குழந்தைகளுக்கும் நாம் முடிந்தவரை இதர தேவதாந்த்ர ப்ரசாதங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஓரளவு லௌகீக பாதகங்கள் இருந்தால், அது வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ரொம்ப கண்டிப்பாக இருந்து விரோதம் வந்தால் அதுவும் சங்கடம் ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கும் பிற தேவதைகளின் ப்ரசாதத்தைக் கொடுக்கக்கூடாது என்றுதான் ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. ஆகையால் இதர லௌகீக சங்கடங்கள் ஏற்படாத வண்ணம் உசிதமாக பார்த்து சூதகமாக எப்படிச் செய்யவேண்டுமோ அப்படிச் செய்யவேண்டும்.

