பஞ்சஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) மட்டும் செய்துகொண்ட ஸ்ரீவைஷ்ணவர்கள், தங்களின் லௌகீக அல்லது ஆன்மீகத் தேவைகளுக்காகப் பெருமாளை ப்ரார்த்தித்தாலும், அவர்கள் பெருமாளையே சார்ந்துள்ளதால் பாகவதர்களே ஆவர் என்று முந்தைய சுதர்சனம் இதழில் படித்து அறிந்தேன். அடியேனின் பெற்றோர், மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் ஸமாஶ்ரயணம் மட்டுமே செய்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் ப்ரபத்தி செய்யாததால் உத்தம பாகவதர்கள் இல்லை என்று நினைத்து, கடந்த பல வருடங்களாக அடியேன் கோபப்படும் போதெல்லாம் அவர்களைப் பலமுறை வாய்மொழியாகத் தூற்றிப் பல பாவங்களைச் செய்துள்ளேன். அவர்கள் சாஸ்திரங்களை அவ்வளவாகப் பின்பற்றாமல் சாதாரண வாழ்க்கையே வாழ்கிறார்கள். இருந்தாலும், அடியேன் செய்தது பெருமாள் மன்னிக்கவே மாட்டாத ‘பாகவத அபசாரம்’ என்பதில் சேருமா?

நீங்கள் வாய்மொழியாகத் தூற்றிச் செய்த பாபங்களை உணர்ந்துவிட்டால், இனி செய்யவேண்டியது ஒன்று இனிமேல் அந்தத் தவறை செய்யாமல் இருக்கவேண்டும். இரண்டாவது இதற்காகப் பெருமாள் ஏதாவது சிக்ஷை கொடுப்பார் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். பெருமாள் மன்னிக்கவே மாட்டாத பாகவத அபசாரத்தில் இது சேராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top