க்ருஹஸ்தர்களுக்கு சாதுர்மாஸ்ய வ்ரதம், ஆஹார நியமப்படி காய்கறிகள், பருப்புகள் மற்றும் தானியங்களிலும் கூட சில குறிப்பிட்ட விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருப்பதாகப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றி சற்று விரிவாக விளக்க முடியுமா? மேலும் இந்த விதிமுறைகள் அப்படியே மஹாளய பக்ஷ காலத்திலும் எவ்வாறு தொடர்கின்றன? இவற்றுடன் நவராத்திரி, புரட்டாசி மாதத்தின் மீதமுள்ள நாட்கள் மற்றும் கார்த்திகை மாதம் ஆகிய காலங்களிலும் இந்த உணவு முறைகளும் கட்டுப்பாடுகளும் எவ்வாறு நீட்டிக்கப்படுகின்றன?

க்ருஹஸ்தர்களுக்கு சாதுர்மாஸ்யத்திலேயோ, மஹாளய பக்ஷத்திலேயோ, நவராத்திரி சமயத்திலேயோ தனிப்பட்ட ஆஹார நியமம் என்று ஒன்று கிடையாது. எப்போதும் இருக்கும் பொதுவான ஆஹார நியமம்தான். க்ருஹஸ்தர்களுக்கென்று தனிப்பட்ட ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. மஹாளய ஶ்ராத்த தினம் என்று ஒன்று வரும் அன்று ஶ்ராத்த தினத்திற்கான நியமங்களுக்குட்பட்டு இருக்கவேண்டும். தினப்படி ஆஹாரத்திற்கு பொதுவான ஆஹார நியமனத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்பதுதான். முந்தைய சுதர்சன கேள்விகளும் பதில்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top