1.ஆசாரமான பாத்திரங்கள் என்றால், பித்தளை, ஈயம், செப்பு, வெள்ளி, வெங்கலம், மரம் போன்றவைகளால் ஆன பாத்திரங்களை உபயோகப்படுத்தலாம். மண் பாத்திரங்களையும் (மண் சட்டி போன்றவைகள்) உபயோகிக்கலாம். ஆனால் அவை ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும், மறுமுறை உபயோகிக்கக்கூடாது. கல் சட்டி, மாக்கல் போன்றவைகளில் மாவு, ஊறுகாய்கள் வைத்துக்கொள்ள உபயோகிக்கலாம்.
எடுத்து சாதிக்கும்போது சிறியதாக வெள்ளி பாத்திரம், வெள்ளி கரண்டி போன்றவைகளை உபயோகித்தால் அது உசத்தியானது. அது இல்லாத பக்ஷத்தில் பித்தளையோ, ஈயமோ உபயோகிக்கலாம். குறிப்பாக இரும்பிலிருந்தோ, இரும்பு கரண்டியாலோ சாதிக்கக்கூடாது. இவை பெரியவர்களின் ஆசாரத்திலுள்ள பாத்திரங்கள். தற்காலத்தில் எவர்சில்வர் என்பது உபயோகத்திலிருக்கிறது. ஆனால் அது இரண்டாம் பக்ஷம்தான்.
2.தளிகைக்குக் கிணறு ஜலம் கிடைக்காத பக்ஷத்தில் சுத்தமான என்ன ஜலம் கிடைக்கிறதோ அதை உபயோகிக்கலாம். போர்வெல் இருந்தால் அதிலிருந்து நேரே குழாய் மூலம் ஜலம் வரும்படி ஏற்படுத்தி உபயோகிக்கலாம்.

