யக்ஞம் ஸ்வாமி மற்றும் இதர வித்வான்களின் உபந்யாசங்களைக் கேட்டு நாங்கள் முடிந்தவரை ஆகார நியமத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். இதர தேவதாந்தரங்களைக் கொண்டாடும் உறவினர்கள் வீட்டில் உணவு அருந்துவதில்லை. ஆனால் குழந்தைகள் இருப்பதால் அவர்கள் ஸ்ரீஜயந்தி பக்ஷணங்கள் கொடுத்தால் அதனைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? குழந்தைகளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டா ?

குழந்தைகளுக்கும் நாம் முடிந்தவரை இதர தேவதாந்த்ர ப்ரசாதங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஓரளவு லௌகீக பாதகங்கள் இருந்தால், அது வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ரொம்ப கண்டிப்பாக இருந்து விரோதம் வந்தால் அதுவும் சங்கடம் ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கும் பிற தேவதைகளின் ப்ரசாதத்தைக் கொடுக்கக்கூடாது என்றுதான் ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. ஆகையால் இதர லௌகீக சங்கடங்கள் ஏற்படாத வண்ணம் உசிதமாக பார்த்து சூதகமாக எப்படிச் செய்யவேண்டுமோ அப்படிச் செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top