வேலை செய்யுமிடம் மற்றும் வெளியிடங்களில் சொல்வது போன்ற பெருமாள், தாயார் தனியன் ஏதேனும் இருக்கிறதா? அடியேன் சுமங்கலியாக (தீர்க்க சுமங்கலியாக) இருப்பதற்குச் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஏதேனும் உண்டா? 

வேலை செய்யுமிடம் மற்றும் வெளியிடங்களில் சொல்வதற்குப் பெருமாள் , தாயார் தனியன் என்று கேட்டால், யதிராஜ ஸப்ததயின் முதல் இரண்டு ஶ்லோகங்களைச் சேவிக்கலாம்.

கமப்யாத்₃யம் கு₃ரும் வந்தே₃

கமலாக்₃ருஹமேதி₄நம் ।
ப்ரவக்தா ச்ச₂ந்த₃ஸாம் வக்தா

பஞ்சராத்ரஸ்ய ய: ஸ்வயம் ॥ (1)

ஸஹத₄ர்மசரீம் ஶௌரே:

ஸம்மந்த்ரிதஜக₃த்₃தி₄தாம் ।
அநுக்₃ரஹமயீம் வந்தே₃

நித்யமஜ்ஞாதநிக்₃ரஹாம் ॥ (2)

தீர்க்க சுமங்கலியாக இருக்கவேண்டி சொல்வதற்கான ஶ்லோகமானது

कन्ये दुग्धोदन्वतस्तावकीनं मन्ये रूपं मङ्गलं मङ्गलानाम् ।

यत्सावर्ण्यप्राप्तभद्रा हरिद्रा सौमाङ्गल्यं संविधत्ते वधूनाम् ॥

கந்யே து₃க்₃தோ₄த₃ந்வதஸ்தாவகீநம்ʼ மந்யே ரூபம்ʼ மங்க₃லம்ʼ மங்க₃லாநாம் ।
யத்ஸாவர்ண்யப்ராப்தப₄த்₃ரா ஹரித்₃ரா ஸௌமாங்க₃ல்யம்ʼ ஸம்ʼவித₄த்தே வதூ₄நாம் ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top