பரந்யாஸம் செய்து கொள்ளும் பொழுது ப்ரபத்தி பற்றி சிறிதேனும் தெரிந்திருக்க வேண்டும் என்று காலக்ஷேபத்தில் அடியேன் கேள்விப்பட்டு இருக்கிறேன். ப்ரபத்தி முதலானவைப் பற்றி அறிவு ஒன்றுமே இல்லாவிட்டாலும் நாம் செய்யும் பரந்யாஸத்தைப் பெருமாள் ஏற்றுக்கொள்வாரா?

ப்ரபத்தி முதலானவை பற்றி அறிவு ஒன்றுமே இல்லாவிட்டாலும் கூட, அவர்களுக்காக ஞானம் பெற்ற ஆசார்யர்கள் ப்ரபத்தி செய்வார்கள் அது பலனளிக்கும்.
குறிப்பு:
பரந்யாஸம் என்பது ஒருவருக்காக மற்றொருவர் செய்யலாம் என்றிருக்கிறது. குறிப்பாக சிஷ்யனுக்காக ஆசார்யர் செய்வார். குழந்தைகளுக்கும் ஆசார்யர் செய்து வைப்பார். அந்த ரீதியில் குழந்தைகளுக்காக அறிவொன்றுமில்லாவிட்டாலும் ஆசார்யன் செய்துவைப்பார். அதாவது தெரியாதவருக்காகத் தெரிந்தவர் செய்து வைப்பார். அப்படி அவர் செய்யும் பரந்யாஸத்தைப் பெருமாள் ஏற்றுக்கொள்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top