்டு இராம, க்ருஷணன் அவதாரங்களை ப்ரதானமாகக் கொண்ட ஸம்ப்ரதாயத்தவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த உபநிஷத் நாம் எடுத்துக்கொள்ளலாமா?

அடியேன் பாஞ்சராத்ர ஸம்ஹிதை ஒன்றில் கண்ட விஷ்யம், இராம நாமமே உயர்ந்த ஒன்று, இராம நாமத்தைச் சரணடைந்தவன் எம்பெருமானின் இதர நாமங்களைச் சொல்ல நரகம் செல்வான் என்று குறிப்பிட்டுருந்தது. இது சரியா?

ஸ்ரீமத பாகவத புராணத்தில் வரும் ஶ்லோகம் ஒன்றில்“ஏதே சமஸ்த கால: பும்ச: க்ருஷ்ணாஸ்து பகவான் ஸ்வயம்” என்றும், ஆதி புருஷன் இராமன் என்றும் வருகிறது. இந்த ஶ்லோகத்தை ப்ரதானமாகக் கொண்டு க்ருஷ்ணபக்தர்கள் (கௌடியர்கள், வல்லபர்கள், நிம்பிகாரர்கள்) கண்ணன் எம்பெருமானே ஆதி என்றும், ஸ்ரீமந் நாராயணன் மற்றும் விஷ்ணு என்பது கண்ணன் எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் என்று கூறுகிறார்கள்.நம் ஸம்ப்ரதாய பூர்வகள் இந்த ஶ்லோகத்திற்கு எவ்வாறு வ்யாக்யானம் செய்துள்ளனர்? .விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்? விஷ்ணு என்பவர் ஜகத் ரக்ஷணம் பண்ணுவதற்காய் எடுத்த அவதார ரூபம் என்றும், ஸ்ரீமந் நாராயணன்தான் ஆதிமூலம் என்றும் அடியேன் ஒரு உபந்யாஸத்தில் கேட்டேன் ஸ்வாமி நாராயணன் என்பவர் நம் ஸம்ப்ரதாய ஆசார்யரா? அவரின் நூல்களில் பகவத் இராமானுஜர் அருளிய ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யமே பக்தி மார்கத்தில் ஶாஸ்திரங்கள் என்று மேற்கோள்காட்டியுள்ளார். மேலும் அவரின் ஶிக்ஷாபத்ரீ-யில் “மதம் விசிஷ்டாத்வைதம் மே” என்றும் கூறியுள்ளார்.

.தர்ப்பண புண்ய காலம் மற்றும் ஶ்ராத்த திதி நிர்ணயம் விதிமுறைகள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா ?

பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமா அல்லது மலையாள, சேரகுலவல்லி போல் ஒரு நாச்சியாரா? ஸ்ரீதேவியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரா ?

ஸ்ரீ வராஹ அவதாரம், வராஹம் தண்ணீரில் நீஞ்சுமே அல்லாது மூழ்க முடியாது, ஸ்ரீ வராஹ அவதாரத்தால் முடியும் என்று வைத்துக் கொண்டாலும் ஸ்ரீ வராஹப் பெருமானுக்கு ஏன் கோரைக்கிழங்கு நைவேத்யம் ஆகிறது, இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், தந்தவக்ரன் ஆகிய சகோதரர்களை ஒரே அவதாரத்தில் வென்றுகொன்றபோது ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு ஆகிய சகோதர்களைக் கொல்ல மட்டும் இரண்டு அவதாரம் ஏன்? அவர்கள் சகோதரர்கள் இல்லாமல் இருந்தாலும் இருவர் பெயரிலும் ஹிரண்ய என்ற சொல் வருவதேன்?

எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்கள் பற்றிய ஶ்லோகம் இதோ: ஆத்யம் ரங்கமிதி ப்ரோக்தம் விமானம் ரங்கஸம்ஞிதம் ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிம் ச ஸாளக்ராமம் ச நைமிஶம் । தோயாத்ரிம் புஷ்கரம் சைவ நரநாராயணாஶ்ரமம் அஷ்டௌ மே மூர்தய: ஸந்தி ஸ்வயம்வக்தா மஹீதலே எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்களுக்கும், திருவஷ்டாக்ஷர மந்த்ரத்திற்கும் என்ன சம்பந்தம்?

Q1. விசிஷ்டாத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மத்வாசார்யரின் ஸர்வமூல க்ரந்தங்களைச் சேவிக்கலாமா? Q2. நான் என்பது ஶரீரமல்ல, ஜீவாத்மா என்று எப்படி உணர்வது? அந்தச் சிந்தனையுடன் அனைத்து கார்யங்களையும் ஆற்றுவது எவ்வாறு? Q3. நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள கோபம், பொறாமை, மோஹம் முதலான தவறான பழக்கங்களை களைவது எப்படி?

1. ஸ்திரீகள் ஶ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கலாமா? அல்லது உரை மட்டும் படிக்கலாமா? 2. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீமத் பாகவதம் படிக்க வேண்டுமெனில் எந்தப் பதிப்பகம் வெளியீட்டை படிக்கலாம்? (மொழிபெயர்ப்பு மற்றும் உரை)

ராதா ராணி உண்மையா? எனில் அவள் மஹாலஷ்மி அவதாரமா? சாதாரண கோபிகையா? தென்னாசார்ய மற்றும் தேசிக சம்ப்ரதாயத்தவர்கள் ஶாஸ்த்ர ரீதியாக ராதாராணியை எப்படிப் பார்க்கிறார்கள்?

அடியேன் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாமா? எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? பகவத் ராமானுஜாசார்யரின் வேதார்த்த ஸங்க்ரஹம் ஆரம்ப பாடம் படிப்பவர்களுக்கா? முறையாக ஸ்ரீ பாஷ்யத்தை கற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? அடியேன் வைஷ்ணவ ஆசார அனுஷ்டானங்களை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். ஸ்வாமி வேதாந்த தேஶிகரின் அதிகரண ஸாராவளி என்றால் என்ன?

பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிக்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கா? காலையில் சேவிக்க முடியவில்லையென்றால் சாயங்காலம் சேவிக்கலாமா?

கோவிந்தராஜீயம் என்ற க்ரந்தத்தின் ஆசிரியர் யார்? அவரது வம்சம், ஆசார்யன், வாழ்க்கை வரலாறு இவற்றைப் பற்றி விளக்க பிரார்த்திக்கிறேன்.

1A. ஸ்ரீவல்லபாசார்யாரை பற்றிய ஒரு நூலில், அவர் விசிஷ்டாத்வைதத்தின் பெரும்பாலான கொள்கைகளை (சிலவற்றைத் தவிர) ஒப்புக்கொண்டதாக உள்ளது. ஸ்ரீவல்லபாசார்யாரின் சுத்த அத்வைதத்திற்கும், ஸ்வாமி ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? 1B. ஆதிசங்கரர் இந்த உலகம் பொய் என்றும், ஸ்வாமி ராமானுஜர் இந்த உலகம் நிஜம் ஆனால் நிரந்தரம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த உலகம் நிஜம் என்பதற்கான வேதத்தில் உள்ள ப்ரமாணங்களை அடியேனுக்குத் தெளிவுபடுத்த முடியுமா? 1C. விசிஷ்டாத்வைதத்தில் சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றும் எம்பெருமான் சரீரி என்றும் உள்ளது. அப்படி நாம் எம்பெருமானுடன் ஒன்றிணைந்து இருந்தால் நமக்கு ஏன் அவனைப் போல் எங்கும் வியாபித்திருக்கும் தன்மை இல்லை? 1D. பகவத் ராமானுஜர் தன்னுடைய கீதாபாஷ்யத்தில் கர்மயோகம் ஞான யோகத்தை விட சிறந்தது. ஏனெனில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை விட ஏதேனும் வேலை செய்வது மனிதர்களின் ஸ்வபாவம். மேலும் அது இளைய தலைமுறைக்கு எந்த தவறான வழிகாட்டுதலும் செய்யாது என்று கூறியுள்ளார். 1E. ப்ரபத்தி மற்றும் எம்பெருமான்தான் உபாயம் மற்றும் உபேயம் என்ற போதிலும், கர்ம யோகத்தை எவ்வாறு செய்வது என்று அடியேனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

ஸ்ரீ. உ. வே. வாசுதேவாசார்யார் ஸ்வாமி கைசிக புராண படனம் ஸாதிக்கும்பொழுது, ராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் விபீஷணஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டது போல் நம்பாடுவான் ப்ரம்ஹராக்ஷஸ் ஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டார் என்று ஸாதித்தார். ஆனால் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் இந்த ஶரணாகதியைப் பற்றி குறிப்பிடவில்லையே? இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

வெளி இடங்களில் சுலபமாக ஜபிக்க பெருமாள் தாயார் தனியன், ஸ்லோகம் ஏதேனும் இருக்கிறதா?

பெரிய திருமொழியில் ஒரே ஒரு திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள் இருப்பதன் தாத்பர்யம் என்ன?

அடியேன் வேலைக்கு செல்கிறேன் . எனக்கு ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் கற்றுக்கொள்ள வேண்டும். வார இறுதி நாட்களில் மட்டுமே எனக்கு தேவையான நேரம் கிடைக்கின்றது . GSPK இல் சான் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் உள்ளதா? இல்லையென்றால் ஒன்றைத் தொடங்க முடியுமா?

ஸ்ரீவிஷ்ணுவிஜய ஸ்தோத்திரத்தில் 3வது ஸ்லோகத்தில் நமோஸ்து புத்தாய ச தைத்யமோஹிநே,இதில் புத்தாய என்பதில் யாரை குறிப்பிடுகிறார்?

திவ்ய ப்ரபந்தம் வ்யாக்யானம் பற்றி சில சந்தேகங்கள் 1. 4000 படி 6000 படி என்றால் என்ன? 2. எதை வைத்து இப்படி பிரித்துள்ளார்கள்? 3. இவைகளுக்குள் இருக்கும் வேறுபாடு என்ன? 4. முதலில் எதைப் படிக்கவேண்டும். ஏதேனும் வரிசை இருக்கிறதா? 5. இதன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? 6. இவை ஒவ்வொன்றும் திவ்யப்ரபந்தத்திற்கு வேறு வேறு விளக்கமா? அல்லது அதன் அர்த்ததின் விரிவாக்கமா?

ஸ்த்ரீகள் எனென்ன காலக்ஷேபங்கள் அந்வயிக்கலாம் என்று தெரியப்படுத்தவும்.

ஸ்த்ரீகள் அகத்தில் நித்யானுசந்தானத்தின் ஒரு அவ்யமாக கத்ய த்ரயத்தைச் சேவிக்கலாமா? அல்லது அது புருஷாளுக்கு மட்டும்தானா? அப்படி சேவிக்க கூடாது என்றால், ஸ்த்ரீகள் அர்த்தம் புரிந்து கொள்வதற்காக கத்ய த்ரய உபன்யாசத்தை கேட்கலாமா?

மாங்கல்ய ஸ்தவம் ஶ்லோகத்தைச் சுமங்கலிகள் மட்டும்தான் சேவிக்கலாமா அல்லது கணவரை இழந்த கைம்பெண்களும் சேவிக்கலாமா?

திவ்ய ப்ரபந்தத்தில் “ராமா” என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? ராமர் என்ற பெயர் தமிழில் எப்படி வரும்?

எங்களுக்குத் தெரிந்த திருக்கோயிலில் க்ருஷ்ணபக்ஷ ப்ரம்மோற்சவம் சமயம் திருத்தேர் மற்றும் பூர்ணாஹுதி அமாவாஸை அன்று வந்தால் அச்சமயம் வேதபாராயணம் பண்ணலாமா?

ப்ரம்மோற்சவம் சமயம் நம் முன்னோர்கள் இங்கே வருவர் என்று சொல்கின்றனர். அப்படியிருக்க ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாமா? அதனால் ஏதேனும் பாபம் ஏற்படுமா?

வேதம் அனாதி என்றால் பரத்வாஜர் மற்றும் இந்திரன் இருவருக்கும் நடந்த கதைப் பற்றி எதில் குறிப்பிட்டுள்ளது? அதுவும் வேதம் பற்றிய கதைதானே அப்படியென்றால் எப்போது நடந்திருக்கும்?

ப்ரபன்னர்கள் ஸ்ரீராம் சரித்ரமானஸ் சேவிக்கலாமா?

திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் முதல் மூன்று அடிகளின் முதல் எழுத்து ப்ரணவத்தைக் குறிக்கும் என்றும் ஆனால் அதன் வரிசை மாறியிருக்கும் என்றும் சொல்வர். சிலர் ஆழ்வார் வேதம் ஓதும் குலத்தில் பிறக்காததனால் இவ்வாறு இயற்றியுள்ளார் என்கின்றனர். இந்தக் காரணம் சரியா? அப்படியென்றால் இதே காரணத்தினால்தான் அமலனாதிபிரானிலும் திருப்பாணாழ்வார் இதேபோல் ப்ரணவத்தை பாசுரத்தில் முதல் எழுத்தாக குறிப்பிட்டுள்ளாரா?.

திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தம் எது? திருநெடுந்தாண்டகமா அல்லது பெரிய திருமடலா? எது என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?

கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் (காலை,மாலை அல்லது இரவு) சேவிக்கலாமா? சேவிக்க விதிமுறைகள் இருக்கின்றதா?

சில ஶ்லோகங்கள் , பாசுரங்களுக்கு பலஸ்ருதியாக மறுபிறவி கிடையாது என்றும், ஸ்ரீவைகுண்டம் செல்வர் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் மோக்ஷத்திற்கு ஶரணாகதிதான் உபாயம் என்று இருக்கிறது. அப்படியென்றால் இந்தப் பலஸ்ருதியை எப்படிப் புரிந்துகொள்வது?

தேசிகர் நாள்பாட்டில் வரும் அடியானது “தீதாகிய மாயக்கலைகளை” அல்லது “தீதாகிய மாயக் களைகளை” இதில் எது சரி?

நம் ஸம்ப்ரதாயத்தில் சந்தைமுறைப்படி ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம் மற்றும் பாகவதம் கற்கும் வழக்கமுண்டா? இல்லையென்றால் ஏன் அப்படி ஒரு முறையில்லை. இவையெல்லாம் காலக்ஷேப க்ரந்தங்களா?

யாராவது நமக்கு மருந்து மாயம் வைத்ததாக இருந்தால் அது நமக்கு பாதிக்காமல் இருக்க என்ன தேசிக ஶ்லோகம் பாராயணம் பண்ணணும்”

ப்ரளயகாலத்தில் எல்லா ஜீவராசிகளும் பெருமாள் வயிற்றில் ஜடமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ருஷ்டிக்கு முன் அந்தக் காலத்தில் ப்ரக்ருதியின் நிலை என்ன? ப்ரளயத்தின் பொழுது ஆலிலை கிருஷ்ணணின் வடிவத்தை நாம் நினைத்துப் பார்த்தால், இலையில் பாலகிருஷ்ணர் இருப்பதற்கு இந்தத் தண்ணீரும் ப்ரபஞ்சமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், மூல ப்ரக்ருதி இந்த வடிவங்களாக வேறுபடுவது ஸ்ருஷ்டியின் போதுதான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ப்ரளய காலம் ஆலிலை க்ருஷ்ணர் இதை எப்படி புரிந்துகொள்வது?

ஜீவர்கள் மோக்ஷம் அடையும் போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவதாகக் கூறப்படுகிறது, மேலும் அது ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய லோகத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது, அதுவும் நித்யலோகமா? அது எதனால் ஆனது? ஆதிசேஷன் நித்ய சூரியாக இருந்தாலும், பெருமாளை போல் விபுவாக இருக்க முடியாது, அப்படியிருக்க, இரண்டு இடங்களிலும் பெருமாளுக்கு படுக்கையாகவும், இருக்கையாகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்கிறார்? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சம் என்று நம் பூர்வாசார்யர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? அக்காரணத்தினால் தான் ஸ்வாமி தேசிகன் சிறிய திருவடி மீது ப்ரத்யேகமாக ஸ்தோத்திரம் ஏதும் இயற்றவில்லையா ? பரந்யாஸம் செய்து கொண்ட ஶ்ரீவைஷ்ணவர்கள் பெரிய திருவடியைப்போல் சிறிய திருவடியையும் உபாசிக்கலாமா ?

நாவலப்பாக்கம் ஸ்ரீ உ வே வாஸுதேவ தாத்தாசார்யர் ஸ்வாமிகள் எழுதிய “வைணவக் கொள்கையில் வேதாந்த தேசிகன்” (Vedanta Desikan on the Principles of Vaishnavism- ஆங்கில மொழிபெயர்ப்பின் பக்கம் 232) என்கின்ற நூலில், அத்வைத தத்துவஞானி வித்யாரண்யர் சததூஷணியை விமர்சித்தபோது, ஸ்வாமி தேசிகன் ஸம்ஸ்க்ருத “ச” என்ற ஒற்றை எழுத்தை வைத்துக் கொண்டு “ச கார ஸமர்த்தணத்தில்” எதிர் விமர்சித்திருக்கிறார். ”வித்யாரண்யரை ஸ்வாமி தேஶிகன் “ச” என்ற ஒற்றை அக்ஷரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு எதிர் விமர்சித்திருகிறார்? மேலும் சக்கர சமர்த்தனம் இன்றும் இருக்கின்றதா? விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், திரௌபதி மகா விஶ்வாஸத்துடன் வஸ்த்ராபஹரணத்தின் சமயம் உதவிக்காக கூக்குரலிட்டு அழுதபோது அவளுக்கு வேண்டிய உதவியை தான் செய்யவில்லை என்னும் மன பாரத்துடன் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டதாக உத்தவனிடம் கூறியதை பெரியோர்களிடமும் உபன்யாஸங்களிலும் அடியேன் பலமுறை கேட்டிருக்கிறேன். அடியேனின் மிகப்பெரிய மற்றும் அதிருப்தியான சந்தேகம் என்னவென்றால், பெருமாள் அவளுக்குப் போதுமானதைச் செய்யவில்லை என்று மிகவும் அத்ருப்தியாக உணரும்போது, அவள் உதவிக்காக அழும் வரை அவன் ஏன் காத்திருக்க வேண்டும்? ஏன் காத்திருந்தார்?. பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தை பூங்காவில் விளையாடும்பொழுது கீழே விழுந்து அல்லது காயமடைவதைப் பார்க்கும்போது, விழுந்துவிடாமல் அல்லது காயமடையாமல் பாதுகாக்க அவர்களை நோக்கி விரைந்து செல்கிறோம் இல்லையா? “அம்மா, நான் கீழே விழுந்துவிட்டேன் ரத்தம் வருகிறது, தயவு செய்து என்னைக் காப்பாற்று?” என்று குழந்தைகள் கேட்பதற்காக நாம் காத்திருப்பதில்லையே. லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் நாமே நமது குழந்தைகள் மீது எந்த ஒரு எதிர்ப்பார்பும் இல்லாத அளவற்ற பாசம் வைத்திருக்கும்போது, ஜகன்மாதா மற்றும் ஜகத் பிதாவாக தாயாரும் பெருமாளும் ஏன் ஶரணாகதி செய்து கொள்ளவோ அல்லது உதவி கேட்கவோ காத்திருக்கிறார்கள்? பெருமாள் தாயாரையம், பெரியவர்ளையும் அவமதிக்கும்படியாக என்னுடைய இந்தக் கேள்வி இருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் விசிஷ்டாத்வைதத்தை உதாரணங்களுடன் மிக எளிமையாக விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுக்கு சமீபத்தில் ஸமாஶ்ரயணம் கிடைத்தது. அதற்கு முன்னர் நான் தென்கலை ஸம்ப்ரதாய தனியன்களையும், உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களையும் புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு சேவித்து வந்தேன். 1. தற்சமயம் வடகலை ஸம்ப்ரதாய ஸமாஶ்ரயணம் கிடைத்த பின்னர் உபதேச ரத்தினமாலையைச் சேவிக்கலாமா? 2. அது வழக்கமில்லை என்றால் வடகலை ஸம்ப்ரதாய குருபரம்பரையைப் பின்பற்ற தமிழில் உள்ள க்ரந்தங்களை அடியேனுக்கு தெரிவிக்க வேணுமாய் விண்ணப்பிக்கிறேன்.

www.sadagopan.org இன் e- புத்தகங்களில் ஒன்றான ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தின் உத்திர ஶதகத்தில் உள்ள ஸ்லோகம் 56க்கான தமிழ் மற்றும் ஆங்கில வியாக்கியானம் / விளக்கம குழப்பமாக உள்ளது. கீழ் வரும் ஸ்லோகத்தின் இரண்டாம் பாதியில் देवीहस्ताम्भुजेभ्यश्चरअणकिसलये समवहद्भयोऽपहृत्य प्रत्यस्यानन्तभोगं झटिति जलपुटे चक्षुषी विस्तृणानः। “अक्षिप्योरश्च लक्षम्याः स्तनकलशकनत्कुङ्कुमस्तोमपङ्कात् देवः श्रीरङ्गधामा गजपतिघुषिते व्याकुलः स्तात् पुरो नः”॥ அதில் “மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்று விளக்கம் இருக்கின்றது. தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

தென்னாசார்ய உபந்யாஸகர் ஒருவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ‘சுக்லாம் பரதரம்’ என்பதை மேற்கோள் காட்டி விஷ்வக்சேனரும் கணபதியும் ஒருவரே என்று கூறினார். இது சரியா?

ஸ்வாமி ஸாதித்த திருக்குருகைப் பிரான் உபன்யாசத்தில் அவர் ஸ்ரீமந் நாதமுனிகள் வம்சம் என்று அறிந்தேன். எனில் இராமானுஜரும் ஸ்ரீமந்நாதமுனிகளின் உறவினரா? பிறகு ஏன் ஆளவந்தார் வரதன் ஆலயத்தில் இராமனுஜரைப் பற்றி திருக்கச்சி நம்பிகளிடம் கேட்டு அறிந்தார்? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி.

துளசி , விஷ்ணுவுக்கு சாபம் அளித்ததால் சாளக்கிராமமாக அவர் ஆனதாகவும், ஜலந்திரன் எனும் அசுரன் மனைவியாக துளசி இருந்தாகவும் கூறப்படும் விஷயங்கள், புராணத்தில் உள்ளதா? இதில் விஷ்ணுவின் பெருமைக்குக் குறை போல் இருக்கின்றது தெளிவிக்க வேண்டுகிறேன்.

வராஹ அவதாரத்தில், எம்பெருமான் பூமாதேவியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்கின்றார். ப்ரளயத்தின் போது, எம்பெருமானின் நாபியில் அனைத்தும் (எல்லா உலகங்களும்) வைக்கப்படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு பூமி, ஹிரண்யாக்ஷன் இருப்பதைக் காண்கிறோம். இந்த நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன? சிருஷ்டிக்கு முன்பா அல்லது பின்பா? இதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்?

சில இராமாயணப் பதிப்புகளில் தாரா (வாலியின் மனைவி) க்ஷீர சாகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா? அதற்கான உண்மையான குறிப்பப எதிலாவது கூறப்பட்டுள்ளதா? பொய் என்றால், அவள் எப்படி வந்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

உங்கள் யூடியூப் சேனல்களிலிருந்து ஸ்தோத்ரங்கள் மற்றும் பிரபந்தங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய வரிசையைக் கொண்ட அட்டவணையை இடுகையிட முடியுமா? சில காரணங்களால் என்னால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கலந்துகொள்ள முடிவதில்லை.ஒவ்வொரு பதிப்பிற்கும் டெலிகிராம் சேனலைப் பின்தொடர முடிவதில்லை. நமது சம்ப்ரதாயத்தை ஆஃப்லைனிலும் கற்க என்னைப் போன்ற பாகவதர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அடியேன் தன்யாஸ்மி.

பூமா தேவி மற்றும் நீளா தேவி என்பவர்கள் யார்? அவர்களும் ஸ்ரீ தேவியை போல் விபுவா? அவர்கள் ஈஶ்வர கோடியையா அல்லது ஜீவ கோடியைச் சேர்ந்தவர்களா?

த்ரோணாச்சார்யர் (அப்போதைய சேனாதிபதி) மிகச்சிறந்த ஆசானாக இருந்தபோதிலும் மற்ற மஹாரதிகளின் வழியில் தானும் சேர்ந்து ஏன் அபிமன்யுவை கொல்ல துணைநின்றார்? அதில் க்ருப்பாச்சார்யரும் ஏன் பங்குக்கொண்டார்? ப்ராமணர்களாக இருந்ததும் த்ரோணாச்சார்யர் மற்றும் க்ருப்பாச்சார் மஹாபாரத யுத்தத்தில் ஏன் கலந்துக்கொண்டனர்?

அடியேன், பெருமாளின் பரசுராம அவதாரத்தின் முக்கியத்துவம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?

ஸ்வாமி தேசிகன் அருளிய “பரமத பங்கம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தில் பின் வரும் இந்த பங்க்தி எந்த பகுதி (chapter)யில் வரும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன். “சில மனிதர்களின் இயலாமையால் காலப்போக்கில் வேதங்களும், வேதாந்தங்களும் மறைந்தும், நலிவடைந்தும் போயின. இருப்பினும் இன்றளவும் அகஸ்தியர்ம் பரசுராமர், ஆபஸ்தம்பர், வ்யாஸர் முதலிய மகரிஷிகள் அவ்வேதங்களை மலய, மஹேந்த்ர, விந்திய , ஹிமாசலம் போன்ற அறிதான இடங்களில் அநுசந்தித்து வருகின்றனர். ஊழி காலம் முடிந்து மீண்டும் க்ருத யுகத்தில் மறைந்த வேதங்களை அவர்கள் மீண்டும் எடுத்துரைப்பர் என்பதாலும், வேதங்கள் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது” என்று சாதித்திருப்பார்.

திருவாய்மொழி இரண்டாம் பத்தில் ஆழ்வார் ஆணல்லன் பெணல்லன் அல்லா அலியுமல்லன் என்று குறிப்பிடுகிறார். இதன் அர்த்தத்தை விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் : திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருமொழி, பெரியாழ்வார் திருமொழி என அனைத்துப் பதிகங்களுக்கு தலைப்புள்ளது. இத்தலைப்பின் தாத்பர்யம் என்ன என்பதை சாதித்தருள வேண்டுகிறேன். எதைக்கொண்டு இத்தலைப்புகள் வகைப்படுத்தப்பட்டன?

அடியேன், நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் காமதேவனை ப்ரார்த்திக்கின்றாள். இதற்கு உத்தமூர் ஸ்வாமியின் வ்யாக்யானத்தில், “ஸ்வாமி தேசிகன், ஆண்டாள் நைமித்திக கர்மா செய்கிறாள் என்றும் மேலும் அவள் காமதேவனின் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானைத்தான் ப்ராத்திக்கின்றாள் என்று கூறுகிறார்” என இருக்கின்றது. மேலும் , ஸ்வாமி தேசிகனின் “நாச்சியார் க்ருஷ்ணணைப் பெறுகைக்காகப் பண்ணின காமதேவார்சனம் ஶ்ருங்கார சமாத்யனுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம்” என்ற வரிகளும் அந்த வ்யாக்யானத்தில் உத்தமூர் ஸ்வாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வரிகள் ஸ்வாமி தேசிகனின் எந்த க்ரந்தத்தில் வருகின்றது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

பகவானின் பூர்ண, சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களைப் பற்றி விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களில் ஜீவனைத்‌ தேர்ந்தெடுத்து அவர்களுள் எம்பெருமான் ப்ரவேசிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனின் ஏழு வயது பெண் இக்கேள்விகளைக் கேட்கிறாள், பெருமாளும் ஆதிசேஷனும் எப்பொழுது சந்தித்தார்கள். ஆதிசேஷன் பெருமாளுக்குப் படுக்கையாக எப்படி ஆனார்? எப்பொழுதிலிருந்து பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்துக்கொண்டிருக்கிறார்? விளக்க வேண்டுகின்றேன்.

எனது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால், எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கின்றது , நான் என்னென்ன ஸ்லோகங்களைச் சொல்ல முடியும்? மேலும், பெண்கள் வீட்டில் ஸ்ரீமத் இராமாயணம் மூலம், படிக்கலாமா என்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

பாசுரம்/ ஸ்தோத்ரம் சேவித்தல் மற்றும் பாசுரம்/ஸ்தோத்ரம் பாராயணம் செய்தல் என்பதின் வித்யாசம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.

பூர்வர்களின் ஸ்ரீஸூக்திகள் என்றால் என்ன? அடியேன்.

அடியேன் கேள்விப்பட்ட வரை, தாயார் கூர்மாவதாரத்தின் பொழுது மந்தர மலையிலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படியென்றால் தாயாரும் உயர்ந்த ஜீவாத்மாவா? மற்றும் பெருமாளின் முன் அவதாரங்களில் தாயார் இல்லையா? என் மனதும் இதை ஏற்க மறுக்கிறது. தாங்கள் என்னை மன்னித்து எனது ஐயத்தைப் போக்க ப்ராத்திக்கிறேன்.

அடியேன் ஸ்ரீமத் அஹோபில மடத்தைச் சேர்ந்தவள், அடியேனின் ஆசார்யன் பற்றி அறிய விரும்புகின்றேன்.

அடியேன் சம்ப்ரதாயம் மற்றும் அனுஷ்டானங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். எப்படி அறிவது என்ற வழியை தயை கூர்ந்து தெரிவிக்கவும்.

ராமானுஜாய நம: அடியேன். அடைக்கலம் நான் புகுந்தேனே என்பதையும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்பதையும் எப்படிப் புரிந்து கொள்வது ஸ்வாமி. நீயே கதி வேறு புகல் இல்லை என்றும் ப்ரத்யக்ஷமாய் கச்சியிலும் திருமலையிலும் பெருமாள் சேவை சாதிக்கிறார் என புரிந்து கொள்வது சரியா? தந்யவாதங்கள் ஸ்வாமி 🙏🙏🙇‍♀️🙇‍♀️அடியேன்.

அபய ப்ரதாந சாரத்தில் – விபீஷண ஶரணாகதியில் ஶரணாகதியின் 6 அங்கங்கள் உள்ளது அதே போல் த்ரிஜடை தன்னைக் காக்கச் செய்த ஶரணாகதியை மோக்ஷார்த்தமாக செய்த ஶரணாகதி எனக் கொள்ளலாமா?

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பராசர பட்டர் “ஏக பாத” என்ற ஶ்லோகத்திற்க்கு க்ருஷ்ணன் ஸ்ரீமந்நாராயணனின் பாதி அம்சம் என்கிறார். அதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நான்கு திருக்கைகளுடன் பர வாஸுதேவரே கண்ணனாக திருவவதாரம் செய்தார் என்கிறார். கீதையில் கண்ணன், தான் பரப்ரம்மம் என்பதையும் இந்த முழு உலகமும் தன் படைப்பு என்று கூறியதையும் வ்யாக்யானத்தில் சாதிக்கிறார். கண்ணன் யாரின் திருவவதாரம்?

மமதா த்யாகம் மற்றும் கர்த்ருத்வ த்யாகம் விரிவான விளக்கம் வேண்டுகிறேன். தன்யோஸ்மி அடியேன்.

ஸ்ரீரங்கத்தில் மூலவர் சுதர்சன ஆழ்வாருடன் 32மூர்த்திகள் (சங்கர்ஷண அனிருத்தாதிகள்…) இருப்பர். இவர்கள் யார்? ஸ்வாமி தேசிகன் 32 என்ற எண் கணக்கின் படியே ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஶந என்ற கோஷத்தை ஸ்ரீ சுதர்சன அஷ்டகத்தில் அமைத்திருக்கிறார். இந்த 32 என்ற எண்ணிற்கும் சுதர்சன ஆழ்வாரும் தனித் தொடர்பு உண்டா? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.

பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகள் என்றால் எதை குறிப்பிடுகின்றது?

ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில், விஷ்ணு மற்றும் வாஸுதேவர் போன்ற வ்யாபக மந்திரங்களில் நாராயணனின் ஏகாதச விஷயார்த்தம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படியிருக்க, ஸஹஸ்ரநாமத்தை ஏன் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று சொல்கின்றோம்?

ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்ர பாடம் மற்றும் ப்ரபந்தம் கற்க ஆசையாக உள்ளது. இணையவழியில், கற்க முடியுமா ஏதேனும் குழுமம் உள்ளதா?

பெரியாழ்வார் திருமொழி 4-6-8ல் “நம்பி பிம்பியென்று” என்ற சொல் யாரைக் குறிப்பிட்டு ஆழ்வார் பாடியுள்ளார்? நம்பி என்பது இங்கே பெருமாளின் திருநாமத்தைக் குறிக்கிறதா? அடியேன்

ஏன் பீஷ்மர், த்ரோனர், க்ருபாசாரியர் போன்ற பெரியவர்கள் சூழ்ச்சியாய் சொக்கட்டான் விளையாடுவதை கண்டு அமைதியாய் இருந்தனர். மேலும் த்ரௌபதி அவமானப்பட்ட போதும் மௌனம் காத்தனர். அவர்களே, அதர்மம் என்று அறிந்தே இரண்டாம் முறை பகடையாட அனுமதித்தனர், அதோடு அல்லாது அதர்மம் பக்கம் நின்று போர் புரிந்தனர்? இதன் காரணம் யாது?

முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?

திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் அர்ச்சா அவதாரங்கள் பற்றிய கேள்விகள். திவ்ய தேசத்து எம்பெருமானின் திருநக்ஷத்ரங்களை, ஒரு பட்டியல் போல் வெளியிட முடியுமா அந்தத் தினத்தில் அத்திவ்ய தேசத்து எம்பெருமான் பற்றிய பாசுரங்களைச் சேவிக்க உதவியாக இருக்கும்.

ஒரு ப்ரபன்னன் ஜயதேவரின் கீத கோவிந்தத்தைச் சேவிக்கலாமா? ISKCON முறைப்படி பெண்கள் துளசிமாலை அணிந்து “ஹரே க்ருஷ்ணா” ஜபம் செய்யலாமா?

இல்லத்தில் நாச்சியார் திருமொழி பாசுரங்களைச் சேவிக்கலாமா?

கருடதண்டகம் போல் ஹனுமனுக்கு நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்துதி ஏதேனும் இருக்கின்றதா?

திருவாசிரியம் இயற்பாவில் கடைசி ப்ரபந்தமாகவும் இல்லை,மேலும் சேவாகாலத்தில் கடைசியாக சேவிக்கும் ப்ரபந்தமாகவும் இல்லாதபோது, பெரிய சாற்றுமுறையில் ஏன் சேவிக்கின்றார்கள்?

ஹனுமான் திருவடி என்று நம் ஸம்ப்ரதாயத்தில் குறிப்பிடப்படுகிறார். ஏன் அப்பயெரிட்டுக் குறிப்பிடுகிறோம்? ப்ரபன்னர்கள் ஹனுமன் சாலிசா சொல்லலாமா? ஏனென்றால் அதில் “और देवता चित्त ना धरई| हनुमत सेई सर्व सुख करई” என்று வருகிறது. இவ்வரி சற்று முரண்பாடாக இருக்கின்றதால் அடியேன் இதைச் சேவிக்கலாமா என்ற சந்தேகம்.

நம்மாழ்வார் திருவடி தொழல் திருவாய்மொழியின் கடைசி இரண்டு பதிகங்களை அடியொற்றி, எப்படி இரு ஜீவாத்மா எம்பெருமானை அடைகின்றது என்பதைக் காட்டும்படி நடக்கின்றது என்று புரிகிறது. திருமங்கையாழ்வாருக்கும் அவ்வாறு திருவடி தொழல் உத்சவம் நடப்பதின் தாத்பர்யம் என்ன?

“ஸ்வாமி தேஶிகன் பிரபந்த ஸாரத்தில் “”வையகமொண் பொய்கை பூதம் பேயாழ்வார் ..””….என்ற பாசுரத்தில் 12 ஆழ்வார்களையும் பின்னர் “”ஐய்யன் அருள் கலியன் யதிராசர் தம்மோடு”” என்று கடைசியாக யதிராசர் பெயரைச் சேர்த்துள்ளார்.ஆனால் இராமானுச நூற்றந்தாதி திருவரங்கத்தமுதனார் அவரால் இயற்றப்பட்டது. ஸ்வாமி தேஶிகன் எதனால் அமுதனார் பெயரை விட்டுவிட்டு யதிராசர் பெயரைச் சேர்த்தார்.

அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர், அந்த நாட்களில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவர் அகத்தில் அமுதுசெய்யலாமா?

அஷ்டகா ஶ்ராத்தம் பற்றிய குறிப்பு.

அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாளில்தான் வருமா இல்லை சாம வேதக்காரர்களுக்கு ஏதாவது வித்தியாசம் உண்டா?

ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டும் வேதங்களின் பகுதியா? அவற்றை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?

தென்னாச்சாயர் ஸம்ப்ரதாயத்தில் “ஸ்ரீ ஶைலேச தயா பாத்ரம்” என்ற தனியன் நம்பெருமாளால் மாமுனிக்குக் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இது உண்மை என்றால், நாம் தேஶிகன் மற்றும் மாமுனி ஆகிய இருவரின் தனியன்களையும் தினமும் சேவிக்கலாமா?

தேசிகன் தனியனை, தேசிகனின் ஸ்தோத்ரம் சேவிக்கும்போது மட்டும் சேவிக்கணுமா? மற்ற ஶ்லோகத்திற்கும் சேவிக்கலமா?

இராமானுஜ குலத்தைச் சேர்ந்தவர்கள் தேஶிகன் ஸ்தோத்ரங்கள்,பாதுகா ஸஹஸ்ரம் மற்றும் தேஶிக ப்ரபந்தங்களைச் சேவிக்கலாமா?

ஸ்ரீரங்கநாதனே மாமுனிகளை தம் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் நாம் ஏன் மாமுனியின் திருநக்ஷத்ர தினத்தைக் கொண்டாடுவதில்லை? அடியேன் வடகலை ஐயங்கார், பல வித்வான்களிடம் கேட்டு சரியான பதில் கிடைக்காததாலும், மேலும் ஏன் இந்த ஸம்ப்ரதாய பேதங்கள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியும் இங்கே கேட்டிருக்கிறேன்.

கோவில்களில் வேங்கடாத்வரி கவியின் லக்ஷ்மி சஹஸ்ரம் சேவிக்கலாமா?

“1. தேசிகப் ப்ரபந்தத்தில் (மும்மணி கோவையிலும், நவமணி மாலையிலும் உள்ள தசாவதார பாசுரங்கள் தவிர) நரசிம்மருக்கென்று வேறு பாசுரம் உண்டா? 2. தன்வந்த்ரியின் மேல் ஸ்வாமி தேசிகன் ஏதேனும் பாசுரம்/ஸ்லோகம் இயற்றி உள்ளாரா? ஆம் எனில் என்ன பாசுரம்/ஸ்லோகம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். 3. பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் மங்களாசாசனத்தின் போது “பரிணாத பலக்ராசா” என்று தொடங்கும் ஆஞ்சநேயர் பற்றிய ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் பாராயணம் செய்தார். ஸ்வாமி தேசிகனின் எந்தப் படைப்பு இது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

நாச்சியார் திருமொழி பாசுரம் பாராயண நாளுக்குப் பதிலாக கூடாரை வெல்லும் நாளில் பல கோவில்களில் நூறு தடா உற்சவம் ஏன் கொண்டாடப்படுகிறது? மேலும் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அக்காரவடிசில் மற்றும் வெண்ணெய்க்குப் பதிலாக அன்றைய தினம் சர்க்கரைப் பொங்கல் ஏன் அம்சை பண்ணப்படுகிறது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஒரு உபந்யாஸத்தின் மூலம் கார்யவைகுண்டம் என்று ஒன்று இருப்பதாக அறிந்துகொண்டேன். அப்படியென்றால் என்ன? முமுக்ஷூக்கள் அங்கே செல்வார்களா?

ஸ்வாமி தேஶிகன் அருளிய பாதுகா ஸஹஸ்ரத்தில் ஶ்வேத தீபம் என்று ஒன்று வருகிறது. அது எங்கே இருக்கிறது? அந்த ஶ்லோகத்தின் அர்த்தவிசேஷம் என்ன?

18 புராணங்கள் இருக்க ஏன் 6 மட்டும் ஸாத்வீக புராணமாகுகிறது. மற்ற புராணங்களை எம்பெருமான் நினைத்தால் மறையச் செய்திருக்க முடியும் அல்லவா? அப்படி ஒரு நிலை இருந்தால் அனைவரும் விஷ்ணு பக்தர்களாகி ஸத்கதி அடையும் வழியும் கிட்டியிருக்குமே. ஏன் அப்படிச் செய்யவில்லை?தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.

ஏன் திருவாறாயிரப் படி ப்ரதானமாக வடகலையார் ஸம்ப்ரதாயத்திற்கு இருக்கிறது. ஸ்வாமி தேஶிகன் ஏனைய வ்யாக்யானத்தை அவரின் க்ரந்தங்களில் குறிப்பிட்டுள்ளாரா?

ஸ்வாமி தேசிகனின் நவமணிமாலையில், “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….” என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருக்கும், அம்மாணை, ஊசல் ஏசல் பரவு என்பது என்ன அடியேன்?

வேதம் பற்றிய சந்தேகம். 1. வேதங்கள் ஏன் மறைந்து எம்பெருமானைப் பற்றி கூறுகின்றன? ஏன் வெளிப்படையாகவே எல்லா இடங்களிலும் கூறவில்லை? 2. எம்பெருமான் ஏன் பல சிறு தெய்வங்களையும், பல ஸம்ப்ரதாயங்களையும் படைத்து மக்களை அவரவர் அறிவிற்கேற்ப பின்பற்ற வைத்திருக்கிறார்? தான் ஒருவனே பர தெய்வம் என்று ஶரணாகதி மார்க்கத்தை அனைவரும் பின்பற்றும்படி செய்திருக்கலாமே?

வேத மஹிமை உபந்யாஸத் தொடரின் முதல் பாகத்தில் ப்ரதான ஶதகம் மற்றும் காஞ்சி பேரருளாளன் பத்திரிகையில் ஸ்வாமி எழுதிய விளக்கவுரைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவ்விரண்டும் எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கவும். ebook ஆக இருந்தாலும் பரவாயில்லை. அடியேன்.

நமஸ்காரம் ஸ்வாமின் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியின் பின் புறம் நரசிம்ம பெருமாள் எழுந்தருளியிருக்கும் தாத்பரியம் என்ன ?

பொதுவாக உபநிஷத் பாராயணம் சூர்யாஸ்தமனத்திற்குப் பின் செய்வதில்லை. திருவாய்மொழி என்பது உபநிஷத்தின் ஸாரம் என்கிறோம், ஆனால் உபநிஷத் பாராயணம் போல் திருவாய்மொழி பாராயணத்திற்கு ஏன் அந்தக் கட்டுப்பாடு இல்லை?

அடியேன் நவராத்ரி என்பது துர்கா தேவியை 9 நாளும் பூஜிக்கும் வழக்கம் என்றும் சிவன் உரைத்ததோ அல்லது ஶாகேத்ய சம்ப்ரதாயத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். நம் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பாசுரங்களிலோ, இதிஹாச புராணங்களிலோ நவராத்ரியின் குறிப்பு எங்கேயும் உள்ளதா என அறிய ஆவலாக இருக்கிறது? நம் பூர்வாசார்யர்கள் கொண்டாடியிருக்கின்றனரா? என்று தெளிவிக்கவும்.

பிள்ளை பிறந்து ஓர் வருடத்திற்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து 17 வருடம் ஆகிறது.புக்ககத்தில் மாமியார் ஶ்ராத்தம், இதர தர்ப்பணாதி கர்மானுஷ்டாத்தை விவாகரத்து ஆன ஸ்திரீ எந்த முறையிலாவது கடைபிடிக்க வேண்டுமா?அல்லது தேவையில்லையா? புக்காத்திலிருந்து எந்த ஜீவனாம்சமும் சொத்தும் பெறவில்லை.மேற்படி விஷயத்திற்கு அருள் கூர்ந்து பதில் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்தோத்ரம், ஶ்லோகம், பாசுரம் என்றால் என்ன? ஏன் தனித்தனி பெயர்களிட்டு குறிப்பிடுகிறோம்.

திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று கேள்விப்பட்டேன். இது சரியா? இந்த ஸ்துதி தேஶிக ஸ்தோத்ரமாலாவில் இல்லாததால் இந்தச் சந்தேகம். அடியேன்

த்யாகராஜ ஸ்வாமி ஸ்ரீராம பக்தர் மற்றும் ஸ்ரீராமனை ஆராத்ய தெய்வமாகக் கொண்டவர் என்று அவரின் கீர்த்தனைகள் மூலம் அறியலாம். இருப்பினும் “மோக்ஷமு கலதா” எனும் கீர்த்தனையில் சரணத்தில் “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்று சிவனிடம் மோக்ஷம் கேட்பது போல் தெரிகிறதே? ஸ்ரீராமனிடம் பக்தி கொண்டவர் சிவனிடம் எதற்காக மோக்ஷம் கேட்கவேண்டும்? ஒரு வேளை ஸ்ரீராமனை சிவனாக பாவித்து பாடியுள்ளார் என்று புரிந்து கொள்வதா? விளக்க ப்ரார்த்திக்கிரேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும்.

ஆண்டாளின் திருக்கல்யாணம் (நாச்சியார் திருமொழிப்படி) என்று நடந்தது? திருப்பாவைக்குப் பின் தையொரு திங்கள் என்று பாடுகிறாள் அப்படியானால் ஏன் நாம் போகியன்று ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடுகிறோம்.

எம்பெருமாளின் ஹம்ச அவதாரமும், ஹயக்ரீவ அவதாரமும் ஒன்றா? ஹயக்ரீவ காயத்ரியில் ஹம்சம் என்ற பெயர் வருகிறதால் எழுந்த சந்தேகம்.

அடியேன் சில தினங்களாக எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts) மற்றும் பழைய மிகவும் கசப்பான நினைவுகள் தோன்றி என்னை பகவான் நாமா சொல்லவோ அல்லது சந்தை பாடம் கற்கவோ, ஸ்தோத்ரம் சேவிக்கவோ மற்றும் நித்யானுஸந்தானம் செய்யவோ விடாமல் மிகவும் வருத்துகிறது. அடியேனும் எம்பெருமான் திருநாமங்களை உச்சரித்து அவ்வெதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறேன் ஆனால் என்ன செய்தாலும் அதிலிருந்து வெளியே வர இயலவில்லை. எதிலும் புத்தியை செலுத்தவும் முடியவில்லை. இவற்றிலிருந்து மீண்டு எம்பெருமான் ஸ்மரணையில் புத்தியைச் செலுத்த என்ன வழி என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

ஸம்ஸ்கிருதத்தை வடமொழி என்று பரவலாக சொல்கிறார்கள்.அது மனதிற்கு நெருடலாக உள்ளது. அது தெய்வமொழி அல்லவா. தெய்வம் அனைத்து திசையிலும் வியாபித்திருக்கும் அல்லவா .வடமொழி என்பது வடநாட்டு மொழி என்று அரத்தமா அல்லது வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா.

சர்வதேச யோகா தினத்தன்று sudarsanam GSPK groupஇல் ‘மன அழுத்தத்திற்கு ஸ்வாமி தேசிகன் தெரிவிக்கும் அரிய மருந்துகளில் ஒன்று யோகா ‘ என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதில் முன்பு வெளியிடப்பட்ட சுதர்சனத்தின் கேள்வி பதில்(Q16JUL21003) ஒன்றும் பகிரப்பட்டது. இதை ஸ்வாமி தேஶிகன் எந்த க்ரந்தத்தில் சாதித்துள்ளார் என்பதை கூற ப்ரார்த்திக்கிறேன். தாஸன்

கருடபஞ்சாஶத் சந்தை வகுப்புக்கு ஏதேனும் தகுதி வேண்டுமா? அப்படியில்லை என்றால் தங்கள் SampradayaManjari YouTube Channelலில் santhai videoவாக பதிவிடவும், முடிந்தால் சந்தை வகுப்பு ஆரம்பிக்கவும்.

நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்வது அனுமதிக்கப்படுகிறதா என்று அடியேன் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஸ்ருஷ்டியின் போது 5 ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என அனைத்தும் படைக்கப்பட்டது என பாகவதத்தில் உள்ளது. ஸ்ருஷ்டிக்கு முன் இந்திரன் என்பவன் இருந்தாரா? அல்லது அவரின் கர்மாவால் இந்திரன் என்று வேறுபடுகிறாரா? இதை எப்படிப் புரிந்துக்கொள்வது.

பங்குனி உத்திரம் திருநாள் அன்று எம்பெருமானார் கத்யத்ரயம் சேவித்து பெரிய பெருமாளிடம் ப்ரபத்தி செய்துகொண்டார் என்று நம் பெரியோர்கள் கூறி அடியேன் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு ஆசார்யனின் சம்பந்தத்துடன்தானே இக்காலத்தில் நாம் ப்ரபத்தி செய்துகொள்கிறோம். அவ்வாறு இருப்பின் எம்பெருமானார் எவ்வாறு தன் ஆசார்யன் அருகில் இல்லாதபோது தானாகவே ஶரணாகதி செய்து கொண்டார்? இதை எவ்வாறு சரியாக புரிந்துகொள்வது? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.

யாதவாப்யுதயம் என்பது பாராயண க்ரந்தமா? ஒரு காவியம் என்பதால் அதை கோஷ்டியாக சேவிக்கலாமா? அதன் அர்த்தத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாமா?

உப ப்ரம்மணம் என்றால் என்ன? அதில் எந்தெந்த புராணங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது ? தன்யாஸ்மி

Loading

Scroll to Top