1. ஸந்த்யா வந்தனத்தின் போது நாம் ஏன் உடல் மற்றும் முகத்தின் பகுதிகளைத் தொடுகிறோம் ? 2.ஸந்த்யாவந்தனத்தின் பொழுது ப்ராணாயாமம் செய்ய வேண்டிய முறையை விளக்கவும். எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும், வெளியே விட வேண்டும் , மற்றும் மூச்சை அடக்கி கொண்டிருக்கும் பொழுது ப்ராணாயாம மந்திரத்தை எவ்வாறு சொல்வது ? 3. நாம் ஏன் நெற்றி மூக்கு மற்றும் மார்பை தொடுகிறோம் ? 4. உபநயனம் ஆன பிறகு ஸந்த்யாவந்தனம் செய்வதற்கு பயிற்சியாக நாம் உபநயனம் ஆகாத குழந்தைகளுக்கு ஸந்த்யாவந்தனத்தின் எந்தப் பகுதிகளைக் கற்றுக் கொடுக்கலாம் ?

1.ஸந்த்யா வந்தனத்தில் ஆசமனம் செய்யும்போது இந்தயிந்த அங்கங்களைத் தொடவேண்டும் என்று விதித்திருக்கிறபடியால் அப்படிப் பண்ணுகிறோம்.
2.ப்ராணாயமம் செய்யும்போது மந்திரத்தை உபாம்சுவாக அதாவது மனதிலேயே த்யானமாகச் செய்யவேண்டும். வாய்விட்டுச் சொன்னால் காற்று வெளியே போகும். மூச்சை அடக்குவதுதான் ப்ராணாயாமம் (ப்ராண+யமனம்) என்பது. எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்ளவுதான் பண்ணவேண்டும். மூச்சை அடக்கி சொல்லிவிட்டு மூச்சை வெளியேவிடவேண்டும். ஆரம்ப காலத்தில் பிள்ளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் போது வாய்விட்டுதான் சொல்லவேண்டும். மந்திரம் மனப்பாடம் ஆனபின் மூச்சை அடக்கி மனதால் சொல்லவேண்டும்.
3.சிரசி முகே ஹ்ருதயே ச ந்யஸ்ய என்று சிரசிலும், முகத்திலும், ஹ்ருதயத்திலும் ந்யாஸம் பண்ணவேண்டும். சிரசு எனது உச்சம் தலை, நெற்றிக்கு மேல் பாகம் முகத்தைத் தொடுவதென்றால் உதட்டைத் தொடக்கூடாது, வாய்கிட்ட வைத்துக்கொண்டுதான் சொல்லவேண்டும். ஹ்ருதயத்தைத் தொட்டுதான் சொல்லவேண்டும். இதுவும் விதித்திருப்பதால் பண்ணுகிறோம்.
4.உபநயனம் ஆனபின் சந்தியா வந்தனம் சொல்லிக்கொடுப்பதுதான் உசிதம். மந்த்ரங்களைச் சொல்லித்தர முடியாது ஆகையால் ஆனபின்னர் சொல்லிக்கொடுப்பதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top