பெண்கள் ரஜஸ்வலை சமயத்தில் பெருமாளுக்கு அமுது செய்த உணவை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது தனியாக உணவு சமைத்துச் சாப்பிட வேண்டுமா?

ரஜஸ்வலா காலத்தில் பெருமாளுக்கு அம்ஸை பண்ணப் பட்ட பதார்த்தங்களை ரஜஸ்வலைக்கு போடலாம். ஆனால் அகத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின் அதை அவளுக்குக் கொடுக்க வேண்டும். அவளுக்கு போட்ட பின் ஏதாவது மிச்சம் இருந்தது என்றால் அதை மற்றவர்கள் சாப்பிடக்கூடாது. அது சேஷமாகி விடும் அதனால் அதை மற்றவர்களுக்கு போடக்கூடாது. மேலும் அந்தப் பாத்திரத்தையும், அந்த இடத்தையும் நன்றாக சுத்தப் படுத்தி விட்டு மேற்கொண்டு காரியங்களைப் பார்க்கலாம். அதனால் அவளுக்கு மிச்சம் வைக்காமல் போடலாம், அல்லது மீந்து விட்டது என்றால் அதை அவளுக்கே இரவு மீண்டும் போடலாம். அவளுக்குத் தனியாக பண்ணி போட வேண்டும் என்ற அவசியமில்லை. இரவு எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை, கார்த்தால பதார்தத்தில் அல்லாது சேஷமான மிச்சம் இருந்தால் அவளுக்கே போடலாம். அப்படிச் சௌகரியமாக காரியத்தை முடித்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top