Accaram Anushtanam (ஆசாரம் அநுஷ்டாணம்)

குரோதி – சித்திரை – ஆசாரஅனுஷ்டானம்

தான்தோன்றிமலை பெருமாள், அடியேனுடைய க்ருஹத்துப் பெருமாள் ஆவார். அதனால் அடியேன் திருமலைக்குச் செல்லலாமா , கூடாதா? Vidwan’s reply: திருமலைக்குச் செல்லலாம். செல்வது மிகவும் நல்லது. 1.பஞ்சாங்கத்தில் ஒரு நக்ஷத்திரம் அல்லது திதி ஒரு நாளில் சில நாழிகைகள் இருக்கிறது. (உ.தா: ஸ்வாதி 28.01 அல்லது துவாதசி 15.00) சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாமா? உதாரணமாக”A” என்ற இடத்தில் சூரிய உதயம் காலை 6:30 மணி, “B” …

குரோதி – சித்திரை – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – பங்குனி – ஆசாரஅனுஷ்டானம்

அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா என்றால் என்ன? ஏன் அந்த நாட்களில் நாம் தர்ப்பணம் செய்கிறோம்? Vidwan’s reply: மாக மாசம், பௌர்ணமி திதிக்குப் பிறகு வரக்கூடிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி திதிக்கு அஷ்டகா என்று பெயர். அடுத்த நாள் அன்வஷ்டகா, அதாவது அஷ்டமியைத் தொடர்ந்து வரக்கூடியதால் அன்வஷ்டகா என்று பெயர். மாக மாசம் என்பது பித்ரு மாசமாகும். மக நக்ஷத்திரத்திற்கு, பித்ருகள்தான் தேவதை. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறபடியால் மாக மாசம் என்று பெயர். நம் கணக்குப்படி மாசி மாசம் …

சோபகிருது – பங்குனி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – மாசி – ஆசாரஅனுஷ்டானம்

துவாதிசி, சூரிய உதயத்திற்கு முன் முடிந்து விட்டால் பாரணை எப்போது செய்ய வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்னதாகவா அல்லது சாதாரண துவாதசி போலா? Vidwan’s reply: சூரிய உதயத்திற்கு முன் என்னவானாலும் எந்த ஒரு ஆகாரத்தையும் பண்ணக்கூடாது. அதனால் சூரிய உதயத்திற்கு முன் துவாதசி முடிந்தால் கூட உதயத்திற்குப் பின்தான் பாரணை என்று வரும். அப்பொழுது அந்தத் துவாதசி திதி இல்லாத படியினால் எல்லா பாரணைகளையும் போல் ஒரு ஆறு நாழிகைக்குள் பண்ணால் போதும். உதயத்திற்கு முன் பாரணை …

சோபகிருது – மாசி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – மார்கழி – ஆசாரஅனுஷ்டானம்

ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் ஒருவருக்குத் திருவாராதனம் செய்யும் தகுதி இல்லை என்று உள்ளது. இந்நிலையில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ளும்வரை, ஒருவர் எவ்வாறு தோஷம் இன்றி பெருமாளுக்கு ஆராதனம் செய்யலாம்? Vidwan’s reply: பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் திருவாராதனம் செய்யக்கூடாது. பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்வரை பெருமாளுக்கு ஆராதனம் செய்யமுடியாது. பெருமாளுக்கு நிவேதனம் செய்யலாம். அதுவும் பஞ்சஸம்ஸ்காரம் பண்ணியிருந்தால்தான் செய்யமுடியும் ஏனென்றால் நிவேதனத்தில் வரும் மந்த்ரங்கள் திருவஷ்டாக்ஷர மந்த்ரம் வரும். அது பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் சமயம்தான் உபதேசமாகும். தோஷமில்லாமல் …

சோபகிருது – மார்கழி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – கார்த்திகை – ஆசாரஅனுஷ்டானம்

க்ரஹண காலத்தில் சில நக்ஷத்ரங்களுக்கு ஏற்படும் தோஷத்திற்குப் பரிகாரம்/ஶாந்தி ஹோமம் செய்கிறார்கள். நம் ஸம்ப்ரதாயத்தின்படி அவைகளை எவ்வாறு செய்யவேண்டும்? பெரியவர்களின் வழக்கம் என்ன? Vidwan’s reply: க்ரஹண காலத்தில் நம் நக்ஷத்ரங்களுக்குத் தோஷம் என்று பரிகாரம் செய்யவேண்டி வந்தால் நம் ஸம்ப்ரதாயத்தில் பரிகாரம் என்பது அகத்தில் பெருமாள் நித்யம் ஏற்றும் விளக்கு பக்கத்தில் மற்றொரு விளக்கு ஏற்றி பெருமாளைச் சேவிப்பது என்று வைத்துள்ளோம். வேண்டுமென்றால் க்ரஹணம் முடிந்த பிறகு , இரவு நேரமாக இருந்தால் மறுநாள் கோவிலுக்குச் சென்று …

சோபகிருது – கார்த்திகை – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – ஐப்பசி – ஆசாரஅனுஷ்டானம்

ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர் கோயிலில் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் தரும்போது சாப்பிடலாமா? Vidwan’s reply: ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர், எந்த விதத்திலும் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. சில ஜைன மத நண்பர்கள் திருமலை என்பது ஜைன கோயில் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எம்பெருமானின் திவ்யதேசம் என்று புரிய வைக்க புராணச் சான்றுகள் அல்லது மேற்கோள்களைத் தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: 13 புராணங்களில் திரு வேங்கடமலை மாஹாத்மியம் சொல்லப்பட்டு உள்ளது. (ஒன்றல்ல, இரண்டல்ல) ஆழ்வார் ஆசார்யர்கள், …

சோபகிருது – ஐப்பசி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – புரட்டாசி – ஆசாரஅனுஷ்டானம்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹருக்கு நீராஜனதீபம் தேங்காய் மூடியில் ஏற்றலாமா? Vidwan’s reply: லக்ஷ்மீ ந்ருஸிம்ஹருக்கு நீராஜன தீபம் தேங்காய் மூடியில் சில ஊர்களில் சில ஸம்ப்ரதாயத்தில் வழக்கத்தில் உண்டு. தாங்கள் அவ்வழக்கத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் தாராளமாக ஏற்றாலாம். பாதுகா ஆராதனம் தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன் a. நான் ஒவ்வொரு துவாதசியிலும் பாரணைக்கு முன் பாதுகா ஆராதனை செய்கிறேன். மற்றும் ஆசார்ய திருநக்ஷத்திரத்தில் நைவேத்யமாக பழங்கள் அல்லது கல்கண்டு மட்டுமே அம்ஸிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி …

சோபகிருது – புரட்டாசி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

Krodhi – Chitthirai – Accaram Anushtanam

As Tantondrimalai Perumal is our family deity, can adiyen go to Tirumalai? Vidwan’s reply: You can certainly go to Tirumalai. It is very beneficial. As per the panchangam, at times for a given day, a nakshatra or tithi exists only for a new nazhigai-s; (Example – Swati 28.01 or Dwadasi 15.00). Can we consider, that nakshatra …

Krodhi – Chitthirai – Accaram Anushtanam Read More »

Loading

Shobhakrit – Panguni – Accaram Anushtanam

What are Ashtaka and Anvashtaka? Why do we perform tarpanam on these days? Vidwan’s reply: The Krishna paksha Ashtami that occurs after Paurnami tithi during Maagha maasam, is Ashtaka. The next day is Anvashtaka, which is because it follows Ashtami, it is called Anvashtaka. Maagha maasam is pitru maasam, suitable for departed ancestors. The Pitru-s are …

Shobhakrit – Panguni – Accaram Anushtanam Read More »

Loading

Shobhakrit – Masi – Accaram Anushtanam

If Dwadasi ends before sunrise, when must paranai be done? It is before sunrise or like the usual Dwadasi paranai? Vidwan’s reply: Whatever the occasion, one must not partake food before sunrise. Hence, even when Dwadasi ends before sunrise, paranai must be done only after sunrise. In such instances, when Dwadasi does not exist, unlike the …

Shobhakrit – Masi – Accaram Anushtanam Read More »

Loading

Scroll to Top