ஆசார்யனைச் சேவிக்கும் போதும், பெரியவர்களை சேவிக்கும் போதும், கோவிலுக்குச் செல்லும்போதும் ஸ்த்ரீகள் கண்ணாடி வளையல் அணிந்துகொள்ளலாமா?

நமது ஸம்ப்ரதாயத்தில் ஸ்த்ரீகள் கண்ணாடி வளையல் அணிந்து கொள்ளும் வழக்கம் பொதுவாக இல்லை. பூச்சூட்டல் நடக்கும் சமயத்தில் கண்ணாடி வளையல் அணிவித்து விடுவார்கள். அது ஸம்ப்ரதாயத்தில் இருக்கின்றது. அதனால் பூச்சூட்டல் ஆகி குழந்தை பிறக்கும் வரை கண்ணாடி வளையலுடன்தான் இருக்க வேண்டும். அதைக் கழட்டக்கூடாது. அந்தச் சமயங்களில் ஆசார்யனையோ அல்லது பெரியோர்களையோ சேவிக்க நேர்ந்தால் வளையலுடன் சேவிக்கலாம். மற்றச் சமயங்களில் கண்ணாடி வளையல் போட்டுக் கொள்வது என்பது நம் ஸம்ப்ரதாயத்தில் கிடையாது. கன்யாபெண்கள் போட்டுக் கொள்வதில் தவறில்லை. கல்யாணம் ஆன ஸ்த்ரீகள் பூச்சூட்டல் சமயத்தைத் தவிர வேறு சமயங்களில் போட்டுக் கொள்வது பொதுவாகக் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top