கோரக்பூர் புத்தகத்தில் யுத்த காண்டத்தில் 22வது ஸர்கத்தில் சேது பந்தன வர்ணனை இருக்கிறது. மேலும் இந்தக் கேள்வியில் கேட்கப்பட்டிருக்கும் 25 ஸர்கத்தில் 27வது ஶ்லோகமானது “ஆகம்ய நகரீம் லங்காம்” என்று இலங்கைக்குள் பெருமாளும் வானரர்களும் ப்ரவேசம் செய்ததைப் பற்றி இருக்கிறது.ஆகையால் கொடுத்துள்ள ஸர்கம் எண்ணைச் சரி பார்க்கவும்.
விபீஷணன் ஸமுத்ர ராஜனை சரணடையலாம் என்று யோசனை சொல்ல,அதன் படி ப்ராயோப்ரவேசமாய் இராம்பிரானும் ஸமுத்ர ராஜனைச் சரணடைந்தார். இதைக் கண்ட ஸமுத்ர ராஜன், ஸர்வேஶ்வரனான எம்பெருமான் முன், அதாவது அவர் சரணாகதி செய்திருக்கிறார் அதற்காக தாம் அவர் முன் எப்படிப்போய் நிற்பது என்று பயந்து வராமல் இருந்தார். அவர் வராததைக் கண்ட இராமபிரான் வில்லையும் அம்பையும் எடுத்துவர லக்ஷ்மணனைப் பணிக்க, வில்லின் அம்பு பூட்டி ஸமுத்ரத்தில் மேல் தொடுக்கும் சமயத்தில்,எம்பெருமானிடம் ஸமுத்ரராஜன் சரணடைந்தார். மேலும் இராமர் பூட்டிய அம்பை ஸமுத்ர ராஜன் தன் எதிரிகள் மேல் தொடுக்கும்படி வேண்ட பெருமானும் அவ்வாறே செய்தார்.
இதற்கு மேல் தன் மீது பாலம் கட்ட ஸமுத்ரராஜன் கூற, நளசேதுவை இராமபிரான் நிர்மாணித்தார். சேதுபந்தனம் பண்ணலாம் என்று சொல்லிய பின் சேதுபந்தனம் செய்யப்பட்டது, அதற்குப் பின் யாரும் பயப்படவுமில்லை. இங்கே பயந்தது ஸமுத்ர ராஜன் மட்டும்தான். ஒன்று எம்பெருமான் முன் வந்து நிற்பதற்கும், தன் மேல் இராமபாணம் பட்டுவிடுமோ என்றும் அஞ்சினான். இராமபிரான் எந்தச் சமயத்திலும் பயப்படவில்லை.
குறிப்பு:
தாங்கள் கேட்ட கேள்வியில் தெளிவுயில்லாத படியால், இராமாயணத்தில் சேதுபந்தன வர்ணனை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம்.

