1. அடியேனுடைய இளைய சகோதரனின் ஊன மாசிகம் மற்றும் ஶ்ராத்தங்களில் அடியேனுடைய தாயாரும், அடியேனும் பித்ரு சேஷத்தை ஸ்வீகரிக்கலாமா ? 2. ஸ்வீகாரமாக இன்னொரு குடும்பத்திற்கு தத்துக் கொடுக்கப்பட்ட பிறகு, தன்னை பெற்ற தாயாருக்கு அந்த மகன் அந்திம கார்யங்கள் செய்யலாமா ?

1.இது அவரவர் மனதைப் பொருத்தது. நம் பித்ருக்களும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதால் சாப்பிடலாம் என்று சிலரின் அபிப்ராயம். சிலர் சின்னவர்கள் என்பதால் சாப்பிடக்கூடாது என்று அபிப்ராயம். இரண்டு விதமாக அபிப்ராயம் இருப்பதினால் இளய சகோதரனின் பித்ரு சேஷத்தில் சாப்பிடவில்லையென்றாலும் தவறில்லை. சாபிட்டாலும் தவறில்லை.
2.ஸ்வீகாரம் போன பிறகு பெற்ற தாயாருக்குக் கைங்கர்யம் பண்ண தத்து கொடுத்த பிள்ளை தவிர வேறு பிள்ளையில்லையென்றால், தத்து கொடுத்த பையன் பண்ண வேண்டிவரும். முதல் நாள் பண்ணவேண்டிய கார்யங்களுக்கு யார்யார் கர்த்தா என்று தர்ம ஶாஸ்த்ரத்தில் இருக்கிறது. இதர புத்திரர்களோ, பேரனோ இல்லையென்றால் தத்துகொடுத்த பையன் பண்ணவேண்டி வரும் ஆனால் அவனுக்கு முதல் அதிகாரம் கிடையாது, இரண்டாம் பக்ஷம்தான். யார் என்று க்ரமத்தைப் பார்த்தால்தான் சொல்லமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top