கார்த்திகை தீபம் சிவபெருமானுக்கு உரியது என்று அவர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் எம்பெருமானுக்கு உரியதுதான். ஏனென்றால் தீபத்திற்கு ஒளியைக்கொடுப்பவனே பகவான்தான் என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியன், சந்திரன், அக்னி என எல்லாவற்றுக்கும் ஒளியைக்கொடுப்பவன் பகவான்தான். க்ருத்திகா நக்ஷத்திரம் என்பது அக்னியின் நக்ஷத்திரம் அன்றைய தினம் அக்னிக்கும் தேவனான எம்பெருமானை வழிபடுவதுதான் உசிதம். இந்தப் பண்டிகைகளெல்லாம் அனாதியாக இருப்பவை. ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் அனாதிகாலமாக எம்பெருமான்தான் ஒளியைக்கொடுக்கிறார் என்பதனால்.

