ஸ்திரீகளுக்கு நேரடியாக ஆராதனம் பண்ணுகின்ற தகுதி கிடையாது. பாதுகைகளைச் சுத்தப் படுத்துவதற்குத் தொடலாம். திருவாராதனத்திற்கு வேண்டிய ஒத்தாசைகள் எல்லாம் தாராளமாகப் பண்ணலாம். அப்படிச் செய்தாலே திருவாராதனம் பண்ணிய பலன் அவர்களுக்கு கிடைத்துவிடும். பாதுகா ஆராதனத்திற்கு தேவையான ஜலத்தைக் கொண்டு வந்து, அந்த இடத்தை சுத்தப் படுத்தி, கோலம் போட்டு, பாதுகைகளை நன்றாக சுத்தப் படுத்தி, அதற்கு அம்ஸை பண்ண வேண்டிய பொருட்களெல்லாம் எடுத்து வைத்து, புஷ்பங்கள் எடுத்து வைத்து, இவை எல்லாம் பண்ணலாம். நேரடியாக திருவாராதனம் பண்ணுவது கிடையாது.

