1. சில மாத்வ மற்றும் ஸ்மார்த்த சம்ப்ரதாயத்தவர்கள் உணவு உண்ணும் பொழுது சித்ரவதியாக (எமன் மற்றும் சித்திரகுப்தனுக்காக) ஒரு சிறு பகுதியை தனியாக எடுத்து வைக்கிறார்கள். இதை நாம் ஏன் கடைப்பிடிப்பதில்லை ? இதற்கு ஏதேனும் ப்ரமாணங்கள் உண்டா ? 2. இந்த வருடம் போகிப்பண்டிகை ஏகாதசி அன்று வருகிறது. அதனால் நாம் அன்று ஏகாதசி அனுஷ்டானம் இருக்க வேண்டுமா அல்லது சர்க்கரைப் பொங்கல், போளி முதலியவற்றை சாப்பிடலாமா ?

1.பொதுவாக சாப்பிட்ட பிறகு இலையை பூர்த்தியாக வழித்துச் சாபிடாமல் சிறிதளவு மிச்சம் வைப்பதென்பது சிலரின் ஸம்ப்ரதாயமாக இருக்கிறது. சித்திரகுப்தன், யமனுக்கு வைப்பதென்பதெல்லாம் இல்லை. மேலும் ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வழக்கமும் இல்லை. பண்ணுவதற்குதான் ப்ரமாணம் இருக்கும். பண்ணாதத்திற்கு ப்ரமாணம் எங்கேயும் இருக்காது.
2.போகிப்பண்டிகை அன்று ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிப்பவர்கள் ஏகாதசி வ்ரதம் இருக்கலாம். அது இருக்காதவர்கள் அன்று சொஜ்ஜி பண்ணி, பண்டிகைத் தளிகை பண்ணி, போளி பண்ணிக்கூட சாப்பிடலாம். சக்கரைப் பொங்கலுக்கு அன்று ப்ரஸக்தியே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top